श्रीशिवानन्दलहरी -६२
आनन्दाश्रुभिरातनोति पुलकं नैर्मल्यतश्छादनं
वाचाशङ्खमुखे स्थितैश्च जठरापूर्तिं चरित्रामृतैः।
रुद्राक्षैर्भसितेन देव वपुषो रक्षां भवद्भावना-
पर्यङ्के विनिवेश्य भक्तिजननी भक्तार्भकं रक्षति ॥ ६२ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -62
ஆநந்தா³ஶ்ருபி⁴ராதநோதி புலகம்ʼ, நைர்மல்யதஶ்சா²த³நம்ʼ,
வாசா, ஶங்க²முகே² ஸ்தி²தைஶ்ச, ஜட²ராபூர்திம்ʼ சரித்ராம்ருʼதை꞉।
ருத்³ராக்ஷைர் ப⁴ஸிதேந தே³வ வபுஷோ, ரக்ஷாம்ʼ ப⁴வத்³ பா⁴வநா-
பர்யங்கே, விநிவேஶ்ய ப⁴க்திஜநநீ, ப⁴க்தார்ப⁴கம்ʼ ரக்ஷதி ॥ (62)
देव! भक्ति-जननी भक्त – अर्भकम् आनंद-अश्रुभिः पुलकम् आतनोति नैर्मल्यतः छादनम् (आतनोति) वाचा-शंख-मुखे स्थितैः चरित्र-अमृतैः जठर-आपूर्तिम् (आतनोति), रुद्र-अक्षैः भसितेन वपुषः रक्षाम् (आतनोति)। भवद्(त्)-भावनापर्यंके विनिवेश्य रक्षति।
जननीवत् भक्तिः भक्तार्भकं रक्षतीत्याह – आनन्दाश्रुभिरिति। हे देव स्वप्रकाश स्वरूप! भक्तिजननी तव भक्तिरेव माता सा भक्तार्भकं भक्त एव अर्भकः शिशुः तं भवद्भावनापर्यङ्के भवतो भावना मनसि धारणं सैव पर्यङ्को मञ्चः तस्मिन् विनिवेश्य शाययित्वा रक्षति अवति। रक्षणप्रकारमाह् – आनन्दाश्रुभिः सन्तोषबाष्पजलैः पुलकं रोमाञ्चं शिशुशरीरे आतनोति विस्तारयति। यथा माता शिशुप्रेमजन्यनेत्रसलिलैः शिशुशरीरपतितैः शिशुशरीरे पुलकमुत्पादयति तथा स्वाश्रयनिष्ठचक्षुर्गलितैः तच्छरीरपतितैः पुलकं जनयतीति भावः। स्वाश्रयभक्त्योरभेदो विवक्षितः। नैर्मल्यतः भक्तशिशुनिष्ठनिर्मलभावेन छादनं शीतमशकादिपीडानिवर्तकं वस्त्ररूपं कवचमातनोति। नैर्मल्यत इत्यत्र सार्वविभक्तिकः तसिः। वाचाशङ्खमुखस्थितैः वाचा वेदादिवाक् हलन्तानां भागुरेर्मुनेः आबन्तत्वस्येष्टत्वात् वाचाशब्दो न शङ्कास्पदः। “वष्टि भागुरिरल्लोप”मिति कारिकाऽत्र प्रमाणम्। सैव शङ्खः तन्मुखस्थितैः तन्निष्ठैः चरित्रामृतैः भवच्चरित्राण्येव अमृतानि क्षीराणि तैः जठरापूर्तिं जठरस्योदरस्य आपूर्तिं समन्तात् पूरणमातनोति। यथा शङ्खस्थितेन पयसा शिशूदरं पूरयति तथा भक्तिजननी पूर्वोक्तलक्षणैः त्वच्चरितामृतैः शिशोः क्षुधानिवृत्तिं संपादयतीति भावः। रुद्राक्षैः भसितेन भस्मना च वपुषः शरीरस्य रक्षाम् आतनोतीति सर्वत्रानुषज्यते। भक्तरक्षणविषये भक्तितुल्या रक्षिका नास्तीति भावः ॥६२॥[1]
[1] रूपकालङ्कारः।
தாயானவள் மகனைக்காத்தல் போலப் பக்தியானது அதையுடையவனைக் காக்கின்றது எனக் கூறுகின்றனர்.
देव - தே³வ – ஹே தேவேச!
भक्तिजननी – ப⁴க்திஜநநீ – பக்தி என்பதே எனது தாயாகும்.
भक्तार्भकम्- ப⁴க்தார்ப⁴கம் – நான் பக்தன் என்ற குழந்தை.
भवद्भावनापर्यङ्के – ப⁴வத்³பா⁴வநாபர்யங்கே – பக்தியென்னும் அன்னை, உம்மைத் தியானித்தல் என்ற கட்டிலில்
विनिवेश्य – விநிவேஶ்ய – படுக்கவைத்து
आनन्दाश्रुभिः – ஆநந்தா³ஶ்ருபி⁴꞉ – ஆனந்தக் கண்ணீர் கொண்டு
पुलकम् – புலகம் – புளகாங்கிதமாகுமாறு குளிப்பாட்டி
नैर्मल्यतः – நைர்மல்யத꞉ – நிர்மலமென்ற
छादनम् – சா²த³நம் – வஸ்திரத்தால் என்னைப் போத்தி
वाचाशंखमुखे स्थितैः – வாசாஶம்ʼக²முகே² ஸ்தி²தை꞉ – வேதவாக்கென்னும் சங்கு கொண்டு
चरित्रामृतैः – சரித்ராம்ருʼதை꞉ – உமது திவ்ய சரிதமென்ற பாலால்
जठरापूर्तिम् – ஜட²ராபூர்திம் – என் வயிற்றை நிறைத்து
रुद्राक्षैः भसितेन – ருத்³ராக்ஷை꞉ ப⁴ஸிதேந – ருத்திராக்ஷம், விபூதி ஆகிய சிவச்சின்னங்கள் கொண்டு
वपुषो रक्षाम् – வபுஷோ ரக்ஷாம் – என் சரீரத்திற்கு இரக்ஷை என்பதை
आतनोति – ஆதநோதி – செய்கிறாள்
रक्षति – ரக்ஷதி – என்னையும் ஸதா காப்பாற்றுகிறாள்
ஏ தயாநிதியே! உலகில் ஒரு தாயானவள் தன் மகனைக் காப்பதுபோல எனது சிவபக்தியெனும் தாயானவள், அவள் அன்பிற்குரிய புத்திரனாகிய எனக்குத் தனது இன்பமாகிய கருணைநிறைந்த கண்ணின் நீராகிய ஆநந்த பாஷ்பத்தால் தலைமுழுக்காட்டி, நிர்மல பாவமாகிய வஸ்திரத்தை யுடுத்தி, வேதமாகிய சங்கைக்கொண்டு, உனது பெருமை வாய்ந்த மங்களகர சரிதங்களாகிய பாலைப் புகட்டி இயைந்த சாதனங்களாகிய விபூதி உத்திராக்ஷங்களால் இரட்சை செய்வித்து உனது தாரக மந்திரமான பஞ்சாக்ஷர தியான ஊஞ்சலில் கண்வளரும் (தூங்கும்) படி செய்து, மகிழ்ச்சியுடனே எனைக் காப்பாற்ற நீர் கருணை புரிவீராக (என்பதாம் ).
சுயம்ப்ரகாச ஸ்வரூபியான ஹே தேவ! பக்தன் ஓரு குழந்தையாகவே இருக்கிறான். அக்குழந்தையிடமுள்ள பக்தியே அவனது தாய். ஒரு தாய் எப்படி எல்லாம் தன் குழந்தையைக் காப்பாற்றுகிறாளோ அது போல பக்தி என்ற தாயும் பக்தனான தன் குழந்தையைப் பேணுகிறாள். உனது திருவுருவ த்யானம் என்ற மஞ்சத்திலே பக்தன் என்ற குழந்தையை பக்தி என்ற தாய் படுக்க வைக்கிறாள். குழந்தையைப் பெற்ற ஒரு தாயினுடைய ஆனந்தக் கண்ணீர் பட்டு குழந்தையின் உடலில் மயிற் கூச்சல் உண்டாகிறது என்பது உலகத்தில் இயற்கை, அது போல பக்தனான குழந்தையின் உடலில் அவனிடமேயுள்ள பக்தி என்ற தாயின் ஆனந்தக் கண்ணீர் வழிந்து சொட்டுகிறது. அதனால் அக்குழந்தையின் உடலில் ரோமாஞ்சம் உண்டாகிறது. கள்ளம் கபடமற்ற நல்ல எண்ணங்களையே இக்குழந்தைக்கு குளிர், கொசு முதலிய உபாதைகள் ஏற்படாதபடி வஸ்த்ரமாக அணிவித்து பாதுகாக்கிறாள் பக்தி என்ற தாய். குழந்தைக்கு பால் புகட்டும் பாலாடை (சங்கு) வேதம் என்ற வாக்கு ஆகிறது. உனது புண்ய சரிதம் என்ற அம்ருதத்தை பாலாகக் குழந்தைக்கு புகட்டி வயிற்றை நிரப்புகிறாள். விபூதியைக் குழந்தையின் உடல் முழுவதும் தடவுகிறாள். ருத்ராக்ஷ மாலையை அதற்கு அணிவிக்கிறாள். இவை குழந்தைக்கு ரக்ஷாகவசமாக ஆகிறது. இவ்விதம் பக்தி என்ற தாய் பக்தன் என்ற குழந்தையை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பதால், ஒரு தாய் எப்படி மூவுலகிலும் சிறந்தவளாக கருதப்படுகிறாளோ அது போல எவ்வுலகிலும் அரியதும், பெரியதும், சிறந்ததும் பக்தி ஒன்றேயாகும்.
பிரியமுள்ள தாய் தன் குழந்தையை வளர்பதுபோல் பக்தியாகிற தாய் பக்தனாகிற குழந்தையை இரக்ஷிக்கிறாள். ஈச்வர தியானமாகிற தொட்டிலில் பக்தனாகிற குழந்தையை தூங்கப் பண்ணுகிறாள். குழந்தையிடமுள்ள அன்பால் தாயாருக்கு ஆனந்தக்கண்ணீர் பெருகி, அது குழந்தையின் உடலில் பட்டு அதனால் மயிர்க்கூச்சல் உண்டாகும். அதுபோல் பக்தனுக்கு ஆநந்தக் கண்ணீர் பெருகி அது அவன் உடலில் விழுந்து அதனால் அவனுடைய மயிர்கள் சிலிர்க்கின்றன. பக்தியையும் பக்தனையும் ஒன்றாகக் கற்பித்து இங்கு பகவத்பாதாள் பேசுகிறார். பக்தனுடைய நல்ல எண்ணங்களாகிற சுத்தமான வஸ்த்திரத்தால் பக்தனைப் போத்துகின்றாள். அதனால் ஈ, எறும்பு, குளிர் இவற்றைப்போல் துன்பத்தை விளைவிக்கக்கூடிய கெட்ட எண்ணங்கள் அவனை அணுகாமலிருக்கின்றன. வேதமாகிற சங்கத்தில் உள்ள பரமேச்வர சரித்திரங்களாகிற பாலை பக்தனுக்கு ஊட்டுகிறாள். ருத்ராக்ஷங்களாலும், விபூதியாலும் உடலுக்கு ரக்ஷாபந்தனம் செய்கின்றாள். பக்தியாகிய அன்னை, பக்தனாகிய குழந்தையை ஒருக்காலும் கைவிடமாட்டாள்.
இந்த ச்லோகத்தில் சொல்லியபடி, விபூதி, ருத்ராக்ஷம் முதலிய சிவச்சின்னங்கள் தரித்து, நிர்மலமான மனத்துடன் கூடி, பஞ்சாக்ஷரத்தை ஜபித்துக்கொண்டு, பரமேச்வரனுக்கு நமஸ்காரம் செய்து சிவபக்தி செய்பவர்கள், தங்கள் வாழ்க்கையில் ஸகல துன்பத்தினின்றும் ரக்ஷிப்படுவார்கள்; அவர்கள் சிவத்யானபரர்களாகவே இருந்து சிவாநந்தத்தை என்றும் அனுபவிப்பார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம்.
देव = हे महादेव !
भक्तिजननी = भक्तिरूप माता,
आनन्दाश्रुभिः = आनन्द के आँसुओं से,
पुलकम् = खुशी की सिहरन,
नैर्मल्यतः = निर्मलता (रूप वस्त्र) से,
छादनम् = आच्छादन,
वाचा = वाणीरूप,
शंखमुखे = शंख के अगले हिस्से में,
स्थितैः = रखे,
चरित्रामृतैः = आपकी कथारूप अमृतराशिओं द्वारा,
जठरापूर्तिम् = पेट भरना,
च = और
रुद्राक्षैः = रुद्राक्ष के दानों द्वारा (व)
भसितेन = भस्मोद्धूलन द्वारा,
वपुषः = शरीर की,
रक्षाम् = रक्षा,
आतनोति = करती है (एवम्)
भवद्भावनापर्यंके = आपका ध्यान करना रूप पलंग पर,
विनिवेश्य = लिटा कर,
भक्तार्भकम् = भक्तरूप बच्ये को,
रक्षति = संभालती है ।
Dr.T.M.P.Mahadevan
O God! The mother, Devotion, protects the child, the devotee, by bathing (thrilling) him in (with) the waters (tears) of bliss, by dressing him in the clothes of purity, by feeding him with the ambrosia of Thy stories contained in the mouth of the conch, the speech, by girding his body with the amulets of Rudra-beads and sacred ash, and by putting him to sleep in the cradle of Thy contemplation.
Devotion is, here, compared to a mother, and the devotee to her child. Devotion invests the devotee with both external indications, and internal characteristics of God-live. Rudraksha beads and sacred ash adorn his body. He relates the legends about Siva, and enjoys listening to them when related by fellow devotees. Tears of joy flow from his eyes. His mind becomes pure. And, he loses himself in divine contemplation.
Of the devotees, the Naradabhakti-sutra (68) says: Conversing with one another with voice chocked, eyes shedding joyful tears, and body thrilled, they purify their families and the entire earth.
Swami Tapasyananda
O Lord! Mother Devotion nurses her baby, the devotee, laying him on the cot of Thy contemplation. She causes him horripilation with tears of joy, covers him with the wrapper of purity, feeds him with the nectar of Thy stories contained in the mouth of the conch (that is the Vedas), and protects his body with the Rudraksha beads and the sacred ashes.
Sivaanandalahari – 62
आनन्दश्रुभिरातनोति पुलकम् नैर्मल्यतच्छादनम्
वाचा शङ्खमुखे स्थितैश्च जठरापूतिम् चरित्रामृतै:
रुद्राक्षैर्भसितेन देव वपुषो रक्षाम् भवद्भावना
पर्यन्के विनिवेश्य भक्तिजननि भक्तार्भकम् रक्षति ॥ ६२ ॥
हे देवा = Hey! ThEjaswaroopanE!
भक्तिजननि = the mother called bhakthi;
भक्तार्भकम् = the child called bhakthaa;
आनन्दश्रुभि: = with the tears of aanandhaa;
पुलकम् = drenched in horripilation;
नैर्मल्यताः = of nirmala manas;
अच्छादनम् = covered by the cloth
वाचाशङ्खमुखे = with the face of sangkhu called vaak;
स्थितै: = that which exists;
चरित्रामृतै: = with the amrutham called your history;
रुद्राक्षै: = with the rudhraakshaas;
भासितेन = with vibhoothis;
वपुषा: = to the body;
रक्षाम् = protecting;
आतनोति = she does (protect);
भवद्भावना पर्यन्के = the crib called dhyaana;
विनिवेश्य = put to lie down;
रक्षति = she protects.
Commentary
காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினு மெய்ப்பொருளாவது
நாதன் நாம நமச்சிவாயமே.
(சம்பந்தர் தேவாரம்)
According to the sookthi ‘कुपुत्रो जायेत क्वचिदपि कुमाता न भवति ‘ there can be wicked kids but not wicked mother. That is why in this sloka bhakthi is portrayed as mother. The mother called bhakthi will never give up on the child called bhakthaa. Even if the child is not a yogyasthan to attain mOksha she would prepare him for that, thus protecting the child. Hey! Swayamprakaasi! Hey! ParamporuLE! The mother called bhakthi with her tears of brahmaanandha is bathing the child called bhakthaa drenching him into a horripilation.
“शिवो दाता शिवो भोक्ता शिवस्सर्वमिदं जगत् |
शिवः सर्वाणि भूतानि शिवादन्यत् न किञ्चन ||”
Mother Bhakthi is donning on this Bhaktha the child the vasthram of manObhaavam that there is nothing beyond Parameswara, that all is Siva only. Moreover, knowing that the child would be hungry and thirsty, mother Bhakthi through the ‘sangku’ called vaak is feeding the milk of your charitham all the time to assuage his thirst and hunger. Also with rudhraaksham and vibhoothi she is relieving the bhaktha of the fears of the world.
Also the saasthraa says:
“नास्ति द्यानसमं तार्थे नास्ति द्यानसमं तपः |
नास्ति द्यानसमो यज्ञः तस्माद्यानं समाचरेत् ||”
There is no theertham greater than sivadhyaanam; there is no greater thapas than sivadhyaanam; there is no yagna higher than sivadhyaanam and so all praaNis should do sivadhyaanam. Only by this sivadhyaanam can one attain nirvikalpa samaadhi and experience the state of ‘SivOham’. That is why the mother Bhakthi puts the child bhaktha in the cradle called sivadhyaanam and protect him, says BhagavatpaadhaaL.
Siva Siva Siva BO!
![]()
