श्रीशिवानन्दलहरी -६० – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -60 – Sri Sivaanandalahari-60

श्रीशिवानन्दलहरी -६०

रोधस्तोयहृतः श्रमेण पथिकश्छायां तरोर्वृष्टितो
भीतः स्वस्थगृहं गृहस्थमतिथिर्दीनः प्रभुं धार्मिकम्।
दीपं सन्तमसाकुलश्च शिखिनं शीतावृतस्त्वं तथा
चेतः सर्वभयापहं व्रज सुखं शम्भोः पदाम्भोरुहम् ॥ ६० ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -60

ரோத⁴ஸ்தோயஹ்ருʼதஶ்꞉ – ஶ்ரமேண பதி²கஶ்ச், சா²யாம்ʼ தரோர்வ்ருʼஷ்டிதோ
பீ⁴தஸ்꞉ ஸ்வஸ்த²க்³ருʼஹம்ʼ, க்³ருʼஹஸ்த²மதிதி²ர், தீ³ந꞉ᳲ ப்ரபு⁴ம்ʼ தா⁴ர்மிகம்।
தீ³பம்ʼ, ஸந்த-மஸாகுலஶ்ச ஶிகி²நம்ʼ, ஶீதா-வ்ருதஸ்-த்வம்ʼ ததா²
சேதஸ் ஸர்வ-ப⁴யாபஹம்ʼ வ்ரஜ ஸுக²ம்ʼ, ஶம்போ⁴꞉ பதா³ம்போ⁴ருஹம் ॥ (60)

 


चेतः! तोय-हृतः रोधः यथा, पथिकः श्रमेण तरोः छायां यथा, वृष्टितः भीतः स्वस्थ-गृहं यथा, अतिथिः गृहस्थं यथा, दीनः धार्मिकं प्रभुं यथा, सन्तमस-आकुलः दीपं यथा, शीत-आवृतः शिखिनं यथा (व्रजति), तथा त्वं सर्व-भय-अपहं शंभोः पद-अंभः-रुहं सुखं व्रज॥



चेतसः सोपमानं शम्भोः पादाम्बुजभजनं विधत्ते – रोध इति। हे चेतः मानस! तोयहृतः तोयेन वेगवता जलेन हृतः आकृष्टः पुरुषः रोधः तीरं यथा व्रजति। पथिकः मार्गगामी श्रमेण ग्लान्या तरोः वृक्षस्य छायाम्‌ अनातपं यथा, वृष्टितः वर्षात्‌ भीतः भयं प्राप्तः पुरुषः स्वस्थगृहं स्वरित्यव्ययम्, सुखेन तिष्ठत्यस्मिन्निति स्वस्थं सुखावस्थानाधिकरणं गृहं यथा, अतिथिः वैश्वदेवान्ते अन्नापेक्षया ग्रामान्तरादागच्छन्‌ पुरुषः गृहस्थं गार्हस्थ्यधर्मयुक्तं संसारिणं यथा, दीनः दारिद्र्यतप्तः पुरुषः धार्मिकं धर्मानुसारिणं प्रभुं दानसमर्थं पुरुषं यथा, सन्तमसाकुलः सन्तमसेन गाढान्धकारेण पीड᳭यमानः दीपं यथा, शीतावृतः शीतेन हिमेन आवृतः व्याप्तः पुरुषः शिखिनम्‌ अग्निं यथा, तथा त्वं सर्वभयापहं सकलभयघनं सुखं सुखकरं शम्भोः शिवस्य पदाम्भोरुहं व्रज प्राप्नुहि। दृष्टान्तभूतार्थजातं तत्तत्सङ्कटमात्रनिवर्तकं, दार्ष्टान्तिकं पदाम्भोरुहं तु सङ्कटसुखयोः निवर्तनप्रवर्तनहेतुत्वात्‌ अवश्यगम्यमिति भावः ॥६०॥


தன் மனத்தைச் சிவன் கழலை நாட நியமிக்கின்றனர்.


चेतः – சேத꞉ – ஏ மனமே

यथा – யதா² – எவ்விதம்

तोयहृतः – தோயஹ்ருʼத꞉ – ஜலத்தின் வேகத்தால் இழுக்கப்பட்டவன் தான் தப்பித்துக்கொள்ள

रोधः – ரோத⁴꞉ – நதிக்கரையடைவானோ

पथिकः – பதி²க꞉ – தூரமாக வழி நடப்பவன்

श्रमेण​ – ஶ்ரமேண – தனக்கு வெப்ப சாந்தியடைய

तरोः – தரோ꞉ – மரத்தினுடைய

छायाम् – சா²யாம் – நிழலையடைவானோ

वृष्टितः भीतः – வ்ருʼஷ்டித꞉ – மழையின் பிரவாகத்தில் நனைந்து துன்பப்படுபவன்

स्वस्थगृहम् – ஸ்வஸ்த²க்³ருʼஹம் – ஒரு சுகமான வீட்டையடைவானோ

अतिथिः – அதிதி²꞉ – ஓர் அதிதி (விருந்தாளி/ஊருக்குப் புதிதாய் வந்தவன்)

गृहस्थम् – க்³ருʼஹஸ்த²ம் – தன்னை ஏற்க எண்ணம் கொண்ட ஒரு கிரஹஸ்தனை நாடுவானோ

दीनः – தீ³ந꞉ – தரித்திரம் என்ற நிலைமையால் வருத்தப்படுபவன்

धार्मिकं प्रभुम् – தா⁴ர்மிகம்ʼ ப்ரபு⁴ம் – உதாரகுணமும் ஈகைக்குணமுமுள்ள வள்ளலைத் தேடுவானோ

संतमसाकुलः – ஸந்தமஸாகுல꞉ – இருட்டிலிருந்துகொண்டு தத்தளிப்பவன், அதை நீக்குவதற்கு

दीपम् – தீ³பம் – விளக்கை அடைவானோ

शीतावृतः – ஶீதாவ்ருʼத꞉ – குளிராலும் பனியாலும் நடுக்கங்கொண்டு துன்பப்படுபவன்

शिखिनं च​ – ஶிகி²நம்ʼ ச – அக்கினியை அடைவானோ

तथा – ததா² – அவ்விதமே

त्वम् – த்வம் – நீயும்

सर्वभयापहम् – ஸர்வப⁴யாபஹம் – சகலவிதமான பயத்தையும் போக்கடிப்பதாயும்

सुखम् – ஸுக²ம் – பரமஸுகத்தை அளிக்கவல்லதாயும் இருக்கின்ற

शंभोः – ஶம்ʼபோ⁴꞉ – பரமசிவனது

पदाम्भोरुहम् – பதா³ம்போ⁴ருஹம் – திருவடித்தாமரையைத்

व्रज​ – வ்ரஜ – நாடித் தேடி அடைவாயாக.


ஏ தீனதயாளுவே! உலகில் ஜலத்தில் அமிழ்ந்து தத்தளிப்பவன் அதன் கரைகளையும், வெயிலால் களைத்தவன் நிழலையும், மழையிலகப்பட்டு வருந்தியவன், வீட்டையும், பசியால் மெலிந்த அதிதியானவன், இல்லறத்தானையும், வறுமையால் பீடிக்கப்பட்டவன், கொடையாளியையும், இருளில் சிக்கி அலைபவன் வெளிச்சத்தையும், குளிரால் கஷ்டப்படுபவன் தீயையும், மிக மிக ஆர்வத்துடன் விரும்பியடைதல்போல, நான், அன்பர்கள் விரும்பியவாறு அனைத்தும் உதவும் நினது அம்புயப் பதத்தைத் தஞ்சமடைந்தேன் ஆதலின், ஆதரிப்பீராக (என்பதாம்).


பெரு வெள்ளத்தில்‌ அகப்பட்டவன்‌ தன்னுயிரைக்‌ காத்துக்‌ கொள்வதற்கு கரை எங்கே எங்கே எனத் தவிக்‌கிறான்‌. அது போலவே வழி நடக்கும்‌ வழிப்‌போக்கன்‌ நடந்து நடந்து களைத்துப்‌ போனதும்‌ ஒரு மரத்தின்‌ நிழலை நாடிச்‌ செல்கிறான்‌. கொட்டும்‌ மழையைக்கண்டு பயப்பட்ட ஒருவன்‌ ஒரு நல்ல வீட்டில்‌ ஒதுங்கிக்‌ கொள்கிறான்‌. ஒரு கிராமத்திலிருந்து புறப்பட்ட ஒரு விருந்தாளி (அதிதி)யானவன்‌ கர்மானுஷ்டான தத்பரனான ஒரு சிறந்த இல்லறத்தானை நாடிச்‌ செல்கிறான்‌. ஏழ்மையின்‌ கொடுமையால்‌ வாடுகின்‌ற ஒருவன்‌ கொடைவள்ளலும்‌ தர்மிஷ்டனுமான ஓரு செல்வந்தனை அடைகிறான்‌. காரிருட்டில்‌ அகப்பட்டுத் தவிக்கின்றவன்‌ வெளிச்சத்தைக் கொடுக்கின்ற விளக்கைத்‌ தேடுகிறான். கடும்‌ குளிரால்‌ நடுங்குகின்ற ஒருவன்‌ குளிர்‌காய்வதற்கு நெருப்பைத்‌ தேடுகிறான்‌. ஹே மனமே/ முன்‌ சொல்லப்பட்டவர்கள்‌ ஒவ்வொருவரும்‌ எப்படியோ அது போல நீயும்‌ ஸ்ரீ பரமேச்வரனின்‌ பாதங்களை நாடு. முன்‌ சொன்னவைகள்‌ யாவும்‌ அநித்யமான ஸுகத்தை மட்டும்‌ தான்‌ அளிக்கும்‌. ஆனால்‌ தாமரை மலர்‌ போன்ற ஸ்ரீ பரமேச்வரனின்‌ திருப்பாதங்கன்‌ இரண்டும்‌ ஸகல பயங்‌களையும்‌ விரட்டி ஸர்வ ஸுகங்களையும்‌ அளிக்கும்‌ வல்லமை பெற்றதாகும்‌. ஆகையால்‌ நீ அத்திருப்பாதங்களையே நாடி அடை.


பிரவாஹத்தில் இழுத்துச் செல்லப்படுகின்றவன் போலவும், மற்றும் திருஷ்டாந்தமாகக் குறிப்பிட்டவர்கள் போலவும், பலவித துன்பங்களால் தவித்துக்கொண்டிருக்கும் நம் மனது, பரமேச்வரனுடைய சரணங்களை பஜித்தால்தான் அதனுடைய கஷ்டங்கள் தீரும்.  உதாரணமாகக் கூறப்பட்ட கரை முதலியவை பிரவாஹத்தில் செல்லுகின்றவன் முதலியவர்களின் அக்காலத்தில் தார்காலிகமாக​ உள்ள துன்பங்களை மட்டும் நீக்ககூடுமல்லாமல், அவர்களுக்கு வேறு சுகத்தை அளிக்கமாட்டா.  ஆனால் ஸ்ரீபரமேச்வர சரணமோ மனதின் துன்பங்களை எல்லாம் போக்கடிப்பது மட்டுமல்லாமல் சாச்வதமான சுகத்தையும் அளிக்கின்றது என்பது விசேஷம். அதாவது, ஹே மனமே! சத்ருபயம், மரணபயம், பவபயம் இன்னும் அநேகவித பயங்களெல்லாவற்றையும் சம்புவினுடைய பாதமானது அபகரித்து விடுகிறது, அது மாத்திரமல்ல, மோக்ஷ சுகத்தை அளிப்பதற்குத் தகுதியான புண்ணியத்தையும் உண்டுபண்ணி விடுகிறது. இதனால், ஸர்வ சங்கட நிவர்த்தனம், ஸர்வ ஸுக ப்ரவர்த்தனம் – என்ற இரண்டுவிதமான அனுகிரஹத்தையும் செய்துவிடுகிறது. ஆகையினால் இனியாவது நீ சம்புவினுடைய பாதாப்ஜத்தை அடைந்து ஜென்மாவை ஸபலம் செய்துகொள் – என்பதைத்தான் – ஸர்வ-பயாபஹம்ʼ வ்ரஜ ஸுக²ம்ʼ, ஶம்போ⁴꞉ பதா³ம்போருஹம் – என்று பகவத்பாதாள் வர்ணிக்கிறார்கள். இந்த ச்லோகத்தின் ஸாராம்சம் என்னவென்றால், சம்புவினுடைய பாதகமலங்கள் புக்தியையும், முக்தியையும் அளிக்கவல்லது என்பதாம். அதனால் மிகவும் அரிதான மனிடப்பிறவியை அடைந்த நாம், ஸதாகாலமும் பரமேச்வரனின் பாத கமலங்களிலேயே நம் மனதை லயிச்க்கச் செய்யவேண்டும். இந்த ச்லோகத்தைச் சொல்லி நமஸ்கரிப்பவர்கள் ஸகலவித பயத்தினின்று விடுபட்டு, காலக்கிரமத்தில் அஹம் ப்ரஹ்மாஸ்மி என்ற திவ்ய ஞானத்தை அடைவார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம். இது சத்தியம்.


(यथा = जैसे),
तोयहृतः = जल द्वारा बहाकर ले जाया गया व्यक्ति,
रोधः = किनारे की ओर (जाता है),
श्रमेण = परिश्रम से (थका),
पथिक = यात्री,
तरोः = पेड की,
छायाम्‌ = छाया में (जाता है),
वृष्टितः = बरसात से,
भीतः = डरा व्यक्ति,
स्वस्थगृहम्‌ = पक्के मकान में (जाता है),
अतिथि = सदा पर्यटन करने वाला,
गृहस्थम्‌ = सद्गृहस्थ के पास (जाता है),
दीनः = गरीब आदमी,
धार्मिकम्‌ = धर्मभीरु,
प्रभुम्‌ = दानवीर के पास (जाता है),
सन्तमसा = घने अंधेरे से,
आकुलः = परेशान व्यक्ति,
दीपम्‌ = दीपक के पास (जाता है,
च = और,
शीतावृतः = ठण्ड से पीडित व्यक्ति
शिखिनम्‌ = आग के पास (जाता है)
तथा = ऐही,
चेतः = हे मन !
त्वम्‌ =तुम,
सर्वभयापहम्‌ = सब भयों का अपहरण करने वाले,
शम्भोः = शम्भु के,
पदाम्भोरुहम्‌ = चरण कमल को,
सुखम्‌ = आराम से (निश्चिन्त होकर)
व्रज = जाओ ।

 


Dr.T.M.P.Mahadevan

Just as a man being dragged by a current of water seeks to reach the shore, a tired traveler the shade of a tree, the one afraid of rain the shelter of his house, a guest the house-holder, the one who is poor the philanthropic gentleman, the one who is troubled by dense darkness a lamp, and the one who is afflicted by cold, fire, even so, O mind, reach with ease the lotus-feet of Sambhu that can drive away all fear!

Some more similes, to explain the need for the soul to seek shelter at the feet of the Lord. In each of the pairs, there is the relation of the protected and the protector, the sheltered and shelter, the saved and savior. There are bitter situations from which one may want to be saved; in each case, one longs for that which will save him. A person caught in a rushing stream will find safety if he manages to reach the shore. A weary traveler will be on the look-out for the shade of a tree. A man drenched in rain will want to take shelter in a house. A mendicant will go to a house-holder for alms. A poor man will seek the patronage of a rich person who is generous. The one who gropes in the dark will badly need a lamp. A person in freezing cold will endeavor to reach fireside. Similarly, the one who wants to gain freedom from fear should take refuge in the Lord. And, who is there that does not want to get rid of fear?

Swami Tapasyananda

A man caught in a current seeks the shore; a tired traveller, the shade of trees; one caught in rain his comfortable home; a man in quest of hospitality, a householder; a poverty-stricken person a charitable and wealthy man; a man in dense darkness, a lamp; and one exposed to cold, a well-rired hearth. In the same way, O my mind, seek the lotus feet of Siva – the feet that destroy all fears.


Sivaanandalahari – 60

रोधस्तोयह्त: श्रमेन पथिकश्छायां  तरो वृष्टितो
भीत: स्वस्थगृहं  गृहस्थमतिथिर्दीन: प्रभुं  धार्मिकम् |
दीपं  सन्तमसाकुलश्च शिखिनं  शीतावृतस्त्वम् तथा
चेत: सर्वभयापहम् व्रज सुखं शम्भो: पदाम्भोरुहम् ॥ ६० ॥

Commentary

हे चेतः  = Hey! Mind!
तोयह्त: = a man pulled by the swift current;
रोध: = the bank of the river;
पथिक: = vazhippOkkan; traveller;
श्रमेन = by tiredness;
तरो: = of a tree;
श्छायां = shade;
वृष्टित: = rain;
भीत: = afraid of;
स्वस्थगृहं = own house;
अतिथि: = the guest;
गृहस्थं  = samsaari; householder;
दीन: = the poor man;
प्रभुं = rich giver;
सन्तमसा = by the darkness;
आकुल = troubled;
दीपं = light;
शीतावृत: = who is suffering from cold;
शिखिनं च  = fire;
यथा  = that way he surrenders;
तथा = that way;
त्वं  = you;
सर्वभयापहम् = removing all fears;
सुखं = that is of nithya sukhaswaroopam;
शम्भो: = Sambu the cause of that Sukham;
पदाम्भोरुहम् = lotus like feet;
व्रज = reach.

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.
(திருக்குறள்)

O! Mind!

A man being drawn away by the swift currents of a surging river finds the bank and gets over his fear of drowing. A man walking on a hot dessert for a very long time finds an oasis and shade of a tree to escape from thirst and scorching sun. A hungry man finds a dhaarmic grihasthaa who follows:

संध्या स्नानं जपो होमो देवतानां च पूजनम् |
आतिथ्यं वैस्वदेवं च षट्कर्माणि दिने दिने ||

and gets a great meal to satisfy his hungy stomach. A man of poverty reaching a prabhu who is the ‘दीनान दानेन राघव: |’ and gets over his wants.  A man lost in terrible darkness finds light to overcome his fears. A man shivering in cold weather finds heat to get over his fear of being fronzen.  Therefore O! Mind! You should find the feet of Shiva and surrender there to get over the endless death you suffer in samsaara.  Do not indulge in the kutharkam such as “Haribrahmaathi devathaas are there and I can reach them to remove my fear.  What logic is there that I can overcome fear only at the feet of ParamEswara.”  You do not know what these holy feet of mahaakailaasaadhipathi Sambhu can do.  O! Mind! Let me tell the paadha mahimaa of Sambhu.  Listen to me patiently.

O! Mind!  Agni has the only sakthi to generate heat.  It does not have the sakthi to give the coolness of the moon.  Likewise the Brahmaathi devathaas have the ability only remove your fear.  However they will test you in so many ways to see if you have deep bhakthi for them. On the other hand Sambhu’s feet not only removes your troubles but also gives paramasukham.  That is, O! Mind! chathrubhayam, maraNabhayam, bhavabhayam and so many other bhayams are removed by Sambhu’s feet.  Not only that, these holy feet create in you the puNyas needed for mOkshasukham and they can immerse you in the endless ocean of Aanandha! Thus Sambhu’s feet hold the two sakthis called sarvasankata nivardhanam and sarvasukha pravardhanam.

O! Mind! When MaarkandEya who was afflicted by the fear of death hugged the Sivallingam and cried “Hey! ChandrasEkhara!Hey! ChandrasEkhara! Save me! Save me!”, ParamEswara not only released him from mruthyubhayam but made the saasthra “जातस्य हि धृवो मृत्युःधृवं जन्म मृतस्य च |” ineffective.  This sasthra says that everyone who is born should die but in the case of MarkandEya, Siva made him Chiranjeevi!  Is not this mrithyunjaya leela alone is enough to prove his two sakthis – sarvasankata nivardhanam and sarvasukha pravardhanam?  Therefore O! Mind! atleast hereafter reach Sambhu’s paadhaabjam and get your janma साफल्यं.  Bhagavathpaadhaal describes only this mahimaa of Sambhu’s paadhaabjam in this sloka as: ‘सर्वभयापहम् व्रज सुखं शम्भो: पदाम्भोरुहम्’.  The saaraamsam of this sloka is that Sambhu’s paadhakamalam brings bukthi and mukthi.

SambO Siva SambO!

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading