“இவன் நமக்கெல்லாம் அருணாச்சலேஸ்வரரை ஞாபகபடுத்தி உபகாரம் செய்திருக்கிறான்”

ஒரு கிராமத்தில் முகாமை முடித்துக்கொண்டு அடுத்த முகாமுக்கு போய் கொண்டிருந்தார்கள் பெரியவா.

வழியில் ஒரு பிச்சைகாரர் வந்தான். தொலைவில் இருந்து பார்த்த போதே, இவர் ஒரு சாமியார், ரொம்ப பேர் கூட வருகிறார்கள். நல்ல சில்லறை தேறும் என்று எண்ணியிருப்பான்.

அருகில் வந்ததும், ‘அண்ணாமலைக்கு அரோஹரா’ என்று கூவிக்கொண்டே பெரியவா பாதங்களில் விழுந்தான்.பெரியவாள் உடன் வந்தவர்களை திரும்பி பார்த்தார்கள்.

‘இவன் நமக்கு ரொம்ப உபகாரம் செய்து இருக்கிறான்’.

இவனென்ன உபகாரம் செய்தான்?

‘ஸ்மரணாத் அருணாசலம் என்று சொல்லுவார்கள். அருணாச்சலேஸ்வரரை நினைத்தாலே போதுமாம், ரொம்ப புண்ணியம்,

பிச்சைகாரன் இன்னும் நின்று கொண்டு இருந்தான். பத்து பைசா கூட தேறவில்லை.

பெரியவா அவனை பார்த்து புன்னகை செய்தார்கள்.

‘இன்னிக்கு எங்கேயும் பிச்சைக்கு போக வேண்டாம்.’

‘அப்போ சாப்பாட்டுக்கு இன்னிக்கு வழி?’

‘மடத்திலேயே சாப்பிடலாம், அப்புறம் வெளியூர் போ’

பெரியவாள் பக்தர்களை பார்த்து சொன்னார்கள். ‘எந்தரோ மகானுபாவுலு, எங்கெங்கெல்லாமோ, எத்தனையோ மகான்கள், சித்தர்கள், பக்தர்கள் இருக்கிறார்கள். இந்த பண்டாரத்தை பாருங்கள், நாளை பற்றி கவலை படுவதில்லை. அன்றன்று கிடைக்கும் பிக்ஷையில் காலம் தள்ளுகிறான். இவனுக்கு உள்ள ஞானம் கூட நமக்கு வருவதில்லை.’

ஒரு பண்டார – பிச்சைக்காரனிடம் கூட ஈஸ்வரனை பார்த்தார்கள் பெரியவா.

உடன் வந்து கொண்டிருந்த ஒரு வித்வான் சொன்னார், ‘ஈஸ்வரனே அவதாரம் செய்துவந்தால் கூட நாம் அவரை வெறும் மனுஷனாய் பார்க்கிறோம்.

பெரியவாளை தான் குறிப்பிட்டாரோ? தெய்வம் தெய்வ வடிவிலேயே வந்தாலும் நம்பாத பாமர மக்கள் நாம், என்னத்தை சொல்ல?

நன்றி: கச்சி மூதூர் கருணாமூர்த்தி புத்தகத்தில் ஸ்ரீ மடம் ஸ்ரீ. பாலு மாமா அவர்கள்.

******
Thanks a ton to Shri Karthi Nagaratnam who had posted this in Sage of Kanchi group in Facebook.



Categories: Devotee Experiences

Tags:

4 replies

  1. Arunachala siva Arunachala Siva Arunachala Siva Aruna Shivom,
    Omkaram Bhava Omkaram Bhava Omkaram Bhava OM Gurunatha
    Manasa Bhajare Guru Charanam Dusthara Bhava Sagara Thatanam
    Guru MahaRaj,Guru Jai Jai Kamakoti Sath Guro
    Guru Maha Raj Guru Jai Jai Sarvatharyami JAGATh GurO
    SarvatharyaAmi SarvatharyAmi SarvatharyAmi MAHAGURO.

  2. ARUNACHALA SHIVA ARUNACHALA SHIVA

  3. how is it mahesh i see lord rama in this place walking with his disciples!!!just look again, you find the dandaam and the back ground looks like a vill and the grace of HH is like Kothandarama. oh HH you are making me say rama rama. n.ramaswami

  4. Arunachala Shiva, Arunachala SHiva, Arunachala SHiva, Arunachala….

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading