श्रीशिवानन्दलहरी -५६ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -56 – Sri Sivaanandalahari-56

श्रीशिवानन्दलहरी -५६

नित्याय त्रिगुणात्मने पुरजिते कात्यायनीश्रेयसे
सत्यायादिकुटुम्बिने मुनिमनःप्रत्यक्षचिन्मूर्तये।
मायासृष्टजगत्त्रयाय सकलाम्‍नायान्तसञ्चारिणे
सायन्ताण्डवसम्भ्रमाय जटिने सेयं नतिः शम्भवे ॥ ५६ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -56

நித்யாய த்ரிகு³ணாத்மநே, புரஜிதே, காத்யாயநீ ஶ்ரேயஸே,
ஸத்யாயாதி³குடும்பி³நே, முனிமந꞉ᳲ ப்ரத்யக்ஷசிந்மூர்த்தயே।
மாயாஸ்ருʼஷ்ட-ஜக³த்த்ரயாய, ஸகலாம்-நாயாந்த ஸஞ்சாரிணே
ஸாயம்ʼ தாண்ட³வ – ஸம்ப்⁴ரமாய ஜடிநே, ஸேயம்ʼ நதிஶ் ஶம்ப⁴வே ॥(56)


नित्याय त्रि-गुण+आत्मने पुर-जिते कात्यायनी-श्रेयसे सत्याय आदि-कुटुंबिने मुनि-मन:-प्रत्यक्ष-चित्‌–मूर्तये माया-सृष्ट-जगत्‌-त्रयाय सकल+आम्नाय+अन्त-संचारिणे सायं तांडव-संभ्रमाय जटिने शंभवे सा इयं नतिः।



सकलगप्रपञ्चस्वरूपिणं परमशिवं स्तौति – नित्यायेति। नित्याय ध्रुवाय चलनरहितायेत्यर्थः। त्रिगुणात्मने त्रयो गुणाः सत्त्वरजस्तमांसि आत्मानः शरीराणि यस्य तस्मै ब्रह्मविष्णुरुद्रात्मन इत्यर्थः। पुरजिते पुराणि स्थूलसूक्ष्मकारणशरीराणि तानि जयति अभिभवतीति पुरजित्‌ तस्मै। अथवा प्रसिद्धानि त्रीणि पुराणि “तेषामसुराणामि” त्यर्थवादसिद्धानि तानि जयति अभिभवतीति पुरजित्‌ तस्मै। कात्यायनीश्रेयसे कात्यायन्याः पार्वत्याः श्रेयसे तपःफलरूपाय। सत्याय कालत्रयाबाध्याय। आदिकुटुम्बिने प्राथमिकसंसारिणे भक्तानुग्रहाय कुटुम्बिवेषधारिण इत्यर्थः। मुनिमनःप्रत्यक्षचिन्मूर्तये मुनीनां मनांसि तेषां प्रत्यक्षो गोचरः चित्‌ मूर्तिः चित्‌ शरीरं यस्य तस्मै। मायासृष्टजगत्‍त्रयाय जगतां त्रयं जगत्‍त्रयम्‌ मायया सृष्टं मायासृष्टं, मायासृष्टं जगत्‍त्रयं येन तस्मै सकलाम्‍नायान्तसंचारिणे सकलोपनिषत्प्रतिपाद्यायेति भावः। सायं ताण्डवसंभ्रमाय तुरीयपादस्य पूर्ववदेवार्थः ॥५६॥[1]

[1] हेत्वलङ्कारः ।


சகலப்பிரபஞ்ச வடிவனாகும் பரசிவனை மீண்டும் துதிக்கின்றனர்.


नित्याय ​- நித்யாய – ஹே பகவன், நித்தியமாயுள்ளவராயும்,

त्रिगुणात्मने – த்ரிகு³ணாத்மநே – ஸத்துவ, ரஜ தமோ குணஸ்வரூபியாயும்,

पुरजिते – புரஜிதே – ஸ்தூல சூக்ஷ்ம காரண சரீரங்களான திரிபுரர்களையும் வென்றவராயும்,

कात्यायनीश्रेयसे – காத்யாயநீஶ்ரேயஸே – பார்வதி தேவிக்கு மங்களகரராயும், தவத்தின் பலத்தையளிக்க வல்லவராயும்,

सत्याय ​- ஸத்யாய – ஸத்யஸ்வரூபராயும்,

आदिकुटुम्बिने – ஆதி³குடும்பி³நே – பக்தர்களை உஜ்ஜீவிக்கும் பொருட்டு ஆதியில் குடும்பியாயும்,

मुनिमनःप्रत्यक्षचिन्मूर्तये – முநிமந꞉ப்ரத்யக்ஷசிந்மூர்தயே – முனிவர்களது மனதில் பிரத்யக்ஷமாய் புலப்படும் சின்மயாநந்தஸ்வரூபியாயும்,

मायासृष्टजगत्रयाय​ – மாயாஸ்ருʼஷ்டஜக³த்ரயாய – மாயையால் சிருஷ்டிக்கப்பட்ட மூவுலகங்களை யுடையவராயும்,

सकलाम्‍नायान्तसंचारिणे – ஸகலாம்நாயாந்தஸம்ʼசாரிணே – ஸகல வேதாந்தத் துறைகளில் ஸஞ்சரிப்பவராயும்

सायं ताण्डवसंभ्रमाय ​- ஸாயம்ʼ தாண்ட³வஸம்ʼப்⁴ரமாய – ஸாயங்காலத்தில் நர்த்தனத்தில் பரபரப்புள்ளுவராயும்,

जटिने – ஜடிநே – ஜடைகளையுடையவராயும் உள்ள

शम्भवे – ஶம்ப⁴வே – பரமேச்வரராகிய உம் பொருட்டு

सा इयं नतिः – ஸா இயம் நதி꞉ – அப்படிப்பட்ட இந்த நமஸ்காரம் இருக்கட்டும்.


ஏ, முக்கண்ணனே! இறப்பு, நிகழ்வு, எதிர் என்னும் முக்காலங்களிலும் மாறாது ஒருபடித்தாய் விளங்குபவனே! ஸத்துவமாதி முக்குணங்களுக்கும் பிறப்பிடமாயவனே! ஜாக்கிர, சொப்பன, சுழுத்தி ஆகிய மூன்று அவஸ்தைகளும் நிகழ்தற்குரிய ஸ்தூல, சூக்கும, காரண மென்னும் முப்புரங்களையும் வஸ்துவிசாரணையால் எரிபடச் செய்யும் ஞானிகளின் யதார்த்த ஆத்ம சொரூபமாக மிஞ்சுபவனே! உலகீன்ற உமாதேவியாரின் தவத்திற்கு ஊதியமாக விளங்குபவனே! நான்கு வேதங்களும் நிலைநாட்டும் உண்மைப் பொருளானவனே! பிரதோஷ காலமாகிய அன்பர்களின் உபசாந்த நிலையில் ஆநந்த நடம் புரிபவனே! ஜீவகோடிகளின் நன்மையின் பொருட்டே சிருஷ்டி, ஸ்திதி, சங்காரம் எனும் முத்தொழிலையும், அவரவர் வினையளவுக்கேற்ப தனுகரண புவன போகங்களைத் தந்து, ரக்ஷிப்பதில் மூன்று கண் போலப் பாவித்து நடுநிலை நின்று, இயற்றாதியற்று முழுமுதல்வன் யானே என்பதைத் திரிநேத்திர தாரியாய் விளங்கி ஸ்திரப்படுத்துபவனே! உம்மையே துதிக்கும் பாக்கியமருள்வீராக (என்பதாம்).


எக்காலங்களிலும்‌ நாசமற்று சாச்வதமாய்‌ இருப்பவரும்‌ ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ்‌ என்ற முக்குணங்களின்‌ ஸ்வரூபமாய்‌ விளங்குகின்ற ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன்‌ இவர்களைத்‌ தனது ஆத்மாவாக கொண்டவரும்‌, உபநிடதங்‌களில்‌ கூறப்பட்ட ஸ்‌தூலம்‌, சூக்ஷ்மம்‌, காரணம்‌ என்ற மூன்று புரங்களை வென்றவரும்‌ அல்லது புராண ப்ரஸித்‌தமான முப்புரங்களை எரித்து வெற்றி கொண்டவரும்‌, பர்வத புத்ரியாகப்‌ பிறந்த பார்வதீ தேவியின்‌ தவத்தின்‌ பயனாய்‌ சிறந்து ப்ரகாசிக்கின்றவரும்‌, முக்காலங்களிலும்‌ மாற்றமேதுமின்றி உண்மையே வடிவாக அமைந்தவரும்‌, தனது பக்தர்களை அனுக்ரஹிப்பதற்காகவே முதன்‌ முதலில்‌ தான்‌ குடும்பியாக ஆனவரும்‌, முனிவர்களின்‌ சுத்தமான மனத்தில்‌ மட்டுமே புலப்படுகின்ற “’சித்‌” என்ற சக்தியை தன்‌ சரீரமாய்க்‌ கொண்டவரும்‌, மாயையால்‌ உண்டான மூவுலகங்களைத்‌ தனதாகக்‌ கொண்டவரும்‌, எல்லா உபநிடதங்களினுடையவும்‌ முடிவாய்‌ சொல்லப்‌ படுகின்றவரும்‌, ஜடாபாரத்தை தரித்திருக்கின்றவரும்‌, ஸாயங்கால வேளையில்‌ மிக பரபரப்புடன்‌ நர்த்தனம்‌ ஆடுவதில்‌ பேராவல்‌ கொண்டவருமான ஸ்ரீ ஸாம்ப பரமேச்‌வரனை பலவிதமாகத்‌ துதித்து யாரை நினைத்து நான்‌ நமஸ்‌காரம்‌ செய்கிறேனோ அப்படிப்பட்ட இந்த நமஸ்காரமானது மங்களஸ்வரூபியான சம்புவிற்கு இருக்கட்டும்‌.


பரமேச்வரன் நித்யர் – என்றும் உள்ளவர்.  நித்ய நிலையில் மாற்றமின்றி இருப்பவர். உலகமாக மாற, ஸத்வம் ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்களாக ஆனார். ஸ்தூலம் சூக்ஷ்மம் காரணம் என்ற மூன்று உடலமைப்பைத் தோற்றுவித்து அதனைத் தன் வசத்தில் கொண்டவர். மாயையாகத் தனக்கு உதவ கதவம்சத்தில் தோன்றிய காத்யாயினியின் மேன்மையே உருவானவர். ஸத்யமே வடிவானவர். முதலில் பார்வதியை மணந்து விநாயகரையும் குஹரையும் புதல்வராகத் தோற்றுவித்து ஆதி குடும்பியானவர். அவரே முதல் அப்பர். பார்வதியை அம்மையாகவும் மஹேசுவரரை அப்பராகவும் சொல்லும் சுலோகம் உண்டு. மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மகேசுவர:  அம்மையப்பரே உலகிற்கெல்லாம் அம்மையப்பர் என்றுணர்க. இவ்வளவு உருமாற்றத்தைக் கொண்ட நிலையிலும் முனிவர்தம் உள்ளத்தில் சுத்த சித்தின் வடிவினராகத் தோன்றியவர். தன் மாயை துணைகொண்டு மூவுலகையும் படைத்தவர். உலகின் முன்னிருந்து, உலகைத் தோற்றுவித்து, உலகைக் காத்து உலக உருமறைத்து உலகின் மறைவுக்குப் பின்னரும் இருக்கின்ற பொருள் என உணர்த்துகின்ற வேதமுடிவான எல்லா உபநிஷத்துக்கள் உட்கருத்தாக விளங்குபவர். மாலைப்பொழுதில் பரபரப்புடன் ஆடுபவர். சடையரான அந்த சம்புவிற்கு இந்த நமஸ்காரம் இருக்கட்டும் என்று ஸ்ரீ மல்லிகார்ஜுனருடைய சந்நிதியில் பகவத்பாதாள் நமஸ்கரத்தை செய்கிறார்கள். இந்த ச்லோகத்தை எவர்கள் சொல்லி பரமேச்வரனை நமஸ்காரம் செய்கிறார்களோ, அவர்கள் பார்வதீ பரமேச்வரர்களின் அருளுக்குப் பாத்திரமாகி தம் குடும்பம் செழிக்கப்பெற்று, இகலோகத்தில் நல்வாழ்வு வாழ்ந்து காலக்கிரமத்தில் பரசிவத்தில் லயிப்பார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம்.


नित्याय = आदि- अन्त रहित,
त्रिगुणात्मने = तीनों गुणों के अधिष्ठान,
कात्यायनीश्रेयसे = भगवती पार्वती के लिये परम कल्याण (मंगल) रूप,
सत्याय = सदा अबाध्य,
आदिकुटुष्बिने = (जगत्पिता होने से) प्रथम गृहस्थ,
मुनिमनः प्रत्यक्षचिन्मूर्तये = चिन्मात्र रूपसे मुनियों को मन के द्वारा साक्षात्‌ प्रत्यक्ष, मायासृष्टजगत्रयाय = माया से त्रिलोकी को उत्पन्न कर चुके,
सकलाम्नायान्तसंचारिणे = समस्त वेदान्तों के प्रतिपाद्य,
सायन्ताण्डवसम्भ्रमाय = शाम को ताण्डत्र करने के प्रति उत्साहवाले,
जटिने = जटाधारी (आप),
शम्भवे = शम्भु के लिये,
सा = वह (महत्फल वाला),
इयम्‌ = यह (बार-बार किया जाता) ।
नति = नमस्कार है ।

 


Dr.T.M.P.Mahadevan

May this obeisance to be Thee, Sambhu with the matted locks, who art eternal, who art embodied in the three gunas, who didst conquer the cities, who art the supreme value for Parvati, the truth, the first pater familias, who art of the nature of consciousness directly perceived by the ascetics in their minds; who didst create the three worlds through maya, who dost move in all the Vedanta texts, and who art engaged in dancing the evening dance.

Here, again, we have a glorious vision of Siva’s evening-dance. It is the Eternal that dances – the great Lord with matted locks, indicating the cardinal directions in space. It is with Parvati by His side that He dances, and thus creates the world through maya. His is the first family (adikutumba). As a familiar verse says:

mata ca Parvati devi pita devo mahesvarah.
(Parvati is the Mother, and Mahesvara is the Father).

Although He is omnipresent and is the source of all beings and their first parent; it is not easy to realize Him. He becomes manifest only to the sages and saints. And, He is knowable through Vedanta alone.

Swami Tapasyananda

My prostration to Sambhu, the source of all happiness, who is eternal; whose form is composed of the three Gunas of Sattva, Rajas and Tamas; who has conquered the three bodies, gross, subtle and causal; who is Parvati’s beatitude; who is Truth; who is the primal householder; who appears in the minds of sages as formed of the stuff of consciousness; who created the three worlds by the power of Maya; who forms the theme of all Upanishads; and who whirls round in the performance of the Tandava dance at the time of dusk.


Sivaanandalahari – 56

नित्याय त्रिगुणात्मने पुरजिते कात्यायनी श्रेयसे
सत्यायादिकुटुंबिने मुनिमन: प्रत्यक्षचिन्मूर्तये ।
मायासृष्टजगत्त्रयाय सकलाम्नायान्तसंचारिणे
सायंतान्डवसंभ्रमाय जटिने सेयं नति: शंभवे ॥ ५६ ॥

Commentary

नित्याय = who is nithya swaroopan;
त्रिगुणात्मने = who has the sareeram made up of the three guNas viz. sathwa, raja and thama;
पुरजिते = one who destroys the sthoola, sookshma and kaaraNa sareeras;
कात्यायनीश्रेयसे= one who is the phala swaroopan of paarvathi’s thapas;
सत्याय = sathya swaroopan;
आदिकुटुंबिने = the original kudumbi (family man);
मुनिमन: प्रत्यक्ष: चिन्मूर्तये = who is the ज्ञानस्वरूपन्  of the manas of the muni janas;
मायासृष्टजगत्त्रयाय = one who has the three worlds created by the maaya;
सकलाम्नायान्तसंचारिणे = who travels on the peaks of the upanishads of all the vedas;
सायं = in the evening;
तान्डवसंभ्रमाय = one is who likes to dance;
जटिने = who has matted locks;
शंभवे = to Sambhu;
इयं  = this;
नति: = namaskaaram;
(भवतु  = may it be).

 न त्वे वाहं जातु नासं न त्वं नेमे जनाधिपाः।

न चैव न भविष्यामः सर्वे वयामनः परम्॥

says the saasthra.  Accordingly there was no time when sarvEswara was not and there will be no time when he will not be, what then can we say of the present!  Thus the vasthu that can have no destruction in the kaalathrayam called the past, the present and the future is called Nithya vasthu.  Vasthu means poruL.  So that paramporuL is none other than ParamEswara!

That Parameswara with sathwa guna remains as Vishnu swaroopan, with rajO guna remains as Brahma swaroopan and with thamO guna as rudhra swaroopan and keeps doing srishti, sthithi and layam.  Also he does dhwamsam of the three sareeras called sthula, sookshma and kaaraNa sareeras.  Moreover in respect of the praaNis who are governed by the sabhdham called ‘I’ (aham, naan) he teaches them aathma thathwa.  Moreover he remains the phala swaroopi of Parvathi’s thapas.  Besides he, cutting across the three kaalas remains the void  (त्रिकाल परिच्छेद शून्यन्).  At the same time he shines as the sathya swaroopan and rakshaanukooli of sakala praaNis in the chathurdasa lOkas.  Thus with Parvathi he remains the maatha and pithaa of all the lOkas.

And indeed he is the brilliant gnaanaswaroopi in the minds of those munijanas in their samaadhi.   And he keeps the three lOkas created by the maaya as his body.  This mahEswara of the mahaa mahima roams on the sikharam of the upanishads of the Vedas. Added to that he who did garvabhangam of the Ganga, he who created the all powerful veerabhadra to destroy the यज्ञ of dhaksaprajaadhipathi shows his gaambeeryam with his jataa. As if these are not enough, he is fond of dancing in the evening to do anugraham to the bakthas.

To such a mangalaswaroopi Sambu let my namaskaarams be.

Sambo MahaadEva!

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading