श्रीशिवानन्दलहरी -५८
एको वारिजबान्धवः क्षितिनभोव्याप्तं तमोमण्डलं
भित्त्वा लोचनगोचरोऽपि भवति त्वं कोटिसूर्यप्रभः।
वेद्यः किं न भवस्यहो घनतरं कीदृग्भवेन्मत्तम-
स्तत्सर्वं व्यपनीय मे पशुपते साक्षात्प्रसन्नो भव ॥ ५८ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -58
ஏகோ வாரிஜபா³ந்த⁴வ꞉ க்ஷிதிநபோ⁴ வ்யாப்தம்ʼ தமோமண்ட³லம்ʼ
பி⁴த்வா லோசநகோ³சரோ(அ)பி ப⁴வதி த்வம்ʼ கோடிஸூர்யப்ரப⁴꞉।
வேத்³ய꞉ᳲ, கிந்ந ப⁴வஸ்யஹோ க⁴நதரம்ʼ கீத்³ருʼக்³, ப⁴வேந்மத்தம: (ஸ்)-
தத்ஸர்வம்ʼ வ்யபநீய மே பஶுபதே, ஸாக்ஷாத் ப்ரஸந்நோ ப⁴வ ॥ (58)
पशु-पते! वारि-ज-बान्धवः एकः (सन्) क्षिति-नभः-व्याप्तं तमः+मंडलं भित्त्वा लोचन-गोचरः अपि भवति। त्वं कोटि-सूर्य-प्रभः (सन्) वेद्यः किं न भवसि? अहो! घनतरं मत्-तमः कीदृक् भवेत्? तत् सर्वं वि+अप-नीय साक्षात् मे प्रसन्नः भव।
अज्ञानरूपप्रतिवन्धभेदनपूर्वकं पशुपतिसाक्षात्कारं प्रार्थयते – एक इति। हे पशुपते अज्ञानवारक। वारिजबान्धवः पद्मबन्धुः एकोऽद्वितीयः सन् क्षितिनभोव्याप्तं क्षितिर्भूमिः नभ आकाशं च क्षितिनभसी ते व्याप्तं व्याप्य स्थितं तमोमण्डलम् अन्धकारसमूहं भित्त्वा छित्त्वा लोचनगोचरोऽपि चक्षुर्विषयोऽपि भवति। त्वं तु कोटिसर्यप्रभः अपरिमितसूर्याणां प्रभेव प्रभा यस्य तथोक्तः। त्वं वेद्यः ज्ञानविषयः किं न भवसि किमिति न भवसि? घनतरमतिशयेन सान्द्रमपि मत्तमः मम अज्ञानरूपं तमः कीदृक् त्वं वा कियतीत्यर्थः। तत् तस्मात् सर्वं कृत्स्नं पूर्वोक्तं तमः व्यपनीय अपनोद्य साक्षात् प्रत्यक्षः प्रसन्नः अनुग्राहकश्च भव एधि। एकस्मिन्नेव सूर्ये सकलजनप्रत्यक्षे समस्ततमोभेदिनि च सति तत्कोटिसदृशस्त्वम् अप्रत्यक्षः अतमोभेदी च भवसीति यत् तत् चित्रम्। तस्मात् प्रत्यक्षः तमोनिवर्तकश्च भवेति भावः ॥५८॥1
1 विषमालङ्कारः, विभावनालङ्कारश्च । “विषमा वर्ण्यते यत्र घटनाऽननुरूपयोः” इति विषमालङ्कारलक्षणम्।
தான் மன இருளை நீக்கிப் பிரத்யக்ஷமாகும்படி சிவபெருமானை வேண்டுகின்றனர்.
पशुपते – பஶுபதே – ஹே பசுபதே!
वारिजबान्धवः – வாரிஜபா³ந்த⁴வ꞉ – தாமரைக்கு பந்துவான சூரியன் என்ற
एकः – ஏக꞉ – ஒருவனே
क्षितिनभोव्याप्तम् – க்ஷிதிநபோ⁴வ்யாப்தம் – ஆகாயம் பூமி முதலானவைகளை மூடிக்கொண்டிருக்கும்
तमोमण्डलम् – தமோமண்ட³லம் – இருளின் படலத்தை
भित्वा – பி⁴த்வா – போக்கடித்து
लोचनगोचरोपि – லோசநகோ³சரோபி ப்ரத்யக்ஷமாக ஒளியோடு கண்ணிற்குத் தோன்றுகிறவனாகவும்
भवति- ப⁴வதி – இருக்கிறான்.
त्वम् – த்வம் – தாங்களோ
कोटिसूर्यप्रभः – கோடிஸூர்யப்ரப⁴꞉ – கோடி ஸூர்யர்களின் பிரகாசத்தைக் கொண்டவர். (அப்படிப்பட்ட தாங்கள்)
वेद्यः किं न भवसि – வேத்³ய꞉ கிம்ʼ ந ப⁴வஸி – என்னால் அறியத்தக்கவனாக ஏன் ஆகவில்லை?
अहो – அஹோ – இதை நினைக்க நினைக்க ஆச்சரியம் உண்டாகிறது.
घनतरम् अपि – க⁴நதரம் அபி – என் மனத்திலுள்ள மிகவும் கெட்டியாக இருக்கும்
मत्तमः – மத்தம꞉- – என்னுடைய அஜ்ஞானமென்ற இருள்
कीदृग्भवेत्? – கீத்³ருʼக்³ப⁴வேத்? – எப்படிப்பட்டதாக இருக்கிறது?
तत् – தத் – ஆகையால்
सर्वम् – ஸர்வம் – என் அஜ்ஞான இருள் முழுவதையும்
व्यपनीय - வ்யபநீய – ஒழித்து
मे – மே – எனக்கு
साक्षात्प्रसन्नो भव - ஸாக்ஷாத்ப்ரஸந்நோ ப⁴வ – நான் பார்க்கும்படி பிரத்யக்ஷமாகவும், அருள் புரிகின்றவராகவும் தாங்கள் ஆக வேண்டும் (அது உமக்கு முடியாத காரியமா?) ஆதலால் கனமான என்மனதில் தேவரீர் தங்கவேண்டுகிறேன்.
ஹே ஞானபாநுவே! உலகில் ஒரு சூரியன் உதயமாகி இவ்வுலகினுடன் ஆகாயத்தையும் சூழ்ந்துள்ள இருட்படலங்களை இமைப்பொழுதில் போக்கி, உலகப்பொருள்களுடன் தனது உருவத்தையும் யாவரும் எளிதில் உணருமாறு ஒளிர்தல் உலகப் பிரசித்தமாம். நீவிர் கோடிக்கணக்கான சூரியப் பிரகாசத்தைப்பெற்ற, மங்களகரமுற்ற சிவஜோதி என்பது சாஸ்திரப் பிரசித்தமாயிருந்தும், அடியேன் அஞ்ஞானத்தை நீக்கி உருவம், உருவருவம், அருவம் என்னும் முச்சொரூபங்களையும் முறையே தரிசிப்பிக்கச் செய்யாததற்கு காரணம் யாதோ? தாங்கள் தயாநிதியாயும், பரமகுருவான தக்ஷிணாமூர்த்தியாயும் இருத்தலின், இனி தாமதமின்றி எனை உய்விக்கும் உபாயம் அருள்வீராக (என்பதாம்).
அறியாமை என்ற கூரிருட்டை அகற்றும் ஆற்றல் பெற்ற பேரொளிப்பிழம்பாக ப்ரகாசிக்கின்ற ஹே பசுபதே! நீரில் எழிலுடன் மலர்ந்திருக்கின்ற தாமரைமலரின் மணாளனாக வர்ணிக்கப்படுகின்ற சூரியன் ஒருவனே இப்புவியையும் வானத்தையும் கவ்விக் கொண்டிருக்கின்ற இருளின் குவியலை தன் பேரொளியால் பிளந்து தள்ளி ஸகல ப்ராணிகளுடையவும் கண்முன் காட்சி தருகிறானல்லவா. அவனைப்போல நீ ஏனோ காட்சி தருவதில்லை. நீயோவென்றால் இந்த சூரியனைப் போல கணக்கிட முடியாத அளவு கோடி சூரியர்களின் ஒளியையுடையவனாயிற்றே! நீ ஏன் எனக்கு புலப்படாதவனாகவே இருக்கிறாய். இது ஓர் பேராச்சரியமே. ஒரு வேளை எனது அறியாமை என்ற இருளானது எப்படிப்பட்டதோ! அந்த இருளைவிட இந்த இருள் மிக மிகப் பெரிதோ என்னமோ! எப்படி இருப்பினும் கோடி சூரியர்களூடைய ப்ரகாசத்திற்கு ஒப்பான நீ எனது அஞ்ஞானாந்தகாரத்தை அறவே அகற்றி என் முன் தோன்றி அருள் புரி.
கோடி சூரியப்பிரகாசரான தாங்கள் என்னுடைய அக்ஞானத்தை அகற்றி தங்களுடைய சாக்ஷாத்காரத்தை அளிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறார். ஹே பரமேச்வரா! ஆத்மாவானது என்றும் ஆநந்தஸ்வரூபம் என்ற ஞானம் என்னிடத்தில் இல்லாததினால்தான் நீ என்னுடைய விஷயத்தில் ப்ரஸன்னமாகாமல் இருக்கிறாய். அப்படியானால் நீயே ஸ்வயமாகவே ஏன் ஞானத்தை அடைந்து அதன் மூலமாக அக்ஞானமான இருளைப் போக்கடித்துக் கொள்ளக் கூடாது? என்ற பகவானுடைய ஆக்ஷேபணத்திற்கு பசுபதே! என்ற ஸம்போதனையினால் பகவத்பாதாள் ஸமாதானம் சொல்லுகிறார்கள். ஹே பசுபதே! நீ பசு பாச விமோசகன் அல்லவா! ஆத்ம ஸ்வரூபமானது ஆநந்தமயம் என்று தெரியாதவர்களைத் தானே பசு என்று வித்வான்கள் சொல்வார்கள். நானோ, கேவலம் பசு ப்ராயத்தில் இருந்து வருகிறேன். என்னுடைய விஷயத்தில், ஸகல விதமான அக்ஞான இருளையும் வேரோடு போக்கடித்து, ஞானோபதேசத்தினால் என்னுடைய ஜன்மாவை ஸபலம் செய்வாய். ஈசான ஸர்வ வித்யானாம் – என்கிற வேத வாக்கியப்படி, நீதானே ப்ராணிகளுக்கு ஞானோபதேசத்தை ஊட்டுகிறவன். ஆகையினால் நீதான் என்னுடைய அக்ஞானமான இருளைப் போக்கடிக்கவேண்டும். அதே சமயத்தில் என் கண்களுக்குக் கோச்சரமாகிறவனாகவும், ஹ்ருதய புண்டரீகத்தில் ப்ரஸன்னனாகவும் ஆகவேண்டும் – என்று பகவத்பாதாள் பரமேச்வரனை ப்ரார்த்திக்கின்றர்கள். இந்த ச்லோகத்தைச் சொல்லி நமஸ்கரிப்பவர்கள், பரமேச்வரன் அநுகிரஹத்தால், சிவஞானம் பெற்று ஜீவன்முக்தர்களாகப் பிரகாசிப்பார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம்.
पशुपते = हे पशुपति !
वारिजबान्धवः = सूर्य,
एकः एक ही है,
अपि = फिर भी,
क्षितिनभोव्याप्तम् = पृथिवी से आकाश तक फैले,
तमोमण्डलम् = अन्धकाररूप पिण्ड को,
भित्वा = नष्ट कर
लोचनगोचरः= दृष्टिगोचर,
भवति = हो जाता है!
त्वम् = आप (तो),
कोटिसूर्यप्रभः = करोडों सूर्यों की प्रभावाले हैं ,(फिर्)
किम् =क्यों ,
न = नही,
वेद्यः = (मेरे लिये आप) ज्ञेय,
भवसि = हो जाते ?
अहो = आह,
मत्तमः = मेरा अज्ञानान्धकार
कीदृक् = कैसा
घनतरम् = अत्यधिक गहरा है !
तत् = उस,
सर्वम् =सारे अन्धेरे को,
व्यपनीय = हटाकर,
साक्षात् = (आप) स्वयम्,
मे = मुझ् पर
प्रसन्नः = प्रसन्न,
भव = होइये ।
Dr.T.M.P.Mahadevan
O Lord of souls! The one sun, destroying the darkness that pervades earth and heaven, becomes visible. Thy luminosity exceeds that of crores of suns! Why, then, does not Tou become known? Oh, how intensely dense my darkness (ignorance) should be? Do destroy this entirely, and become directly manifest to me.
The supreme Self is self-luminous. It does not require any other light for becoming manifest. In the physical world, the sun is a luminary that shines by itself. In the spiritual sense, the Self has transcendent luminosity. If we must use a physical imagery, we must say that the luminosity of the Self exceeds that of a crore of suns. Yet, why is it not manifest to us? It is not true to say that the Self is not manifest at all. The Self is not fully manifest either. It is manifest, and yet not manifest. (see Panchadasi, I. 11: Bhanepy Abhatasau). This paradoxical situation is the result of maya or avidya (nescience). The devotee appeals to the supreme Self, God, for effecting the removal of nescience.
Swami Tapasyananda
Lo, If the sun, who is but one, can penetrate through the circle of darkness filling heaven and earth (and become visible), canst Thou not, O lord of beings, who art endowed with the brilliance of innumerable suns, reveal Thyself? Who knows how thick is the darkness covering me? Therefore, removing it in entirety, deign to reveal Thyself unto me!
Sivaanandalahari – 58
एको वारिजबान्दव: क्षितिनभोव्याप्तम् तमोमण्डलम्
भित्वा लोचनगोचरोऽपि भवति त्वं कोटिसूर्यप्रभ: |
वेद्य: किं न भवस्यहो घनतरं कीदृग्भवेन्मत्तम:
स्तत्सर्व व्यपनीय मे पशुपते साक्षात प्रसन्नो भव ॥ ५८ ॥
Commentary
हे पशुपते = Hey! ParamEswara!
एकः = as one;
वारिजबान्दव: = soorya bhagavan;
क्षितिनभोव्याप्तम् = that which is pervading boomi and aakaasa;
तमोमण्डलम् = the area of darkness;
भित्वा = remove;
लोचनगोचरोऽपि = the object of the eyes;
भवति = becomes;
कोटिसूर्यप्रभ: = equal to the brilliance of a crore sooryas;
त्वं = you;
वेद्य: = capable of being known;
किं = why;
न भवसि = do not become;
अहो = surpirse!
मत्तमः = the darkness of my अज्ञानम्;
कीदृग् = by which;
भवेत् = become;
तत् = therefore;
सर्वं = all (अज्ञानम्);
व्यपनीय = remove;
मे = to me;
साक्षात = as prathyaksham;
प्रसन्नः = become prasannam;
भव = happen.
தேஜோமயத்தை..
(தாயுமானவர்)
Hey! ParamEswara! You are ज्ञानज्योति. Soorya Bhagavan, even though he is one, he is able to remove the darkness that pervades all of bhoolOka to aakaasa and yet is available to the reach of the eyes (लोचनगोचरं). You on the other hand are equal to a crore sooryas with unequalled resplendence yet seems incapable of removing the darkness of my moola अज्ञानम् and also elude the reach of my eyes. Why are you in my case being so out of reach? I have no idea of the depth and intensity of the darkness of my अज्ञानम्. நெஞ்சக்கனகல் says AruNagirinaathar emphasising its horrible opaqueness. In truth vidwaans say that this biggest darkness called अज्ञानम् is the maayai.
Hey! ParamEswara! This maayai called अज्ञानम् is deceiving the praaNis from knowing (hiding your shine of) your nijaswaroopam.
Sruthi says “आनन्दं ब्रह्मेति व्यजानात्”. What this maayai is doing is that she is hiding the brahmaanandham which is the nijaswaroopam of the aathma and prevents it from shining. In truth sath, chith and aanandham are the the nijaswaroopam of the aathma. That vasthu that has no destruction in all three kaalas is to be knows as ‘Sath’. The consciousness is known as ‘chith’. And the swaswaroopaanandam should be known as sukham. This lady Maaya in respect of the praaNIs does not hide the ‘sath’ amsam and ‘chith’ amsam but only hides only the aanandhaamsam. That is why the praaNis go through untold sufferings. Everyone never doubts: ‘do I exist?’ or ‘do I not exist?’ Everyone has the definite conviction in saying “I exist” and thus Maayai does not hide the sath swaroopaamsam. In the same way in respect of knowledge a person is sure of it when he says “I know” (I know that I know) or “I do not know” (I know that I do not know) and thus Maayai does not hide the chith swaroopaamsam. But lo and behold! Everyone invariably, without even having the doubt whether he is sukhaswaroopi or a dhukkaswaroopi, he has the conviction that he is dhukkaswaroopi! Thus it is very very clear that no one has the swaanubhavam that he is sukhaswaroopi. From this the definite conclusion is that the maayai hides only the aathma’s aanandhaamsam. Therefore all the praaNis are endlessly roaming in search of sukham in the dwaitha prapancha dhukka saagaram created by maayai. Therefore, hey! ParamEswara! you are not available to me because I do not have the ज्ञानम् that aathmaa is ever aanandhaswaroopi.
तेशामेवानुकंपार्थं अहमग्नानाजं तमः|
नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता ||
with this resolve, in respect of me you should remove the darkness of my अज्ञानम् root and stem and with your ज्ञानोपदेशं to me you should do सफलं of my janma. Therefore it is for you alone to remove my अज्ञानम्. PasupathE! Could You not reveal Yourself to me so the thirst of my eyes are quenched? Could you not be prasannan in the lotus of my heart?
Anyone who recites this sloka and do namaskaaram in sivasannidhi will definitely have the prathyaksha dharisanam of ParamEswara.
Aum Namasivaaya!
![]()
