ஒருமுறை சிதார் மேதை பண்டிட் ரவிசங்கர் பெரியவாளை தரிசிப்பதற்காகத் தேனம்பாக்கம் வந்திருந்தார். காலையில் வரதராஜ பெருமாள் தரிசனத்தை முடித்துக் கொண்டு, 8 மணி சுமாருக்குப் பெரியவாளை தரிசனம் பண்ண இரண்டு பெரிய கார்களில் குடும்ப சகிதமாக வந்தார் அவர். ‘பெரியவா இப்போ வந்துடுவார். உட்காருங்கள்!’ என்று மடத்துச் சிப்பந்திகள் அவரை உபசரித்து உட்கார வைத்தார்கள்.
பெரியவா வந்ததும், அவரை தரிசனம் செய்து ஆசிகள் வாங்கிக் கொண்ட பிறகு, வாத்தியத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினார் பண்டிட் ரவிசங்கர். பெரியவா மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தார். வாசித்து முடித்ததும் ரவிசங்கருக்கு சந்தோஷமாக இருந்தது. இப்படித் தனிமையாக, பெரியவாளுக்கு முன்பாக அமர்ந்து சிதார் வாசிக்க வாய்ப்புக் கிடைத்ததை, தன் வாழ்க்கையில் கிடைத்த பெரிய பாக்கியம் என்று மகிழ்ந்து போனார்.
‘எனக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது. பெரியவா ஆழ்ந்து ரசித்து என் சங்கீதத்தை அனுபவிச்சுக் கேட்டார்!’ என்று நெகிழ்ச்சியாகச் சொல்லிவிட்டு, அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார், பண்டிட் ரவிசங்கர்.
****
Thanks a ton to Shri Bhaskaran Shivaraman who had posted this in Sage of Kanchi group in Facebook.
Categories: Devotee Experiences
Blessings of the Periyava is enough for the devotees .Pandit Ravi shankar is a blessed soul.
Pandit Ravi Shankar is hugely blessed by his interaction with Maha SwamigaL.
Many of these mails contain undecipherable scripts. Could you please look into this and send scripts decipherable, so that we could get the benefit ofthe mails. Thanks
________________________________