Kanchi Sri Mahaswamy Bikshavandana Trust at Thapovanam in Govindapuram!

Thapovanam1 Thapovanam2 Thapovanam3 Thapovanam4 Thapovanam5 Thapovanam6

 

ஸ்ரீ குருப்யோ நம:

ஸதாஸிவ ஸமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம் |
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் ||

முகனூலின் பெரியவா த்யான மண்டபங்களில் உள்ள பற்பல பெரியவா குடும்ப உறவுகளின் வேண்டுதலுக்கிணங்க கோவிந்தபுரம் ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள் தபோவனம் பற்றிய இந்தப் பதிவுதனைப் பகிர்கிறேன்.

இதில் தபோவனம் பற்றிய விவரங்களையும், அங்கு நம் குருபரம்பரைக்கு நடைபெறும் நித்ய பூஜையிலும், பிக்ஷாவந்தனத்திலும் அனைவரும் கலந்து கொள்ள தேவையான விவரங்களையும் பகிர்கின்றேன்.

ஒவ்வொரு பக்தர்களும் பிரதி வருடம் நம் குருமஹாரத்தினங்களுக்கு நித்ய பூஜைய்லும், பிக்ஷாவந்தனத்திலும் கலந்துகொண்டு அவர்கள்தம் பேரருளில் பெருவாழ்வு வாழ ப்ரார்த்தனை செய்கிறேன்.

” மாதா பிதாகொண்டே பிறப்பிதனைப் பெற்றிடினும்
நோகா நிலைகொள்ள ஆச்சார்யன் அருள்பெற்றே
வாடா மருவினைபோல் வாழ்விதனில் இன்பயக்க
நாடா திருப்போமோ சங்கரர்தம் திருப்பாதம்! “

வேதங்களும் சாஸ்திரங்களும் குரு மூலமாகவே ஈஸ்வரனையும், ப்ரம்மத்தையும் அடைவதற்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கின்றன. கண்களுக்குத் தெரியாத ஈஸ்வரனை கண்களுக்குத் தெரிகின்ற குரு மூலமாக மிகவும் சுலபமாக அடைய முடியும். குரு என்கிறவர் ஈஸ்வரனே தான். ஈஸ்வரன் தான் குருவாய் அவதரித்து மக்களை நல்வழிப்படுத்தி ப்ரம்மத்திடம் சேர்க்குமாறு செய்கிறார்.

கலியின் கோலாஹலத்தால் ஒற்றுமை அழிந்து வேற்றுமை வளர்ந்த காலக்கட்டத்தில் பரமேஸ்வரன் ஆதிசங்கரராக காலடியில் அவதரித்து, பேதம் மறைய, அன்பு வளர, பரமசத்தியமான வேதம் சொன்ன அத்வைத ஸித்தாந்தத்தை உபதேசித்து, மாயாமோஹத்தில் மயங்கிய மதியை தெளிவுபடுத்தி அனைவரும் இம்மை, மருமை பயனை அடையுமாறு அருளிச் செய்தார். மக்களை நல்வழி நடத்திச் செல்ல ஆங்காங்கே சங்கரமடங்களை நிறுவி இறுதியில் காஞ்சியில் காமகோடி பீடத்தை ஸ்தாபிதம் செய்து, ஸர்வக்ஞபீடம் ஏறி நிற்குணபரப்ரம்மத்தில் ஐக்கியமானார் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

பின்பு ஸ்ரீ ஆதிசங்கர பரம்பராகத ஸர்வக்ஞபீட மூலாம்னாய ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை பல குருமணிகள் அலங்கரித்து – லோகத்துக்கு நல்வழி காட்டி ஞானம் புகட்டி வருகிறார்கள். இது 2500 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருவது என்பதை ஸாதுக்கள் முதல் சாமான்ய மக்கள் அனைவரும் அறிந்த / உணர்ந்த உண்மை. இந்த குரு மண்டல வரிசையில் 68-வது ஆச்சார்யராக தம் 13-ம் பிராயத்திலேயே பீடப் பொறுப்பேற்று, வேத சாஸ்திர மார்க்கத்திற்கு புத்துயிர் ஊட்டி, அறியாமை இருளகற்றி, கால் நடையாகவே முலைமுடுக்கிளுள்ள குக்கிராமங்களுக்கும் சென்று – ஜாதி, மத, சமய பேதமின்றி எல்லா தரப்பினரையும் தம் அன்பின் வசப்படுத்தி கருணையால் ஆட்கொண்ட கண்கண்ட தெய்வம் நம் காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆவார்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த குருமார்களில் சிலருக்கு மட்டுமே அதிஷ்டானம் அமைக்கப்பட்டு, நித்யபடி பூஜை, ஆராதனைகள் நடபெற்று வருகின்றது. ஆகையால் எல்லா குருமார்களையும் ஓரிடத்திலேயே பிரதிஷ்டை செய்து நித்ய பூஜை / அபிஷேகம் / அராதனைகள் நடைபெற ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்மாமிகள் ஜீவிதமாக இருந்தபோதே இசைந்துள்ளார்கள்.

காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகள், தாம் சூக்ஷமமாக இருந்து நம் எல்லோருக்கும் அருள்பாலிக்க மிகவும் புனிதமான மத்யார்ஜுன க்ஷேத்ரமான கோவிந்தபுரத்தை தேர்ந்தெடுத்து அங்கு தனக்கும் தனது 67 குருமார்களுக்கும் த்யானமண்டபம் அமைக்க தமது அத்யந்த பக்தையான சிட்லபாக்கம் திருமதி காமாக்ஷி அம்மாள் மூலமாக தெரிவித்தார். கோவிந்தபுரத்தின் சிறப்பே மஹிமை மிக்கது. கலியுக மாந்தர்களையும் கடைத்தேற்ற பரமபவித்திரமான நாமஸங்கீர்த்தன மார்க்கத்தை ஸ்தாபித்து உபதேசித்த ஸ்ரீ காமகோடி பீடத்தின் ஐம்பத்து ஒன்பதாவது ஆச்சார்யரான ஸ்ரீமத் பகவந்நாம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் விதேஹமுக்தி அடைந்து பிருந்தாவனம் கொண்டுள்ள திருத்தலம். ஸ்ரீ பரமேஸ்வரன் மஹாலிங்கமாக ஸ்ரீ சங்கரருக்கு அத்வைதம் பரம சத்தியம் என்று சத்திய பிரமானம் செய்த இடத்தில் குருபரம்பரை முழுவதும் ஒன்றாக எழுந்தருளுவது எவ்வளவு பொருத்தம்.
தர்ம கைங்கர்யங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் திருமதி காமாக்ஷி அம்மாள் ஸ்ரீ மஹாஸ்வாமியின் அருளாலும், ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் அருளாலும் பக்தகோடிகளின் ஒத்துழைப்பாலும் ஸ்ரீ மஹாஸ்வாமி விரும்பியபடி கோவிலை எழுப்பியுள்ளார். இந்தத் தபோவனம் தமிழ்நாடு, தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் எல்லையிலுள்ள கோவிந்தபுரம் என்னும் க்ஷேத்திரத்தில் போதேந்த்ராள் ஸ்ரீமடத்தருகே, ருக்மணி சமேத ஸ்ரீ பாண்டுரங்கன் கோவிலுக்கு சற்று எதிரே அமைந்துள்ளது.

இந்த தபோவனத்தில் ஸ்ரீ மஹாஸ்வாமியின் அமர்ந்த வடிவம் ஸ்ரீ கணபதி ஸ்தபதி மூலம் பச்சைக் கல்லில் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ மஹாஸ்வாமியைச் சுற்ரி ஸ்ரீ ஆதிசங்கரர் சிலாரூபமாகவும், மற்ற எல்லா குருமார்களும் பாணலிங்க ஸ்வரூபமாகவும் இருந்து அருள்பாளிக்கிறார்கள். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பாண லிங்கங்கள் அனைத்து நர்மதா நதியிலிருந்து கொண்டு வரப்பட்டவை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளின் ஆசியாலும், தவத்தால்லும், அனைத்து லிங்கங்களும் ஒரே நாளில் கிடைக்கப் பெற்றன என்பது மிகவும் ஆச்சர்யமான விஷயமாகும்.

உலகிலேயே எங்குமே காணமுடியாத அளவில் ஸ்ரீ ஆதிசங்கரர் முதலாக அறுபத்தி எட்டு குருமார்களும் ஒரு சேர இங்கு சூக்ஷ்மமாக வீற்றிருக்கின்றனர். தபோவனத்தில் சிறிய கோசாலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய மண்டபத்தில் காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகள் உற்சவ மூர்த்தியாக, ஸ்ரீ வியாச கணபதி மற்றும் ஸ்ரீ காமாக்ஷி அம்பாளுடன் வீற்றிருக்கின்றார். தக்ஷிண காளி சன்னிதானமும் அமையப்பட்டுள்ளது. ஒரு சிறிய தெப்பகுளமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தபோவனத்தில் குருபரம்பரைக்கு நித்ய பூஜை பிக்ஷாவந்தனங்களை நேரில் இருந்து கவனித்து வந்த ஸ்ரீமஹாஸ்வாமியிடன் நேரடியாக சன்னியாச தீக்ஷைப் பெற்ற ஸ்ரீ மேட்டூர் ஸ்வாமிகளும் ப்ருந்தாவன ப்ரவேசம் செய்துள்ளார் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயமே!

இங்கு பிரதி வருடம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாளுக்கு நாங்கு நவராத்திரி சமயத்திலும் (சாரதா நவராத்திரி / வசந்த நவராத்திரி / ஆஷாட நவராத்திரி / சியாமளா நவராத்திரி) நவாவரண பூஜை நடைபெற்று வருகிறது.

மற்றும் வைகாசி அனுஷ நக்ஷத்திரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகள் ஜயந்தி, ஆனி மாத அனுஷ நக்ஷத்திர தினத்தில் சம்வத்ஸரா அபிஷேகமும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரதி வருடம் குரு பூர்ணிமா தினத்தன்று ஸ்ரீ வியாசபூஜையும் விசேஷமாக நடைபெற்று வருகிறது.

தரிசன நேரங்கள்:

காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை;
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

இந்தத் தபோவனத்தில் வீற்றிருக்கும்படியான நம் குருபரம்பரைதனை பக்தி பாவத்துடன் நித்ய பூஜை பிக்ஷாவந்தனம் செய்து வழிபட வேண்டிய சேவயில் அனைத்து பக்தகோடிகளும் பங்குகொள்ள வைக்கும் பொருட்டு காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமி பிக்ஷாவந்தன அறக்கட்டளை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. ஸ்ரீ மஹாஸ்வாமியின் அனுக்ரஹத்தின் பேரில் இந்தத் தபோவனத்தில் நம் குருபரம்பரைதனை வழிபட ஓர் குடும்பத் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்தவரும் பிரதி வருடம் ரூ. 1200/- (மாதம் ஒன்றுக்கு ரூ. 100/- வீதம்) செலுத்தி நம் குருபரம்பரைக்கான நித்ய பூஜை, பிக்ஷாவந்தனத்தி’ற்கென பணமாகவோ, காசோலையாகவோ மேற்கூறிய அறக்கட்டளை முகவரிக்கோ அல்லது நேரடியாகவோ அறக்கட்டளையின் வங்கியில் செலுத்தியோ பங்கு கொண்டு, மற்றவரையும் பங்கு கொள்ளச் செய்து ஸாஸ்வத குருவருளைப் பெற்று வாழ்வாங்கு வாழவேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

ஹோமம் மற்றும் நித்ய பூஜைகளில் பங்குபெற:

Cheque to be drawn in favour of:
—————————————–
KANCHI SRI MAHASWAMY BIKSHAVANDANA TRUST

On-line Transfer:
———————
KANCHI SRI MAHASWAMY BIKSHAVANDANA TRUST

CITI UNION BANK SAVINGS BANK ACCOUNT NO.
021001000620590

IFSC Code: CIUB0000021

Bank Branch: 103, North Street, Thiruvidaimaruthur 612104.

Tapovanam Address:
KANCHI SRI MAHASWAMY TAPOVANAM – GOVINDAPURAM
KEEZHASALAI, THIRUPPANIPETTAI, THIRUVIDAIMARUTHUR – 612104.

Contacts:
Mr. Parthasarathy – 9841265785
Mr. Santhanam – 9445157748

நித்ய பூஜை மற்றும் பிக்ஷாவந்தனத்தில் பங்குகொள்ள விரும்பும் பக்தகோடிகள் ரூ. 1200/- காசோலையாகவோ, வங்கிக் கணக்கில் சேர்த்தோ அல்லது NEFT மூலமாகவோ அனுப்பிவிட்டு, அதன் விவரங்களோடு, கீழ்கண்ட விவரங்களையும் ஈமைல் மூலமாக hdfcsuresh@hotmail.com or srimahaswamy@gmail.com அனுப்பினால் கோவிந்தபுர தபோவனத்துக்குத் தெரிவித்து பிரசாதம் அனுப்ப வகையாக இருக்கும்.

கோத்திரம்
நக்ஷத்திரம்
ராசி
சர்மா (பெயர்)
பிறந்த தமிழ் மாதம்
காசோலை நெம்பர், நெஃப்ட் ரெஃபரன்ஸ் நெம்பர்
முகவரி
தொலைபேசி எண்
ஈமைல் முகவரி

அற்புதமாய் அவனியிலே பவனிவரும் ஆச்சார்யரன்
பொற்பதமும் தந்திடுமே பூவுலகில் மேன்மைதனை
கற்பகமாய் தந்தருளும் அருளாலன் ஆசியினால்
அற்பமான பிறவியிதும் அதிசயமாய் மாறிடுமே!

அடியவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்!
இந்த தபோவனம் பற்றிய விவரங்களை தங்கள் முகனூல் பக்கத்திலும் தாங்கள் ஈடுபட்டுள்ள முகனூல் குழுவிலும் பகிர்ந்து அனைத்து பக்தர்களும் நம் குருபரம்பரைக்கான நித்ய பூஜையிலும் பிக்ஷாவந்தனத்திலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிட்ட வேண்டி பகிர்ந்தளிக்க வேண்டுகிறேன்.

நமது வருமானத்தில் ஒரு சிறிதளவு நம் குருபரம்பரைக்கான நித்யபூஜைக்கும், பிக்ஷாவந்தனத்திற்கும் செலுத்தி குருவருளைப் பெறுவோம்.

வாழ் நாளில் ஒருமுறையேனும் இந்த அற்புதமான க்ஷேத்திரத்திற்குச் சென்று குருபரம்பரா தரிசனம் செய்வோம்!

பெரியவா கடாக்ஷம்!

– சாணு புத்திரன்.

******

Posted by ‘Sanu Puthiran’ Shri Suresh Krishnamoorthy in Sage of Kanchi group https://www.facebook.com/groups/Periyavaa/  in Facebook.Categories: Announcements

15 replies

 1. Reblogged this on V's ThinkTank.

 2. For the non Tamil Readers, can anyone mention briefly what is the contribution towards ?

 3. Dear Sri Mahesh,
  After reading your posting on Kanchi Sri Mahaswamy Bikshavandana Trust at Thapovanam in Govindapuram I had the oppurtunity to visit Govindapuram last week and was Blessed to participate in the Nitya Puja. Thank you for the posting. I met Mr.Vaidyanathan who was in charge of all the construction work in progress there. He was very helpful in explaining the works. I have one small suggestion to the management of the Tapovanam. LIke they insist on the dress code which is highly appreciated they should also discourage the visiting devotees in becoming excited and discussing various subject loudly inside the mandapam. This they can do it outside. This was particularly very distrubing to serious devotees who would like to spend some quite quality time inside the mandapam meditating. In case my suggestion is out off line I appologise for the same.

 4. Dear Mahesh

  I am not sure how to reach you but believe you are raeding this and this
  message reaches you

  Today I was reading :Deivathin Kural part ! and Mahaperaival has mentioned
  about 3 important hindu temples such as Angorwat, Borobudur and Prambanan

  Ther are classified as the most beautiful Hindu Temples

  I saw a video called Ramayana Balalet and it tells us how Hinduism has been
  spred over the world in the past

  here you go!

  http://www.youtube.com/watch?v=crS9iW2lf64

 5. Golden opportunity for the families devoted to the Guru Parampara to make their least and simplest contribution to the most valuable task . Sure our forum friends act swiftly before this year Vaikasi Anusham.

 6. Yes. They have got 80G Tax Exemption for donations made to Sri Mahalakshmi Annapoorna Seva Trust and the Banking Details are as follows:

  Citi Union Bank, Tiruvidamarudur
  S B Account No. 021001001042448 IFSC Code CIUB0000021.

 7. நண்பர் ஒருவர் மூலம் இந்த அற்புத செய்திதனை அறிந்தேன்.

  இந்த ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமி தபோவனத்தினை உருவாக்க கைங்கர்யங்கள் செய்த ஸ்ரீமஹாஸ்வாயின் பரமபக்தர்களுள் ஹோஸ்பெட்டைச் சேர்ந்த செல்வந்தர் ஸ்ரீ ரங்கன் கௌடும் ஒருவர் என அறிகிறேன்.

  இப்படிப்பட்ட உன்னதமான கைங்கர்யத்தைச் செய்து நம்மை மட்டுமல்லாது இனி வரபோகும் சந்ததியினரையும் குருபரம்பரைதனை வழிபடும் பெரும் பாக்கியசாலிகளாக்கிய தர்மசீலரான இவரது குடும்பம் ஸ்ரீமஹாஸ்வாமியின் மேல் கொண்ட பக்தி பற்றி அறிந்து ஆனந்தம் கொள்கிறேன்.

  ஸ்ரீமஹாஸ்வாமி அருளிய வழிதனில் தர்ம கைங்கர்யங்களை வெகுவாக செய்து வரும் இவருக்கும் இவரது குடும்பத்துக்கும் நன்றியுணர்வோடு ஸ்ரீமஹாஸ்வாமியிடம் ப்ரார்த்தனை செய்கிறேன்.

  நமஸ்காரங்களுடன்,
  சாணு புத்திரன்.

 8. Great news!visited the temple and had long ,satisfying,blissful talk with mettur Swamigal.He was very weak after the operation.called me inside His room and told about Periaval’s blessings to some of His devotees -incidents unknown to me-
  Have they got 80 g tax exemtion for donations?it will help us remt more more money!

 9. Even to look at the pictures seems like a great blessing of peace. The lotus pond is so beautiful!

  BTW, May 3rd is Adi Acharyal Jayanthi. Maybe we can add that date to the Panchang tab ? 🙂

 10. indha bagkiyam logathil ellorukkum kidaikka vendugiren. avan arulal avan thal vanangi enbathu thiruvasakam. karumbu inikkum enbathu ellorukkum therium aanalum athai suwaikkumbothuthan athan ruchi theriyum. mahaswamigalai dharisthavarkaluthan ithu puriyum. KARUNAA MURTHYYE KAATHU ARULUNGALE

 11. பெரியவா சரணம்!

  முதன்முதலாக ஸ்ரீமஹாஸ்வாமிக்கான எனது முதல் திருமஞ்சனமான “தூயவன் தரிசனம்” எனும் 108 பாடல்களை ஸ்ரீமஹாஸ்வாமிகளிடம் சமர்ப்பிக்க வேண்டி இந்த க்ஷேத்திரத்திற்கு சென்றபோது ஸ்ரீ மேட்டூர் ஸ்வாமிகள் கூறிய வார்த்தைகளை நினைவுகூர்கிறேன்.

  “ஆத்மார்த்தமா மஹாபெரியவாகிட்டே நாம செய்யும் ஒவ்வொரு ப்ரார்த்தனைகளையும் நாம மறந்துட்டாக்கூட அவா மறக்காம நிறைவேற்றிவைப்பா”.

  ஆம்! அன்றைய தினம் எனது ப்ரார்த்தனைகளில் ஒன்று – இந்த அற்புதமான க்ஷேத்திரத்தினைப் பற்ற அனைவருக்கும் தெரிவித்து எல்லா பக்தாளையும் இங்குள்ள குருமஹாரத்திங்கங்களுக்கு நித்யபூஜைகளிலும், பிக்ஷாவந்தனத்திலும் பங்குபெற வைக்க நேக்கு சக்தி தாங்கோ-நு கேட்டதும் ஒன்னு. சத்யம் சொல்றேன். ஜெய வருஷ முதல் அனுஷத்தன்று 11 பேர்களுடைய பிக்ஷாவந்தன கைங்கர்யத்துடன் சென்று தரிசித்தேன். இன்று பற்பலபேர்கள் இந்த கைங்கர்யத்தில் தம்மை இணைத்துக்கொள்ள விழைகிறார்கள் எங்கையில் கண்களில்

  ஸ்வாமி பாதாரவிந்தங்களை நினைந்தபடியாக உங்கள் யாவரையும் வணங்குகிறேன்.

  எனக்குத் தெரிந்தவகையில் உலகிலேயே 68 பீடாதிபதிகளையும் ஒருசேர தரிசிக்கமுடிந்ததொரு க்ஷேத்திரம் இதுவாகத் தான் இருக்கும்!

  “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பது போல் அனைத்து பக்தாளுக்கும் இந்த க்ஷேத்திரத்திற்குச் சென்று குருபரம்பரைதனை தரிசித்து அருட்கடாக்ஷம் பெறும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்கிற எந்தன் ப்ரார்த்தனைக்கு ஸ்ரீமஹாஸ்வாமி அருள்புரிந்துள்ளார்.

  பஞ்சனாதன் சுரேஷ் அண்ணாவுக்கு எந்தன் மனதார்ந்த நன்றிகளும் நமஸ்காரங்களும்!

  பெரியவா கடாக்ஷம்!

  – சாணு புத்திரன்.

 12. Thanks for letting us know about this.
  Jaya jaya shankara hara hara shankara

 13. Thank you for giving good opportunity to all periyava bhaka`s. I pray periyava to give you lot of energy to do things like that. Hara hara sankara jaya jaya sankara.

 14. Great information. Let us all pray to all Guru Maha Sannidhaanams to Bless us all.May all Maha Periyava Devotees take part in this great work. This will be a Seva very dear to HH Sri Mettur SwamigaL also. What is the followup on His Brindavanam construction? He is such a great Maha Periyava Thondar and Mahatma! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

Trackbacks

 1. Govindapuram Thapovanam Moolavar Photo Released – Parama Bhaghyam | Sage of Kanchi

Leave a Reply

%d bloggers like this: