‘காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா’

குப்பா ஆஞ்சநேய சாஸ்த்ரிகள் வியாகரண வித்வான். ஆந்திரா தேசத்துக்காரர். பெரியவாளுடைய பக்தர். ஆசார சீலர்.

பெரியவாளுக்கு வந்தனம் செய்தபோது அத்வைத பரமான சுலோகங்களை அழகாக சொல்லிக்கொண்டே வந்தார்.

பெரியவா அவரை உட்கார சொன்னார்கள். அந்த சமயத்தில் ஒரு பக்தர் வந்து, ‘காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா,’ என்று சித்தர் பாடலை சொல்லிக்கொண்டே நமஸ்காரம் செய்தார்.

பெரியவா, அருகிருந்த ஓர் அன்பரிடம், அந்த தமிழ் பாட்டை தெலுங்கில் மொழி பெயர்த்து விளக்கி, குப்பா சாஸ்த்ரிகளுக்கு சொல்லும்படி பணித்தார்.

பாடலின் உட்கருத்தை கேட்டு புரிந்து கொண்ட சாஸ்த்ரிகளுக்கு ஒரே குதூகலம். பெரியவாளிடம் தெலுங்கில் ‘தமிழில் கூட வேதாந்த வாக்கியம் இருக்கிறதா?’ என்று கேட்டார்.

‘தமிழில் தான் ஜாஸ்தியா இருக்கு’ என்று உறுதியாக சொன்னார்கள், பெரியவா.

பெரியவாளின் வேகத்தை கண்டு சாஸ்த்ரிகளுக்கு பிரமிப்பு ஏற்பட்டது. ஏனென்றால் அதுவரை தமிழ் மொழியையும் தமிழ் பேசுபவர்களையும் சற்று குறைவாக கருதி வந்தார் அவர்.

அவர் மன இருளை போக்குவதற்கு தான், சித்தர் பாட்டு பாட வல்லானை பெரியவா அழைப்பித்தார்களோ?

நன்றி : கச்சிமூதூர் கருணாமூர்த்தி புத்தகத்தில்

*****
Thanks a ton to Shri Karthi Nagaratnam who had posted this in Sage of Kanchi group in Facebook.Categories: Devotee Experiences

7 replies

 1. PeriyaVa love every language and its contribution to the world.Language is the form of Sarasvathi the VedaMatha.Every language is Great and Grand.Periyava Knows that in depth.Our Periyava is Brahmananda Swaroopam in Human form.

 2. PERIAVA HAS DONE GREAT SERVICE TO TAMIL

 3. anantharaman viswanathan,adambakkam,
  Sree Maha Periyava can able to read the mind of person where ever they are.He removes the impurity in mind and make him to realize the truth when the person stands in front of him whether scholar or vidwan.Dedicated faith on Maha Periyava will certainly take us to the bright future.

 4. தென்னாடுடைய பெரியவா போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  சரணம் சத்குரு, சரணம் ஜகத் குரு சரணம் மம குரு

 5. Translation in English is required to view the post please.

  ________________________________

Trackbacks

 1. IMPORTANT-Respect for Tamizh-Sri Matam and Our Periyavas – Sage of Kanchi

Leave a Reply

%d bloggers like this: