ராம ஜய ராம ஜய ராம ஜய ராம

நாளை ஸ்ரீராம நவமி. தீயவனான ராவணனை கைவிட்டு, தர்மத்தின் வடிவமான ஸ்ரீராமரை விபீஷணன் சரணடைந்தான். தன்னை வந்து அடைக்கலம் புகுந்த விபீஷணனை, ராமர் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றி, இலங்கைச் செல்வத்தையும் கொடுத்தார். நாமும்
‘आपदां अपहर्तारं दातारं सर्वसंपदाम् ।
लॊकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् ॥
ஆபதா3ம் அபஹர்தாரம் தா3தாரம் ஸர்வஸம்பதா3ம் |
லோகாபி4ராமம் ஸ்ரீராமம் பூ4யோ பூ4யோ நமாம்யஹம் || என்ற ஸ்லோகத்தை சொல்லி ஸ்ரீராமரை சரணடைவோம். ராமர் நம்மையும் எல்லா ஆபத்துகளிலிருந்தும் காத்து, உயரிய செல்வங்களை அருள்வார்.

சூர்ய  குலத்தில் அரசனாக அவதரித்த ஸ்ரீராமர், சத்யத்தையும் தர்மத்தையும், விரதமாகவும் தனமாகவும் கொண்டு, ராம ராஜ்யத்தை நிலை நாட்டினார். நம்மிடையே துறவி வேந்தராக அவதரித்த மஹாபெரியவாளும், அதே போல சத்யத்தையும் தர்மத்தையும் கடைபிடித்து, வேத மதத்திற்கு புத்துயிர் ஊட்டினார். ஸ்ரீராமர் அவதரித்த இந்த நன்னாளில் அவரை பூஜித்து, மஹாபெரியவா காட்டிய வழியில் வேத மத தர்மங்களை பின்பற்றுவோம்.

ஸ்ரீராம அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு; Sri rama ashtothara naamaavali audio

ஸ்ரீராம நவமி அன்று வால்மீகி ராமாயணத்திலிருந்து ஸ்ரீராம ஜனன கட்டத்தை கேட்பது விசேஷம் – ஸ்ரீ ராம ஜனனம் ஒலிப்பதிவு ‘Sri Rama Jananam slokams’ from Valmiki Ramayana – text and audio in mp3 

வால்மீகி ராமாயணம் யுத்தகாண்டத்தில் 59வது ஸர்கமான ‘ராம ராவண பிரதம யுத்தத்தை’  கேட்டால் கோரமான வியாதிகளிலிருந்து விடுபடுவோம் என்று உமா சம்ஹிதை என்ற நூலின் கூறப்பட்டுள்ளது. விறுவிறுப்பான காட்சிகள் நிறைந்த ரஸமான அந்த ஸர்கத்தின் வர்ணனையை இங்கு கேட்கலாம். – இன்று போய் நாளை வா


ராம நாமத்தை மகான்கள் பல விதத்தில் ஜபித்து ஸித்தி அடைந்து இருக்கிறார்கள். ஸமர்த்த ராமதாசர் ‘ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம’ என்று பதிமூன்று கோடி ஜபித்து ராம தர்சனம் பெற்றார். தியாகராஜ ஸ்வாமிகள் ‘ராம ராம, ராம ராம ராம’ என்று 96 கோடி ஜபித்து ராம தர்சனம் பெற்றார். க்ருஷண சைதன்யர் ‘ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே | ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ||’ என்ற மஹாமந்த்ரத்தை ஜபித்து கிருஷ்ண தர்சனம் பெற்றார். ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ‘ராம ஜய ராம ஜய ராம ஜய ராம’ என்று கணக்கின்றி ஜபித்து மஹாபெரியவா அனுக்ரஹம் பெற்றார். தினம் ஒரு மணி நேரம் ‘ராம ஜய ராம ஜய ராம ஜய ராம’ என்று ஜபமாலையை கொண்டு ஜபிப்பார். பிறகு மற்ற பாராயணங்கள் செய்தது போக, எல்லா நேரத்திலும் இந்த நாமத்தையே ஜபித்து கொண்டிருப்பார். வாழ்வில் எத்தனையோ பாராயணங்கள் ஜபங்கள் செய்திருந்தாலும், இந்த ராம நாம ஜபத்தை எல்லாவற்றுக்கும் மேலாக கருதினார். ராம நாம ஜபத்தால் எல்லா தெய்வங்களும் மகிழ்ந்து அருள் புரிவார்கள் என்றும் ‘ரா’ என்பது மூலாதாரம் ‘ம’ என்பது சஹஸ்ராரம், ராம நாம ஜபமே குண்டலினி யோகம் என்றும் சொல்வார். இறுதியில் எப்போதும் இந்த ஜபமே செய்து வந்தார்.

अमॊघं दर्शनं राम न च मॊघस्तव स्तव: ।
अमॊघास्तॆ भविष्यन्ति भक्तिमन्तस्च यॆ नरा: ॥

அமோக4ம் தர்சனம் ராம ந ச மோக4ஸ்தவஸ்தவஹ |
அமோகா4ஸ்தே ப4விஷ்யந்தி ப4க்திமந்தஸ்ச யே நரா: ||

ராம தர்சனம், ராம கதா ஸ்ரவணம், ராம நாம ஜபம், வீண்போகாது. குறைகளைப் போக்கும்.Categories: Devotee Experiences

7 replies

 1. Ram ram ram ram ram. Exceptional

 2. Can anyone translate this to english

 3. ஸ்ரீ ராமபிரானை மஹான்கள் எத்தனையோ விதத்தில் அனுபவித்திருக்கிறார்கள்.
  நமது ஸத்குரு ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் ஸ்ரீ ராம நாமத்தின் பெருமையை இரண்டு கீர்த்தனங்களில் வியந்து பாடியிருக்கிறார்.

  1.பேரிதி நின்னு பெஞ்சினவாரெவரே
  வாரினி ஜூபவே ஸ்ரீ ராமய்யா [ கரஹரப்ரியா]

  அப்பனே ராமா, உனக்கு இந்தப் பெயர்வைத்து இப்படி அழைத்தவர் யார்? அவரை எனக்குக் காட்டு.
  இந்தப் பெயரில் அப்ப்டி என்ன விசேஷம்?

  -ஸார ஸார தர தாரக நாமமுனு
  = எல்லாவற்றிலும் உயந்ததும், ரசமானதுமான தாரக நாமம் இது.
  -ஸர்வமதமுலகு ஸம்மத மைன
  = (வைதிக மதத்தின்) எல்லாப் பிரிவினருக்கும் சம்மதமான நாமம்.
  -கோர பாதகமுல கொப்புன யணசு
  = கொடிய பாதகங்களை அடியுடன் அழிப்பது.

  சரி, சர்வ மதத்திரனருக்கும் சம்மதம் என்பது எப்படி? இதை இன்னொரு கீர்த்தனத்தில் சொல்கிறார்.

  எவரனி நிர்ணயிஞ்சிரிரா
  நின்ன எட்ல ஆராதிஞ்சிரிரா நரவரு [தேவாம்ருத வர்ஷிணி]

  உயர்ந்த மக்கள் உன்னை எவரென்று நிர்ணயித்தனர்?
  உன்னை எவ்வாறு ஆராதனை செய்தனர்?

  சிவுடனோ மாதவுடனோ
  கமல பவுடனோ பரப்ரஹ்மமனோ

  சிவன் என்றா, விஷ்ணு என்றா, ப்ரஹ்மா என்றா, பரப்ரஹ்மம் என்றா- , எப்படி நிர்ணயித்தனர் பெரியோர்கள்?

  சிவ மன்த்ரமுனகு மாஜீவமு
  மாதவ மன்த்ரமுனகு ரா ஜீவமு
  ஈ விவரமு தெலிசின கனுலகு ம்ரொக்கெத

  சிவ மந்திரமாகிய “நமஶிவாய” என்பதில் “ம” என்ற எழுத்தே உயிராகும்
  விஷ்ணு மந்திரமாகிய “ஓம் நமோ நாராயணாய” என்பதில் “ரா” எழுத்தே உயிராகும்.
  இவ்விவரங்களை அறிந்த பெரியோர்களுக்கு என் நமஸ்காரம்.

  இதனால் ஸ்ரீ ராம நாமத்தின் மஹிமை தெரியவருகிறது. இத்தகைய சூக்ஷ்மங்களை நாம் குரு வழியாகத்தானே தெரிந்துகொள்கிறோம்? அதுதான் ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் சத்குரு ஆனார்.
  குருலேக எடுவன்டி குணிகி தெலியக போது!

 4. ஜெய் ஸ்ரீ ராம்

 5. Thank you Sir !

  Om Sri Ram Jai Ram Jai Jai Ram.

  • ஸ்ரீராம ஜபத்தின் உயர்வை சொள்ளவும்ன்வேண்டுமோ? மிக எளிய மார்க்கம் முக்தியடைய! ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் இந்த நாமத்தையே ஸதா ஜபித்து வந்தார்! திருவையாறில் அவர் வீட்டில் சுவற்றில் ஒரு சித்திரம் இருக்கிறது. ஸ்வாமிகள் மெய்மறந்து ராம நாமாவைப் பாடும்போது ராம லட்சுமணர் சீதையுடன் அவர் எதிரில் காட்சி கொடுப்பதாக! சுவாமிகளின் மனைவி சமையல் அரையி தரிசிப்பதாக!
   பக்த ராமதாஸ் சுவாமிகள் சிறையில் ராம ஜபம் செய்யும்போது, அவரை சிறையிலிருந்து விடுவிக்க பொற்காசுகள் கொண்டு வந்து நவாப் அந்தப்புரத்தில் கொடுப்பதாக! துக்கிரிப்பாட்டி என்று அழைக்கப்பட்ட பாட்டி ஸதா ராம ஜபம் செய்ததால் பெரியவா யாருக்காவது உடல் நலம் சரியில்லாமல் இருந்தால் அவளைக் கொண்டு விபூதி பூசசொல்வார் .இது நம்.காலத்தில் நடந்தது! மேன்மை கொண்ட ஜபத்தை நாமும் ஜபிக்கலாம் அல்லவா?
   ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்

Leave a Reply

%d