श्रीशिवानन्दलहरी -५९ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -59 – Sri Sivaanandalahari-59

श्रीशिवानन्दलहरी -५९

हंसः पद्मवनं समिच्छति यथा नीलाम्बुदं चातकः
कोकः कोकनदप्रियं प्रतिदिनं चन्द्रं चकोरस्तथा।
चेतो वाञ्छति मामकं पशुपते चिन्मार्गमृग्यं विभो
गौरीनाथ भवत्पदाब्जयुगलं कैवल्यसौख्यप्रदम् ॥ ५९ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -59

ஹம்ʼஸ꞉ᳲ பத்³மவநம்ʼ ஸமிச்ச²தி யதா², நீலாம்பு³த³ம் சாதக꞉,
கோக꞉ᳲ கோகநத³ப்ரியம்ʼ ப்ரதிதி³நம்ʼ, சந்த்³ரம்ʼ சகோரஸ்ததா²।
சேதோ வாஞ்ச²தி மாமகம்ʼ பஶுபதே, சிந்மார்க³-ம்ருʼக்³யம்ʼ விபோ⁴
கௌ³ரீநாத², ப⁴வத்பதா³ப்³ஜயுக³லம்ʼ கைவல்ய ஸௌக்²யப்ரத³ம் ॥ (59)

 


पशुपते! विभो! गौरी-नाथ! यथा हंसः पद्म-वनं समिच्छति, चातकः नील-अंबुदं (समिच्छति), कोकः कोकनद-प्रियं प्रतिदिनं (समिच्छति), चकोरः चंद्रं (समिच्छति), तथा मामकं चेतः चित्‌-मार्ग-मृग्यं कैवल्य-सौख्य-प्रदं भवत्‌-पद-अब्ज-युगलं वांछति॥



सोपमानं त्वत्पादारविन्दभजनं मन्मनो वाज्छतीति प्रार्थयते – हंस इति। हे पशुपते! हे विभो! हे गौरीनाथ! हंसः पद्मवनं कमलषण्डं यथा समिच्छति वाञ्छति, चातकः जलदोत्सृज्यमानोदकबिन्दूनपेक्षमाणः पक्षिविशेषः नीलाम्बुदं वर्षुकं मेघं यथा वाञ्छति समिच्छति, कोकः चक्रवाकः कोकनदप्रियं पद्मबन्धुं सूर्यमित्यर्थः, यथा समिच्छति, चकोरः चन्द्रकिरणभुक्‌ पक्षिविशेषः चन्द्रं यथा समिच्छति, तथा मामकं मदीयं चेतः चित्तं चिन्मार्गमृग्यं चिन्मार्गेषु उपनिषत्सु मृग्यमन्वेषणीयं कैवल्यसौख्यप्रदं कैवल्यम्‌ केवकं निर्गुणं ब्रह्म तस्य भावः तत्त्वं तदेव सौख्यं सुखं तत्‌ प्रददातीति तत्प्रदं भवत्पादाब्जयुगलं भवतः पदे अब्जे इव भवत्पादाब्जे तयोर्युगलं वाञ्छति अभिलषति। स्पष्टार्थोऽयम्‌ ॥५९॥


எங்ஙனம் ஹம்ஸம் முதலிய பக்ஷிகள் கமலத்தை விரும்புமோ, அங்ஙனமே என் மனம் சிவபதமலரை விரும்புகிறது என்கிறார்.


पशुपते – பஶுபதே – ஹே பசுபதே!

विभो – விபோ⁴ – ஸர்வவியாபீ

गौरीनाथ ​- கௌ³ரீநாத² – பார்வதி நாதரே!

यथा – யதா² – எவ்விதம்

हंसः – ஹம்ʼஸ꞉ – அன்னபக்ஷியானது

पद्मवनम् – பத்³மவநம் – தாமரைப் பூக்கள் நிறைந்த ஓடையையும்,

चातकः – சாதக꞉ – ஸாதகபக்ஷியானது (இது மேகத்திலிருந்து ஜலம் பூமியில் விழுவதற்கு முன்பே அந்த ஜலத்தை உட்கொள்ளும் சுபாவமுள்ளது)

नीलाम्बुदम् – நீலாம்பு³த³ம் – கருத்த மழையுள்ளமேகத்தையும்

कोकः – கோக꞉- சக்ரவாகபக்ஷியானது (இது இரவில் துணை பிரிந்து சூரியனையே நாடி நிற்பது)

कोकनदप्रियम् – கோகநத³ப்ரியம் – சூரியனையும்,

चकोरः – சகோர꞉ – சகோரபக்ஷியானது (இது சந்திரகிரணங்களை புசிக்கும் ஸ்வபாவமுள்ளது)

चन्द्रम् – சந்த்³ரம் – சந்திரனையும்

प्रतिदिनम् – ப்ரதிதி³நம் – தினந்தோறும்

समिच्छति – ஸமிச்ச²தி – விரும்புகின்றதோ

तथा – ததா² – அவ்விதமே

मामकं चेतः – மாமகம்ʼ சேத꞉- என் மனம்

चिन्मार्गमृग्यम् – சிந்மார்க³ம்ருʼக்³யம் – உபநிடதங்களால் தேடியடையக் கூடியதும்

कैवल्यसौख्यप्रदम् – கைவல்யஸௌக்²யப்ரத³ம் – கைவல்லியம் என்ற பரமஸுகத்தைக் கொடுக்கக்கூடியதுமான

भवत्पदाब्‍जयुगलम् – ப⁴வத்பதா³ப்³ஜயுக³லம்- உமது திருவடித் தாமரைகளிரண்டையும்

वाञ्छति – வாஞ்ச²தி – விரும்புகிறது.


ஓ கௌரிக்கேள்வனே! இந்நிலவுலகில் எங்ஙனம் உயர்ந்த பக்ஷிகளாகிய அன்னம், தாமரை நிறைந்த தடாகத்தையும், சாதகப் புள், மேகத்தையும், சக்கிரவாகப் பட்சி, சூரியனையும், சகோரப் பறவை, சந்திரனையும், எப்போதும் இன்றியமையாது விரும்பி வாழ்கின்றனவோ, அங்ஙனமே எனதுள்ளமானது, நான்கு வேதங்களெனும் நற்பிரமாணங்களால் நனியெடுத்தியம்பும் கேவல நிர்க்குண பிரம்ம நிலையாகிய சுகவடிவத் தன்மையை யருளும் தேவரீரது திருவடித்தாமரைகளையே, மிகுந்த ஆர்வத்துடன் அவாவி நிற்பதால், அருட்சத்தியுடன் கூடிவிளங்கும் அருளாளனாகிய நீங்கள், அடியேனை யாதரித்து ஆட்கொள்ளல் வேண்டும் (என்பதாம்).


ஸகல ஜீவராசிகளுக்கும்‌ பதியான ஹே பசுபதே! தாமரை மலர்கள்‌ நிறைந்த தடாகத்தை அன்னப்‌ பறவைகள் விரும்புகின்றன. அத்தாமரைகள்‌ அவைகளுக்கு ஸுகத்தை அளிக்கின்றன. அதுபோல ஸுகத்தை அளிக்‌கின்ற உனது திருவடித்‌ தாமரைகளை எனது மனம்‌ விரும்புகிறது. சாதகம்‌ என்பது ஓரு பறவை. அது மழை ஜலத்தை பருகி ஸுகத்தை அடைகிறது. அதற்காக அது நீருண்ட மேகத்தை விரும்புகிறது. ஹே எங்கும்‌ நிறைந்த ஈசா! அதுபோல, ஸகல ஸுகத்தையுமளிக்கின்ற உனது தாமரையடிகளை எனது மனம்‌ விரும்புகிறது. கோக: என்பது சக்ரவாகப்பக்ஷி, இப்பக்ஷிக்கு சூரியன்‌ ஆனந்‌தத்தைத் தருகிறான்‌. ஆகையால்‌ சக்ரவாகம்‌ அவனை விரும்புகிறது. அது போலவே ஆனந்த தாயகமான உனது திருவடித்தாமரைகளை எனது மனம்‌ விரும்புகிறது சகோரம்‌ என்பது மற்றொரு பக்ஷி. நிலவின்‌ ஒளியை உணவாகக்‌ கொள்வதால்‌ சந்திரனை இது மிகவும்‌ விரும்புகிறது. அது போலவே ஹே உமாபதியே! உபநிடதங்‌களில்‌ தேடி அறியக்‌ கூடியதும்‌ நிர்குணப்ரஹ்மானந்தானுபவத்தை மட்டுமே அளிக்க வல்லதுமான உனது திருவடித்‌தாமரைகள் இரண்டையும்‌ எனது மனமானது விரும்புகிறது.


அன்னப்பறவை முதலியவைகள் தாமரைவனம் முதலியவற்றை அடையாதுபோனால் எவ்விதம் ஸுகத்தைப் பெறமுடியதோ அவ்விதமே பரமேச்வரனுடைய சரணாரவிந்தத்தை பஜிக்காதவரை மனதிற்கு சாச்வத சுகமிராது என்பது கருத்து. பரமேச்வரனது திருவடித் தாமரையானது ஸகல ஆநந்தத்திற்கும் மேலான ஆநந்தமான மோக்ஷ ஸுகத்தை அளிக்கின்றதாக விளங்கி வருகிறது. அந்த பாதாப்ஜங்களை வேதங்களுடைய சிகரமான உபநிஷத்துக்களில் சென்றுதான் கண்டுபிடிக்க வேண்டும். ஹே கௌரீபதே! எனது மனமும் ஸதாகாலமும் உன்னுடைய ம்ருதுவானதும், எல்லையற்ற பேரின்பத்தை அளிக்கின்றதுமான இரண்டு பாதாப்ஜங்களையே ஸதா இச்சிகின்றது – என்று பகவத்பாதாள் பரமேச்வரனிடம் ப்ரார்த்திக்கின்றார்கள். மேலும் சிவசக்திகளை ஒருகாலத்திலும் பிரித்து உபாசனை செய்யக்கூடாது என்ற தத்துவத்தை ‘கௌரீநாத’ என்ற ஸம்போதனையால் ஆச்சார்யாள் உபதேசிக்கின்றார். இந்த ச்லோகத்தைச் சொல்லி பார்வதீபரமேச்வரர்களை நமஸ்கரிப்பவர்கள், அம்மையப்பர்களின் அருளால் சிவாநந்தத்தில் லயிப்பார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம்.


पशुपते = हे पशुपति !
विभो = हे व्यापक परमेश्वर !
गौरीनाथ = हे गिरिजाधीश !
यथा = जैसे,
हंसः = हंस,
पद्मवनम्‌= कमलसमूह की,
चातकः = चातक पक्षी,
नीलाग्बुदम्‌ = श्यामवर्ण मेघ की,
कोकः = चक्रवाक पक्षी,
कोकनदप्रियम्‌ = कमल के प्रिय सूर्य की,
चकोरः = चकोर पक्षी,
चन्द्रम्‌ = चन्द्र की,
प्रतिदिनम्‌ =रोज,
समिच्छति = उत्कट इच्छा रखता है,
तथा = वैसे,
मामकम्‌ = मेरा,
चेतः = हदय,
चिन्मार्गमृग्यम्‌ =ज्ञानरूप मार्ग से दूँडे जा सकने वाले,
कैवल्यसौख्यप्रदम्‌ = मोक्षरूप सुख देने वाले,
भवत्पदाब्जयुगलम्‌ = आपके चरणकमलद्वय की,
(प्रतिदिनम्‌ =निरन्तर)
वाञ्छति = उत्कट इच्छा करता है ।

 


Dr.T.M.P.Mahadevan

O Lord of souls! O, the all-pervading One! O Consort of Parvati! Just as the swan longs for the lotus-tank, the chataka bird for the dark rain-clouds, the cakravaka bird for the sun, and the cakora bird for the moon, so does my mind long for Thy lotus-feet which are to be reached through the path of knowledge, and which yield the bliss of perfection.

Some similes are given here for the longing of the devotee’s heart for God. In each of the pairs mentioned, the lower member cannot do without the higher member; it is dependent on, and is devoted to the other. The pairs are these: the swan and the lotus-tank, the cataka bird and the rain-cloud, the cakravaka bird and the sun, the cakora bird and the moon. Here, we have four species of birds; each longs for the member mentioned along with it. The swan subsists on the lotus-stalks. The cataka bird, as we have already seen, is said to live by drinking rain-drops. The cakravaka couples, it is believed, are separated and mourn during night; hence, their longing for the sun. The cakora bird is supposed to subsist on the moon-beams. Likewise is the devotee’s heart on the feet of the Lord.

Swami Tapasyananda

O Lord of all! Thou all-pervading one! Thou lord of Gauri! Just as the swan seeks the lake abounding in lotus flowers; the Cataka bird, the rain cloud; the Cakravaka bird, the sun; and the Cakora, the moon – so my heart longs for the lotus feet of Thee who shouldst be searched for in the Upanishads and who bestowest the bliss of final liberation.
(According to the well-known convention in Sanskrit poetry, the swan subsists on lotus stalks, the Cataka on fresh rain drops, and Cakora on moon beams. So they long for these substances. The Chakravaka couples are separated during nights and long for sunrise. The devotee longing for the Lord is compared to the longings of these birds)


Sivaanandalahari – 59

हम्स: पद्मवनं  समिच्छति यथा नीलाम्बुदं  चातक:
कोक: कोकनदप्रियं प्रतिदिनं  चन्द्रं चकोरस्तथा |
चेतो वान्छति मामकं  पशुपते चिन्मार्गमृग्यम् विभो
गौरीनाथ भवत्पदाब्जयुगलम् कैवल्यसौख्यप्रदम् ॥ ५९ ॥

Commentary

हे पशुपते ! = Hey! ParamEswara!
हे विभो !  = who is all pervading;
हे गौरिनाता ! = Hey! PaarvathipathayE!
हम्स: = the swan;
पद्मवनं = the crowd of lotuses;
चातक: = chaathaka pakshi;
नीलाम्बुदं = thick black water laden cloud;
कोक: = chakravaaka pakshi;
कोकनदप्रियं = soorya the lord of lotuses;
चकोर: = chakOra pakshi;
चन्द्रं = chandra;
प्रतिदिनं = daily;
यथा = how;
समिच्छति = liking;
तथा  = that way;
मामकं = my;
चेत: = mind;
चिन्मार्गमृग्यम् = that can be found in the upanishads;
कैवल्यसौख्यप्रदम् = that which gives mOkshasukham;
भवत्पदाब्जयुगलम्= your two paadhaabja saranaas;
वान्छति= fondly seeks.

சருகுசல பட்சணிக ளொருகோடி யல்லால்

சகோரபட் சிகள்போலவே
தவளநில வொழுகமிர்த தாரையுண் டழியாத
தன்மைய ரனந்தகோடி
இருவினைக ளற்றிரவு பகலென்ப தறியாத
ஏகாந்த மோனஞான
இன்பநிட் டையர்கோடி மணிமந்த்ர சித்திநிலை
எய்தினர்கள் கோடிசூழக்
குருமணி யிழைத்திட்ட சிங்கா தனத்தின்மிசை
கொலுவீற் றிருக்கும்நின்னை
கும்பிட் டனந்தமுறை தெண்டனிட் டென்மனக்
குறையெலாந் தீரும்வண்ணம்
மதுமல ரெடுத்துனிரு தாளையர்ச் கிக்கவெனை
வாவென் றழைப்பதெந்நாள்
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மெளன குருவே.

Hey! GowripathE! Just as the Hamsa pakshi likes to live in the padmavanam to be in the midst of the lotus flowers,  just as the chaathaka pakshi that has the mouth on its head thus being unable to eat on its own and is waiting for the nectar like rain drops to come from the sky and thus yearns for the water laden dark clouds, just as the chakravaaka pakshi that attains inexplicable aanandha at the arrival of the sun in the morning remains in unbearable dhukkam all night craving for the  sunrise and just as the sakOra pakshi whose food is the ray of the moon and thirsts for the moon to come out – my heart hankers for your paadhaabjam that gives mOkshasukham.  Hey! PasupathE!  How can I describe the mahima of your lotus feet?  As the sruthi says:

एतस्यैवानन्दस्य अन्यानि भूतानि मात्रामुपजीवन्ति | (Brihadaranyakopanishad)

your paadhaabhjam gives mOkshasukham that is superior to all other aanandha.  Those paadhaabhjam can be found only on the peaks of the vedas called upanishads. Not by any other way.  Hey! GowripathE! My mind is fervently seeking all the time your two paadhaabjam that can be searched only in the upanishads because they give mOksha saamraajya sukham. Hey! ParamEswara!  I have already told you of my state of mind by many examples.  By your superior kindness please do the aruL of giving me the limitless aanandha.  Hey! ParamporuLE!  Hey! Sarvavyaapi!  Is there any kaaryam that you cannot do?  All abilities reside only in you.  The swabhaavam to protect the dheena janas and saadhu janas reside only in you.  Are you not the phaladhaathaa of all my karmas?  Does not the Brahmasoothra “फलमतः उपपत्तेः” point to only you as the karma phala dhaatha?  Because you are karma phala dhaatha you are called pasu paasa vimOchakan.  Therefore Hey! PasupathE! Hey! VibhO! You have to protect me with your enormous kaaruNyam.

In this sloka, BhagavathpaadhaaL underlines the forbidance of separating Siva and Shakthi by his exclamation ‘Gowrinaatha!’.

Gowrinaathaa namO namO!

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading