
Photo credit – Artist Keshav
மஹாபெரியவா மூகபஞ்சசதீ ஸ்தோத்திரத்திற்கு ஒரு அற்புதமான ஸ்ரீமுகம் அளித்துள்ளார்கள் – மூகபஞ்சசதீ மஹாபெரியவா ஸ்ரீமுகம் தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் (audio and transcript)
அதில் ‘உலகத்திலே மிகச் சிறந்ததாக விளங்கும் இந்த ஸ்துதி நூலை படிப்பதால் மட்டுமே, அந்த க்ஷணத்திலேயே இந்த மஹாகவியோடும், இறுதியிலே பரதேவதையோடுமே ஒன்றாகும் நிலையை ஸாதகன் அடைகின்றான்’ என்று சொல்கிறார்கள். அப்படி ஸ்தோத்திரங்களை படிக்கும்போது மூககவியாகவும், நாராயண பட்டத்திரியாகவும், வால்மீகி மஹரிஷியாகவும், சுகபிரம்மமாகவும் ஆகி, மனம் ஒன்றிப் படித்து, இறுதியில் பகவானோடு கலந்த ஒரு மஹான் – கோவிந்த தாமோதர ஸ்வாமிகள். நாளை மாசி பூரட்டாதி, அவருடைய ஜயந்தி தினம் (25-2-2020 in India, 24-2-2020 in the US)
ஸ்வாமிகள் அவதரித்து இன்றோடு 90 வருடங்கள் ஆகியுள்ளன. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்ற வள்ளுவர் வாக்கிற்கேற்ப, இல்லற வாழ்விலேயே இறைவனை காண முடியும் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர்.
பிரம்மஸ்ரீ ஸுந்தர்குமார் அவர்கள் ஸ்வாமிகள் பேரில் ஒரு அஷ்டோத்தர சத நாமாவளி இயற்றியுள்ளார்கள். ஸ்ரீ ஸ்வாமிகளின் உத்தம குணங்களையும், கொள்கைகளையும் விவரிக்கும் ஒவ்வொரு நாமாவளியும் ஒவ்வொரு ரத்னமாக அமைந்துள்ளது. அதன் இணைப்பு இங்கே – கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அஷ்டோத்தரம்
ஸ்வாமிகள் மஹாபெரியவாளையே, குருவாயூரப்பன் ஆகவும், காமாக்ஷியாகவும், ராமராகவும், பரமேஸ்வரனாகவும், அனுபவித்து, என்னிடம் பகிர்ந்த விஷயங்களையும், ராமாயண பாகவதத்தை அவர் வாழ்ந்து காட்டியதையும், என் மழலை மொழியில் உங்களோடு பகிர்ந்து வருகிறேன். அது அநேகம் பேருக்கு சந்தோஷத்தையும், ஆறுதலையும், நம்பிக்கையையும் கொடுப்பதை பார்க்கிறேன். ஸ்வாமிகளுடைய பிறந்த நாள் அன்று, அவர் எனக்கு ஒரு பரிசளித்துள்ளார் 😊. அதன் விவரம் இங்கே http://valmikiramayanam.in/?p=6962
Categories: Uncategorized
Namasthe,
English translation please
How very much blessed you are Ganapathy Subramanian to be associated with Swamigal & having His upadesam + blessings ! கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக என்ற குறளின் படி கசடறக் கற்று பிறருக்கு எளிதில் புரிகிறார் போல் எடுத்துரைக்கும் தங்களுக்கு சுவாமிகளின் பூர்ண ஆசிகள் !
Thank you 🙏
அம்ப கேபி தவ க்ருபயா , ஸத்க்ருத தேசிக சரணா: 🙏🙏🙏🙏