“..பதிலுக்கு ஒனக்கு தரதுக்கு ஒரு பிரசாதம் கூட எங்கிட்ட இல்லியே..”

தருமத்தருவே போற்றி…

தருவின் கீழ் நம் தருமத்தரு அமர்ந்திருக்கும் படங்களில் ஒன்றில் அவருக்கு இடது பக்கம் ஒரு மணை சார்த்தி இருக்கும். மரத்திடமும் அன்பு மரத்து போகாத அவரது அதிசய குணத்திற்கு அது சான்று. கதை இதுதான்…

சங்கர பீட சக்ரவர்த்தியாயின்றி அனாமதேய ஆண்டி போல் அவர் அந்த மரத்தடியில் வந்து அமர்ந்திருந்தார்.

அடியாரோருவர் அங்கு வந்து பெரியவாள் அமர்வதற்கென்று மணை செய்து எடுத்து வந்து சமர்ப்பணம் செய்தார்.

நீ பெரியவாளுக்கு பிரியமா குடுக்கணும்னு மணையை தூக்கிண்டு வந்து குடுத்து இருக்கே. பதிலுக்கு ஒனக்கு தரதுக்கு ஒரு பிரசாதம் கூட எங்கிட்ட இல்லியே..’ என்றார் ஸ்ரீ சரணர், அருள் என்ற அமுத பிரசாதத்தை வாரி வாரி வழங்கியபடி…

பெரிவா அனுக்ரகமே போறும் என்றார் அடியார்.

அப்போது இன்னோர் அடியார் வந்தார், கேமராவும் கையுமாக.

ஒனக்கு நாம் பதில் பண்றதுக்கு வழி கிடைச்சாச்சு என்று சந்தோசத்துடன் சொன்னார், நம் ஆசுதோஷி. ‘இந்த மணையும் நன்னா போட்டோல தெரியற மாதிரி வெச்சுண்டு படம் பிடிச்சிக்க போறேன். காப்பி ஒனக்கு தர சொல்றேன். நீ கொடுத்த மணையே போட்டோ ரூபத்திலே நான் ஒனக்கு பண்ற பதில்” என்று சிரித்த வண்ணம் கூறினார்.

போட்டோ எடுக்க கூடாது என்று பெரியவா சொல்லும் சந்தர்ப்பம் அநேகம். இன்று இந்த கேமரா அடியார் அதிஷ்டம் செய்திருந்தார். தரு நிழலில் ‘கோடையிலே இளைப்பாற்றி கொள்ளும் வகை கிடைத்த குளிர் தரு’வாம் ஸ்ரீ குரு அழகாக போஸ் கொடுத்தார் – தமது பக்கலில் பக்தர் அளித்த மணை ஐ சார்த்தி வைத்து கொண்டு.

நிழற்படம் எடுத்தவரிடம் ‘இவர் அட்ரஸ் வாங்கிண்டு ஒரு படம் சேர்த்திடு, போஸ்ட் ல ‘ என்றார். பிற்பாடு அவரும் அவ்வாறே செய்தார்.

பெரியவா தமக்கு சமர்ப்பிக்க பட்ட போட்டோ ஐ பார்த்து சொன்னார், ‘என்னோட தண்டம், ருத்ராக்ஷம், கடம் எல்லாம் அனேக போட்டோ ல விழுந்து இருக்கு. ஆனா ஜபத்துக்கு முக்கியமான மணை மேல நான் உக்கந்துடரதாலே அது தெரியறது இல்லே. இந்த படம் அந்த கொறையை போக்கிடுத்து’ என்றார்.

ஆம், மஹா புருஷனுக்கு ஒரு சிறிய மணை தந்தவரிடமும் நன்றி, மணையிடமும் நன்றி, மரம் அவருக்கு ஜடம் அல்ல, சைதன்ய ஜீவனே…

நன்றி : மைத்ரீம் பஜத புத்தகத்தில் அண்ணா, ஸ்ரீ. ரா. க. அவர்கள்

*****

Thanks a ton to Shri Karthi Nagaratnam who had posted this in Sage of Kanchi group in Facebook.Categories: Devotee Experiences

5 replies

 1. I read in “Anbe AruLae” by BharaNidharan that Maha Periyavaa Himself asked BharaNidharan to get a MaNai urgently and overnight they caught hold of a carpenter, bought the necessary wood and got the MaNai made immediately and submitted to Maha SwamigaL the next morning. Maha SwamigaL kindly asked if he was awake the whole night and blessed him. As an additional Bhagyam, He gave His photograph with the Manai it seems! What a Blessing! Very appropriate that Bharanidharan is in our midst and the incident has also been portrayed by Ra. Ganapati, two great souls and ardent devotees of Maha SwamigaL.

 2. I have heard that the Jnani’s each and every word and action is full of meaning. Suri Nagamma Sri Ramana Bhagavan’s beloved devotee has said so in her book “Letters from Sri Ramanasramam”
  Sri Maha Periyava’s each and every word and gesture and incident narrated in this site appears like this to me also.
  We take everything so much for granted, the great ones show us naturally the spirit of sacrifice and saranagathi.
  Thanks for posting this article.
  In Him,
  mona

 3. How true the manai is ablessed one

 4. Maha Periyaval revealed that in GOD’s creation that every thing has to be respected.
  Hara Hara Sankara,Jaya Jaya Sankara.

Leave a Reply

%d bloggers like this: