சந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – Parts III and IV

சந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – III ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் (நன்றி: யோகி ராம் சுரத் குமார் கும்பாபிஷேக சிறப்பு மலர்).

‘சரி, நீ அவர் பேரு என்னன்னு சொன்னே?’

‘ஸுரத் ராம்குமார்’. இப்படி சொல்கையிலே ஏதோ தவறு செய்து விட்டேனோ என்று தோன்றியது.

‘ ஸுரத் ராம்குமாரா? ராம் ஸுரத்குமாரா?’

தவறுதான் செய்திருக்கிறேன் என்று தெரிந்தது. ‘பெரியவா சொல்றாப்பலதான்’.

மேலும் கேள்விகள் போட்டார். ‘ஸுரத் குமாரா, ஸூரத் குமாரா?’.

குறில் ‘ஸு’ வா, நெடில் ‘ஸூ’ வா என்று கேள்வி.

‘இரண்டு விதமாவும் தான் சொல்றா. எழுதறா. ஸுரத் தான் சரின்னு நெனைச்சிண்டு இருக்கேன்’ என்றேன்.

‘பேப்பர் காரா ரெண்டு தினுசாவும் போடறதை பாத்துத்தான் நானும் கேட்டேன். நம்ம பேப்பர் காரா கிட்ட மத்த பாஷை பேர்கள் படற பாடு சொல்லி முடியாது’ என்று சொல்லி சிரித்தார். பல உதாரணங்களும் கொடுத்துவிட்டு, முடிவாக ஒரேடியாக சிரித்து கொண்டு ‘PATHAK’ ன்னு இங்கிலீஷ்ல ஒரு பேரை பாத்துட்டு ‘பதக்’ ன்னு போட்டுண்டு இருக்கா. வாச்தவத்திலே அது பாடக். அதுலே வர இரண்டாவது ‘ட’ வை ‘that’ ன்னு போடறாளோன்னோ – அதை தான் ‘த’ ன்னு நெனைச்சிண்டு ‘பாடக்’ ஐ ‘பதக்’ ஆக்கியிருக்கா! நல்லவேளை, ‘பாதக்’ ன்னு போடாம மொதல் எழுத்தையும் தப்பா போட்டுண்டு இருக்கா. பாதக் ன்னா பாதகன் இல்லையா?

(பாடக் என்ற வார்த்தை குறித்தும் பல சொன்னார், இங்கே தேவையில்லை. பிறகு நம் விஷயத்திற்கு வந்தார்).

‘ஸுரத்’, தான் சரின்னியே, அதுக்கு எப்படி அர்த்தம் பண்ணிண்டே?’

இறைவனிடம் கொள்ளும் அன்பையே ‘மெய்க்காதல்’ என்கிறோம் அல்லவா? அதுவே தான் ‘ஸுரதி’ எனப்படுகிறது. மீரா முதலியோரின் பாடல்களில் அது ஸுரத் என வருகிறது. எந்த ஜீவனும் இறைவனின் குழந்தை என்பதை கருதியோ என்னவோ, வட நாட்டினர் பல பெயர்களின் முடிவில் ‘குமார்’ என சேர்க்கிறார்கள். ‘ராம் ஸுரத் குமார்’ என்றால் ஸ்ரீ ராமபிரானிடம் மெய்க்காதல் கொண்ட குழந்தை.

இவ்வாறு நான் புரிந்து கொள்வதாக ஸ்ரீ சரணரிடம் தெரிவித்தேன்.

‘குமார் – ங்கறதுக்கு ஏத்தாப்பல அவரை ‘கொழந்தை கொழந்தை’ ன்னே தான் சொல்றா, தெரியுமோ?’

‘ராம த்ரயோதசீ தான் அவருக்கு சகலமும் ஆனதுனாலே, அந்த பேர். அப்பா, அம்மா, வைச்சதானாலும் சரி, அவரே வெச்சுண்டதாவோ, இல்லாட்டா, (தீக்ஷா நாமமாக) குரு குடுத்ததாகவோ இருந்தாலும் சரி, பொருத்தமாவே இருக்கு. ஸூரத்குமார் னு இருந்தா என்ன அர்த்தம் இருக்கும்?’ என்றார்.

‘ஸுரத்தை சேர்ந்த ஒரு ஜீவன்னு வெச்சுக்கலாம்.’

‘ஆனா, இவர் ஸூரத்தை சேர்ந்தவர் இல்லை’ என்று சொல்லி, ஆயினும் எவ்விடத்தை சேர்ந்தவரென்று சொல்லாமல், ‘ஸூரத்துக்கு ஏன் அப்படி பேரு?’ என்று திசை திருப்பினார்.

‘தெரியலை’.

அது அர்த்த புஷ்டியான பெயராகவே இருக்கும். அதை பெரியவாள் சொல்ல போகிறார் என்று எதிர் பார்த்தேன்.

தொடரும்

சந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – IV ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் (நன்றி: யோகி ராம் சுரத் குமார் கும்பாபிஷேக சிறப்பு மலர்).

============================================================================

அவரோ எங்கேயோ போய் விட்டார். ‘பேப்பர்காரா மத்த பாஷை பேர்களை படாத பாடு படுத்துவது’ பற்றி மறுபடி கூறி, ‘ஸூராஜ்மல்’ ன்னு வைரநகை கடை சொல்றாளே, அதோட சரியான பேர் என்ன தெரியுமா?’ என்றார்.

அவர் கேட்டு எனக்கும் ஒன்று தெரிந்த மகிழ்ச்சியுடன் ‘ஸூராஜ்மல்’ என்றேன். உடனேயே, ‘ஸூரஜ்’ க்கும் ‘ஸூரத்துக்கும்’ ஏதோ சம்பந்தம் இருக்கிறதென்றும் புரிந்து கொண்டேன்.

‘அப்படின்னா என்ன அர்த்தம்?’.

‘ஸூரஜ்ன்னா சூரியன். மல்னு வடக்கே அனேக பேர் முடிவுலே போட்டுக்கறா’.

‘வீரதீரத்தை காட்டணும் ன்னே ‘மல்லர்கள்’ ‘சிங்கம் மாதிரி ஆனவா’ ன்னு அர்த்தம் குடுக்கிற ‘மல்’ ‘ஸிங்’ கெல்லாம் போட்டுக்கறது அவா வழக்கம்’ என்ற ஸ்ரீ சரணர், நான் எதிர் பார்த்தாற்போலவே, சூர்யன் தான் ‘ஸூரஜ்’ ஆகி அப்புறம் ‘ஸுரத்’ ஆனது என்று விளக்கினார்.

‘ஐ காரம் ட காரம் ஆயிடறதுண்டு. ஸாம்ராஜ், விராஜ் என்கிறவை ஸாம்ராட், விராட் – ன்னு ஆறது இல்லியோ? ‘ட’ காரமும் ‘த’ காரமும் ஒண்ணுக்கொண்ணு ரொம்ப கிட்டக்க இருக்கிற சப்தங்கள். ‘பிஸ்கெட்’ ன்னு இருக்கிறதை ‘பிஸ்கோத்’ ன்னு சொல்றோம் இல்லியோ? அப்படி, ‘ஸூர்ய’ -ங்கறது ‘ஸுரத்’ ஆயி, ஸுரஜ் ஸுரட் ஆயி ஸூரட் ‘ஸுரத்’ ஆயிருக்கு. பழைய பொஸ்தகங்கள் ல அந்த ஊருக்கு ஸூர்யபுரம் னே தான் பேர் சொல்லியிருக்கு’.

‘இன்னொரு அபிப்ராயம் என்னன்னா, அது ஸூராஷ்டிர தேசத்தோட ராஜதானி; அதனாலே அதுக்கும் ஸுராஷ்ட்ரம்னே பேர் இருந்து,, பேச்சு வழக்குலே சிதைஞ்சு, சிதைஞ்சு ‘ஸூரத்’ ஆயிடுத்துன்னு. இப்படி சொல்றவா ஸுராஷ்ட்ரம் தான் ஸௌராஷ்ட்ரம் ன்னு ஆயிருக்கிறதா அபிப்ராய படறா. ஆனா எனக்கு என்ன தோணறது ன்னா, அந்த பிராந்தியத்துக்கே, ஸௌர-ராஷ்ட்ரம் ன்னு பேர் இருந்து ஸௌராஷ்ட்ரம் ங்கறது கத்தியவார் சீமைன்னும் இருந்தாலும், பூர்வத்திலே ஸௌராஷ்ட்ராவே இன்னும் விஸ்தாரமா ஸூரத் உள்பட பரவியிருந்திருக்கலாம். பொருத்தமாவே அட ராஜதானிக்கும் ஸூர்யபுரம் ன்னு பேர் இருந்து மாறி மாறி ஸூரத் ன்னு ஆயிருக்கலாம் ன்னு தோண்றது’.

(ஸௌராஷ்ட்ரம் என்றால் சூரியனுக்குரிய ராஜ்யம். அதன் தலை நகர் ஸூர்யபுரம் ஆக இருப்பது பொருத்தம் தானே).

தொடரும்

******
Thanks a ton to Shri Karthi Nagaratnam for typing all these painstakingly and lovingly in Sage of Kanchi group in Facebook.

A request to all devotees. If you do not like any part of the posts please feel free to send me an email at suresh.gm@gmail.com. But please do not air them in public forums like this as one comment will invite 10 other undesirous comments and all the harmony will vanish quickly. To stem these unwanted comments we are forced to lock some posts  thereby depriving others from sharing their healthy, beneficial discussions. Let us try to follow Mahaswamigal’s teachings, “Unconditional Love for everything and everyone. If we do not like a thing let us start by atleast being silent and not reacting to it”.  Sarveshwara.



Categories: Devotee Experiences

Tags:

6 replies

  1. Very inspiring and divine posts by Shri Ra Ganapathi Anna.

    • Thanks. Only after reading the volumes of ‘Deivatin Kural’ I am able to understand the importance of pronouncing names properly. Mahaperiyava used to explain them properly. Now take for example our prese nt day President Mr . Pranab Mukherjee. In fact Pranab is ‘Pranav’ Bengalis use to pronounce ‘v’ as ‘b’. and we wrongly pronounce Pranaaaaaab instead of rightly pronouncing ‘Pranab’ . As we all know ‘Pranav’ or Pranab’ means the holy ‘Omkara’. So, atleast in future let us pronounce our President’s name properly. Similarly Gujarat CM should be pronounced as the first letter of ‘dinasari’ (daily) , ‘di’ not as ‘december’ (di). BJP leader’s name is to be pronounced as ‘ad’vertisement, Advani. Not ‘ad’yayanam Advani. OK ? In fact we are to address our mother as ‘Maata’ not ‘Maadha’. Until we know a little bit of sanskrit, hindi scripts, we can not enjoy and pronounce the words properly.

  2. We are really lucky to read such things about Sri Maha Periyava. Tks for sharing

  3. Hara Hara Sankara, Jaya Jaya Sankara. Hara Sankara, Jaya Jaya Sankara. Hara Hara Sankara, Jaya Jaya Sankara. Hara Hara Sankara, Jaya Jaya Sankara.

  4. I really enjoyed every bit of the article and mahaperiyavas deep analysing skills .. melezhundavariyaaga endha vishayathum paarkaamal
    sariyaaga alasi aaraaindhu eppadi andha peyar vandirukkum endru anu alavum sandheghathirkku idam illaamal nivarthi seivadhil nammudaya
    mahaperiyavarkku eedu inai indha lohathil yaarum kidaiyaadhu .. Panchanathan Suresh Sir .. ungaludaya irai pani thodarattum .. Periyava aasi namakku (lohathukku) eppodhum undu .. Jaya Jaya Sankara! Hara Hara Sankara!

  5. Mr Suresh, you are doing an excellent service. Kindly continue as it will give an
    opportunity to get some blessings through you by reading his articles.

    Balasubramanian NR

Leave a Reply to K.S.ViswanathanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading