4 replies

  1. those who want to share my article, please use this attachment.

    i have made a few changes.

  2. pranams.

    please post my article in your respective social media sites.

    regards.

    suparna

  3. GREAT PHILOSOPHY INDEED we should try to put into practice

  4. *ரா. கணபதி நினைவு தினம்*

    *’Creepers of Compassion’* *- **நூல் வெளியீடு*

    காஞ்சி மகாபெரியவாளின் ‘தெய்வத்தின் குரல்’ தொகுதிகளைத் தொகுத்தவர் ‘அண்ணா’ என்று
    எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு. ரா. கணபதி.

    ‘காமகோடி ராமகோடி’, ‘காமாக்ஷி கடாக்ஷி’, ‘அம்மா’, ‘காற்றினிலே வரும்
    கீதம்,’ ‘அறிவுக்
    கனலே அருட்புனலே’, ‘நவராத்திரி நாயகி’, ‘அன்பு வேணுமா அன்பு’, ‘சுவாமி
    விவேகானந்தர்’ முதலிய ஏராளமான பக்தி நூல்களைப் படைத்தவரும் இவரே.

    அண்ணா அமரரான தினம் சிவராத்திரி என்பதை நாம் அறிவோம். இதையொட்டி, வரும்
    பிப்ரவரி 17, 2015, செவ்வாய்க்கிழமை சிவராத்திரியன்று மாலை 6.00 மணி முதல்
    8.30 வரை மயிலாப்பூர் ராணடே நூலக அரங்கில் அண்ணாவின் நினைவு தினம் அனுசரிக்க
    ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ரா. கணபதியின் மீது ஆர்வம் கொண்ட ஒருசிலர் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம்
    என்றாலும், இதில் ஆன்மிக அன்பர்கள் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெற வேண்டும்
    என்பதே எங்கள் நோக்கம். எனவே, இந்த நிகழ்ச்சியில் ஆர்வமுள்ள அனைவரும்
    பங்குபெறலாம். அண்ணாவைப் பற்றிய தங்கள் அனுபவங்களையும் பிறருடன்
    பகிர்ந்துகொள்ளலாம்.

    மேலும், இந்நிகழ்ச்சியின்போது ‘Creepers of Compassion’ என்ற நூல் வெளியீடு
    நடைபெறும்.

    (ஸ்த்ரீ தர்மத்தைப் பற்றி மகா பெரியவா கூறிய கருத்துக்களை அண்ணா ‘பெண்மை
    என்பதைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற நூல் வடிவில் தொகுத்துள்ளார். அதன் ஆங்கில
    மொழிபெயர்ப்பே ‘Creepers of Compassion’. சிட்டி பெ.கோ. சுந்தரராஜனின்
    புதல்வர் திரு. விஸ்வேஸ்வரன் செய்த ஆங்கில மொழியாக்கம் இது.)

    நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

    அன்புடன்,

    வேதா T. ஸ்ரீதரன்

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading