தமிழகத்தின் மகா கவி சுப்பிரமணிய பாரதியையும் கவர்ந்தார் சுவாமிகள்

கலவையில் ஆசாரிய பீடம் ஏறிய நம் பரமாச்சாரியார் கும்பகோணம் நோக்கி பயணம் தொடங்கினார்.

வழியில் தன் பெற்றோர் வாழ்ந்த திண்டிவனத்தில் தங்கினார். பன்னிரண்டு வயது – பள்ளி மாணவன் சுவாமிநாதனாக அவரை அறிந்திருந்த ஊர் அது. இப்போது அவர் மடாதிபதி. பள்ளி மாணவனாக இருந்த போதே அவர் , எல்லோரையும் கவர்ந்திழுக்கும் தோற்றம் பெற்றிருந்தார்.

துறவாடையில் அவர் சூரியனாக தேஜோமயமாக காட்சி தந்தார். அவர் படித்த ஆற்காடு மிஷின் ஸ்கூலின் ஆசிரியர்கள் , பள்ளி தோழர்கள் அவரை காண ஓடி வந்தார்கள் . அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார். வாழ்த்தினார்.

கும்பகோணம் மடத்தில் 9 – 5 – 1907 – ல் சுவாமிகளுக்கு முறைப்படி பட்டாபிஷேகம் நடந்தது. தஞ்சையின் கடைசி மன்னர் , அரசு பெரிய அதிகாரிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஸ்வாமிகள் ஜகத்குரு ஆனார்கள்.

1909 -ல் கும்பகோணத்தில் – மகாமகம் திருவிழா வந்தது. மகாமகத்தன்று சுவாமிகள் யானை மீது அமர்ந்தவாறு மகாமக குளத்திற்கு ஸ்நானம் செய்ய சென்றார். தஞ்சை அரச குடும்பத்தினரும் , அரசு அதிகாரிகளும் முன் சென்றனர். அது கண் கொள்ளா காட்சியாக அமைந்தது.

அதன் பின்னர் – சுவாமிகள் ‘படிக்க’ ஆரம்பித்தார் . படித்தார் – படித்தார் – படித்தார் ..! வேதப்பயிற்சி சமஸ்கிருத காவ்யங்கள் இப்படி பற்பல!

தனிமையில் தொல்லைகள் ஏதுமின்றி படிக்க ஆவல் கொண்டார் சுவாமிகள் . அகண்ட காவிரியின் வடகரையில் , முசிறிக்கு மேற்கே ஐந்து மைல் தொலைவில் மகேந்திர மங்கலம் என்கிற கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டது . அந்த நாட்களில் அந்த கிராமத்திற்கு போக்குவரத்து வசதி இல்லை. காவிரியை பரிசலில் கடந்து வரவேண்டும். ஆதலால் சுவாமிகளை தரிசிக்க வருவோர் குறைந்தனர்.

சிறு குடிசை அமைக்கப்பட்டு அதில் தங்கினார்.

சுவாமிகள் எல்லா பாடங்களையும் ஆர்வமுடன் கற்றார். இந்தியா முழுவதிலிருந்தும் பல துறை மேதைகளும் பண்டிதர்களும் அங்கே சுவாமிகளுக்காக வந்தார்கள். ஆங்கிலம், பிரெஞ்சு , உருது போன்ற பல்வேறு மொழிகளையும் கற்றார். மராத்தி மொழி கற்றார். மராட்டிய மாநில அறிஞர்கள் சுவாமிகளுக்காக அந்த கிராமத்துக்கு வந்தனர்.

தமிழ் புலவர்கள் துணையுடன் தமிழ் நூல்கள் அனைத்தையும் கற்று தேர்ந்தார். பல்வேறு கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களை அழைத்து பல கலைகளில் தேர்ந்தார். இசை , சிற்பம் முதல் கல்வெட்டு ஆராய்ச்சிவரை ! மகேந்திர மங்கலம் – சுவாமிகளின் வாழ்வில் மகேந்திர ஜாலம் செய்தது .

சுவாமிகளுக்குள் இருந்த ஞான ஒளி விசுவரூபம் எடுத்தது. மகேந்திர மங்கலத்தில் இருந்து சுவாமிகள் திரும்பும் போது , ஞான சூரியனாக ஜொலித்தார். சுவாமிகளின் சிறப்பு பாரத தேசம் முழுவதும் பரவத் தொடங்கியது.

தமிழகத்தின் மகா கவி சுப்பிரமணிய பாரதியையும் கவர்ந்தார் சுவாமிகள்.

1916 ம் வருடம் கும்பகோணத்தில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழா பற்றி பாரதியார் எழுதி இருக்கிறார் :

” உலகத்தார் பராசக்தியை நல்ல மழை அருள்புரியும் சரத் காலத்தில் முதல் ஒன்பது இரவும் வணங்கி பூஜை செய்யவேண்டும் என்பது பூர்வீக ஏற்பாடு . மிகப்பயன் உடைய காரியம் .

கும்பகோணம் சங்கர மடத்தில் இந்த பூஜை மிகவும் கோலாகலமாக நடத்தப் போவதாக பத்திரிக்கையில் ஒரு செய்தி போட்டிருந்தது. தேசம் முழுவதும் இப்படி நடப்பது நல்லது. சங்கர மடத்திலும் எனக்கு ஒருவித ஆவல் உண்டானதால் தந்தியை வாசித்தேன் . அந்த தந்தியோடு பாதி சாஸ்திரம் . வர்த்தமான தந்திக்குள்ளேயே சாஸ்திரத்தை நுழைத்தது ஒரு வினோதம் . ஆனால் அதில் கண்ட சாஸ்திரம் உண்மையானதாக இருந்தது. நான் எதிர்பார்க்கவில்லை . எனவே தந்தியை படித்த போது எனக்கு மகிழ்ச்சி உண்டானது. ”

பாரதி இப்படி எழுதுகிறார் .

*****

Thanks a ton to Shri Varagooran Narayanan who had posted this in Sage of Kanchi group in Facebook.



Categories: Devotee Experiences

Tags:

2 replies

  1. Yesterday (11/9/12), was Mahakavi Subramanya Bharati’s ‘Smaran divas”. I am happy to read about him connecting ‘Mahaperiyava’.

Trackbacks

  1. IMPORTANT-Respect for Tamizh-Sri Matam and Our Periyavas – Sage of Kanchi

Leave a Reply

%d bloggers like this: