श्रीशिवानन्दलहरी -३१ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -31 – Sri Sivaanandalahari-31

श्रीशिवानन्दलहरी -३१

नालं वा परमोपकारकमिदं त्वेकं पशूनां पते
पश्यन्कुक्षिगतांश्चराचरगणान्बाह्यस्थितान् रक्षितुम्।
सर्वामर्त्यपलायनौषधमतिज्वालाकरं भीकरं
निक्षिप्तं गरलं गले न गिलितं नोद्गीर्णमेव त्वया ॥ ३१ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -31

நாலம்ʼ வா பரமோபகாரகமித³ம்ʼ, த்வேகம்ʼ பஶூநாம்ʼ பதே,
பஶ்யந் குக்ஷிக³தாந் சராசரக³ணாந், பா³ஹ்யஸ்தி²தாந் ரக்ஷிதும்।
ஸர்வாமர்த்யபலாயனௌஷத⁴, மதிஜ்வாலாகரம்ʼ பீ⁴கரம்ʼ
நிக்ஷிப்தம்ʼ க³ரலம்ʼ க³லே ந கி³லிதம்ʼ, நோத்³கீ³ர்ணமேவ த்வயா ॥ (31)


  पशूनां पते! कुक्षि-गतान्‌ चर+अचर-गणान्‌ बाह्य-स्थितान्‌ रक्षितु. पश्यन्‌, सर्व+अमर्त्य-पलायन+औषधम्‌ अतिज्चाला-(आ) करं भीकरं गरलं त्वया गले निक्षिप्तं न गिलितं न उद्गीर्णम्‌ एव। परम+उपकारकं तु इदम्‌ एकं न अलम्‌?॥



परमेश्वरनिष्ठं सर्वातिशायिशक्तिमत्त्वं दर्शयितुमाह- नालमिति। हे पशूनां पते! एवं संबोधनेन जगतामवश्यभरणीयत्वं सूच्यते। कुक्षिगतान्‌ उदरस्थितान्‌ चराचरगणान्‌  स्थावरजङ्गमसमूहान्‌ बाह्य स्थितांश्च तान्‌ रक्षितुं निर्भयान्‌ कर्तुं पश्यन्‌ पर्यालोच(य)न् अभूस्त्वम्‌। इत्थं पर्यालोच्य त्वया अतिज्वालाकरम्‌ अत्यन्ततापकरं भीकरं भयजनकं गरलं कालकूटं सर्वामर्त्यपलायनौषधं  यथा तथा। अमर्त्या अमरणधर्मकाः सर्वे देवाः तेषां पलायनमसहनेन दिशि दिशि धावनं तदेव रोगः एकदेशिविवर्तिरूपकं तस्य औषधं निवर्तकं यथा भवति तथा गले कण्ठे निक्षिप्तं स्थापितम्‌। अत एव न गिलितम्‌ न भक्षितम्‌। नोद्गीर्णं  च नोत्सृष्टं न वान्तं चेत्यर्थः। एवकारश्चार्थः, अव्ययानामनेकार्थत्वात्‌। एकं परमोपकारकमतिशयेन अनुग्राहकम्‌ इदमित्थंकरणम्‌ तव महिमावगतये नालं वा न पर्याप्तं वा ? वाशब्दः काकुस्वरसूचकः। तुशब्दोऽन्येषामीदृशं महिमानं वारयति। इत्थं करणमनितरसाधारणं त्वन्महिमानं गमयतीति भावः ॥ ३१ ॥


பசுபதி விடமுண்ட ஒரு செயலே நினதருளையும் ஆற்றலையும் அறிவிக்கப் போதுமான சான்றாமெனச் சாற்றுகின்றனர்.


पशूनां पते – பஶூநாம்ʼ பதே – ஸகல ஜீவர்களுக்கும் பதியே! (நினைத்துப் பார்த்தால் உம்மைப் போல பரம உபகாரி யாவர் இருக்க முடியும்?)

कुक्षिगतान् – குக்ஷிக³தான் – உமது வயிற்றுக்குள் இருக்கப்பட்ட அளவற்ற ஜீவராசிகளுள்ள அண்டங்களையும்

बाह्यस्थितान् – பா³ஹ்யஸ்தி²தான் – வெளியில் உள்ள

चराचरगणान् – சராசரக³ணான் – அளவற்ற சராசரக் கூட்டங்களையும்

रक्षितुम् – ரக்ஷிதும் – அனைத்தையும் ஒருங்கே காப்பாற்றுவதற்கு

पश्यन् – பஶ்யன் – ஆலோசனை செய்துகொண்டிருந்தீர்கள். ஆதலால்தான்

अतिज्वालाकरम् – அதிஜ்வாலாகரம் – தேவாஸுரர்கள் அமிர்தத்தையடைய பாற்கடலைக் கடைந்தபோது அதிகமான ஜ்வாலைகளைக் கக்கியும்

भीकरम् – பீ⁴கரம் – பயங்கரத்தை யுண்டுபண்ணியும் வெளிவந்த

गरलम् – க³ரலம் – காலகூடவிஷம்

सर्वामर्त्यपलायनौषधम् – ஸர்வாமர்த்யபலாயநௌஷத⁴ம் – ஓட்டம் எடுத்த தேவர்களது பயம் என்ற ரோகத்தைத் தீர்ப்பதற்கு மருந்தாக

त्वया – த்வயா – உம்மால் (பானம் செய்யப்பட்டது. அம்மட்டோ! அது)

गले – க³லே – உமது கழுத்திலேயே

निक्षिप्तम् – நிக்ஷிப்தம் – நிறுத்தப்பட்டது.

न गलितम् – ந க³லிதம் – (உமது வயிற்றுக்குள் அது போகுமாயின் அங்குள்ள கணக்கற்ற ஜீவன்களுக்கு கெடுதல் உண்டாக்கும் என்றதையும் நீர் எண்ணியதால்) விழுங்கப்படவும் இல்லை

न उद्गीर्णमेव​ – ந உத்³கீ³ர்ணமேவ – வெளியில் உமிழப்படவும் இல்லை

परमोपकारकम् – பரமோபகாரகம் – உமது பரம உபகாரத்தன்மையையும் ஆற்றலையும் அன்பையும் அறிவதற்கு

इदमेकं – இத³மேகம்ʼ – இந்த ஒரே காரியம் மட்டும்

नालं वा – நாலம்ʼ வா – போதுமான சாக்ஷியமாகுமே!


ஏ முடிவிலா ஆற்றலுடையனே! முன்னொருகால் தேவாஸுரர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த காலத்தே, தோன்றிய ஆலகால விஷமானது, ஸர்வ லோகங்களையும் பஸ்மீகரித்துவர, அதுகண்டு அஞ்சிய தேவர் குழாம், உம்மைத் தஞ்சமாக அடைய, அதுகண்டு இரங்கி, அவ்விஷத்தை வாரி உண்டேனும் சராசரப் பிரபஞ்சத்தையும் தேவர்களையும் காத்தல் தகுதி எனக் கருதிய உமது திருவுளச் செயலையறிந்து சித்தம் களித்த அவர்கள் (தேவர்கள்), அச்செயலின் அறிகுறியாக அதைக் கண்டத்தில் அடக்கி நிற்க வேண்டிக்கொண்டபடி, அதை உண்ணாமலும் உமிழாமலும் இடையே நிறுத்திய காரணத்தால், கறைக்கண்டனாய் விளங்கிக் காக்ஷியளித்தது ஒன்றே உமது அபார பக்த வாத்சல்யத்திற்கும், அகடிதகடனா சாமர்த்தியத்திற்கும் சிறந்த சான்றாமன்றோ? அதுகண்டே உம்மைச் சரணடைந்தேன். அருள்புரிவீர்.


ஹே பசுபதே! பசுப்ராயமாக வாழ்கின்ற மக்களையும்‌ தேவர்களையும்‌ காப்பாற்றுகிற உன்‌ கருணையை என்னவென்று சொல்வது. ஒரு சமயம்‌ தேவர்களும்‌ அஸுரர்‌களுமாகச்‌ சேர்ந்து க்ஷீர ஸமுத்ரத்தை கடைந்த காலத்தில்‌ அதிலிருந்‌து, பயங்கரமான மிகக்கொடிய காலகூட விஷம்‌ வெளிப்பட்டது. அதைக்கண்ட தேவர்கள்‌ அங்கிருந்து பயந்து ஓடி விட்டார்கள்‌. உனது வயிற்றின்‌ உள்ளிலும்‌ வெளியிலும்‌ இருக்கின்ற ஜங்கம தாவரங்களின்‌ கூட்டங்‌களை காப்பாற்ற வேண்டுமென்று எண்ணி தீர்க்கமாக யோசித்த நீ மிகக்‌ கொடியதும்‌ பயங்கரமானதும்‌ மிகுந்த விஷ ஜ்வாலையை கக்குகின்றதுமான அந்த விஷத்தை உண்டு, பயந்து ஈடுநடுங்‌கி ஓட்டமெடுத்த தேவர்களின்‌ நோய்க்கு மருந்தாக அவ்விஷத்தை உனது கழுத்திலேயே நிறுத்தியும்‌ விட்டாய்‌. விழுங்க வில்லை. ஏனென்றால்‌ உனது வயிற்றிலிருக்கின்‌ற உலகம்‌ அழியக்‌ கூடாதல்லவா? வெளியில்‌ உமிழவுமில்லை. ஏனெனில்‌, வெளியிலிருக்கின்‌ற உலகம்‌ அழிந்து விடுமே! என்றுதான்‌. இவ்வளவு மேலான மிகச் சிறந்த நீ செய்த உபகாரம்‌ ஒன்றே உனது கருணையையும்‌ அன்பையும்‌ மகிமையையும்‌ அறிய போதாதா.


தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து அமிர்தத்தைப் பெற சமுத்திரத்தைக் கடைந்த காலத்தில் அதிலிருந்து காலகூட விஷமுண்டாயிற்று. அதைக்கண்டு அனைவரும் பயந்து ஓடினர். அப்பொழுதே அவர்களுடைய பயத்தை நிவிருத்தி செய்ய அந்த விஷத்தை ஸ்ரீபரமேச்வரன் உட்கொண்டார். ஆனால் அந்த விஷம் வயிற்றுக்குள் போகும்படி விழுங்கிவிடவில்லை. அப்படிச் செய்தால் அங்கிருக்கும் சராசரங்கள் எல்லாம் துன்பத்தை அடையும். அதை வெளியிலேயே விட்டுவைத்தால் வெளியிலிருக்கும் பிராணிகள் நசித்துவிடும். ஆதலால் அதை கழுத்திலேயே ஸ்தாபனம் செய்துவிட்டார். இதிலிருந்து ஸ்ரீபரமேச்வரனுடைய ஒப்பற்ற தயையும், மகிமையும் வெளியாகிறது.

இந்த ஒரு லீலை போதாதா பரமேச்வரனுடைய அன்பையும் கருணையையும் அறிவதற்கு!  போதும் போதும் என்பதை ச்லோகத்தில் ஏவ என்ற பதத்தினாலும், இந்த அதி ஆச்சர்யமான மஹாமஹிமையோடு கூடிய காரியத்தை அந்நிய தேவதைகளினால் செய்யமுடியாது என்பதை து என்ற சப்தத்தினாலும் பகவத்பாதாள் சூசனம் செய்கிறார்கள். இந்த அத்யத்புத லீலையை நினைத்து நினைத்து உள்ளமுருகி மகிழ்ந்து வியந்து திருநீலகண்டம் திருநீலகண்டம் திருநீலகண்டம் என்று வாய்விட்டுக் கதறி, திருநீலகண்ட நாயனார் பரசிவத்தில் லயித்தார் என்கிறது பெரியபுராணம். திருநீலகண்ட நாயனாரை த்யானம் செய்துகொண்டு, பரமேச்வரனின் இந்த லீலையை நினைத்து, விபூதியைத் தரித்து, பரமேச்வரனை நமஸ்கரிப்பவர்கள் மனதில் பயம் நீங்கப்பெற்றவர்களாக,  ஸகல ஐச்வர்யத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்து காலக்கிரமத்தில் பரசிவத்தில் லயிப்பார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே  சான்று.


पशूनाम्‌ = (हे) पशुरूप जीवों के,
पते = स्वामी !
कुक्षिगतान्‌ = अपने उदर में रहने वाले (और),
बाह्यस्थितान्‌ = बाहर रहने वाले(– दोनों प्रकार के),
चराचरगणान्‌ = स्थावर-जंगम प्राणियों का,
पश्यन्‌ = विचार करते हुए (उन्हें ),
रक्षितुम्‌ = बचाने के लिये,
सर्वामर्त्यपलायनौषधम्‌ = सब देवताओं को (डराकर्‌) भगाने वाला,
अतिज्वालाकरम्‌ = अत्यंत जलन करने वाला,
भीकरम्‌ = भयंकर,
गरलम्‌ = हलाहल विष,
त्वया = आपके द्वारा,
गले = गले में,
निक्षिप्तम्‌ = रख लिया गया,
न = न (तो),
गिलितम्‌ = गले से नीचे निगला गया (और),
न = न,
एव = ही,
उद्गीर्णम्‌ = उगला गया ।
इदम्‌ = यह,
एकम्‌ = एक,
तु = ही,
परमोपकारकम्‌ = अत्यन्त उपकारक कृत्य,
वा = क्या (आपकी कारुण्यपूर्ण महत्ता बताने के लिये),
अलम्‌ = पर्याप्त,
न = नहीं है ?

 


Dr.T.M.P.Mahadevan

O Lord of souls, Is not this single supreme deed of help enough (to proclaim Thy merci)? With a view to protect the beings, moving and non-moving residing inside Thy stomach, as well as outside, Thou didst place in Thy throat the flaming and fearful poison that was making all the gods run for life; it was neither taken in or thrown out! 
In this verse and the next, Siva is praised as the sole benefactor of the world. So often is Siva regarded as the world-destroyer that His role as protector is seldom remembered.

In the Puranas, the story is told, of how Siva saved all beings by swallowing the Halahala poison. The gods and the demons churned the milk-ocean with a view to gain therefrom the ambrosia that would make them immortal. But the first object to arise out of the churning was the world-destroying poison, Halahala. The gods and the demons alike took to their heels, dreading death. Out of great compassion Siva came to their rescue, took the poison in His hand and placed it in His mouth, in order to save them; if the poison went into His stomach, the creatures residing there would be destroyed; so, He retained the poison in His throat. As consequence, His white throat became blue or dark. Hence, the epithets, Nilakantha, Kalakantha, Nilagriva. The blue throat of the Lord reveals His beauty and auspicious nature; He is Srikantha.

Here are the two verses from Sundaramurti’s Tevaram:

“When the celestials used the serpent that bites and the mountain to churn the ocean, there emerged poison. Fearing that it might destroy the worlds, You Yourself took the poison as nector – nor did You spit it out. You are the beautiful one presiding over Tirupputtur (7.8.10)

When the beautiful mountain and serpent were used as churning rod and rope respectively to churn the ocean, deadly poison emerged. As the assembled persons took to their heels in fear, You thought of saving the celestials and the mad one that You are, You took the poison and kept it in Your throat. Oh Lord of Tiruppunkur, seeing this virtuous conduct of Yours, I have come to Your feet (as my refuge)” (7.55.5)

Swami Tapasyananda

O Thou Master of all souls! In order to protect the living and non-living beings that are within and without Thee, Thou didst neither swallow nor vomit, but retained in Thy throat, that terrible flaming poison (Kalakuta), which scared away all the celestials. Is not this one supreme act of service enough (to establish Thy greatness)?


नालं वा परमोपकारकमिदं त्वेकं पशूनां पते
पश्यन् कुक्षिगतांश्चराचरगणान्बाह्यस्थितान् रक्षितुम् ।
सर्वामर्त्यपलायनौषधमतिज्वालाकरं भीकरं
निक्षिप्तं गरलं गलेन गलितं नोद्गीर्णमेव त्वया ॥ ३१ ॥

पशूनां – To the jeevas who are pasu;

हे पते – Hey! Easane! Hey! Rakshakane!

कुक्षिगतान् – Those who reached your belly as their abode;

बाह्यस्थितान्  – that which seemingly remaining outside;

चराचरगणान्  – the groups of moving and non-miving ones;

रक्षितुम् – to protect (them);

गले – in the neck;

निक्षिप्तं – kept (there);

न गिलितं – neither been swallowed;

 न उद्गीर्णमेव  – nor been spit out;

परमोपकारकं  – of supreme help in releiving, soothing;

पश्यन्  – who keeps thinking;

त्वया – by you;

अतिज्वालाकरं – that which was spreading fire in great abundance;

भीकरं  – creating mortal fear;

गरलं – that aalahaala poison that sprang out of the milky ocean;

सर्वामर्त्यफलायनौषधम्  – that became relief (medicine) to those devas who were running away;

इदं  – this;

एकं तु  – alone;

नालं वा – is it not enough to know of your love and kaarunyam?

Commentary

Aum

Hey! Parameswara! To know your great kaarunyam, endless sakthi and eternal love, is not recalling your fantastic feat of aalaahala paanam enough! Hey! Jagadeesaa! You have taken a vow to protect the entire universe and all the living beings inside and out, is it not? The wonder of it all is that you put into your mouth that terrible poison and when Paarvathi stopped you from swallowing because she feared that the jeevaraasis and the worlds inside you would die, yet you would not spit it out because you have taken the poison in to protect the worlds outside! So you kept it in your throat and turned it into an aabharaNam. No other god could have done this extraordinary feat! Thus the very name ‘ThiruneelakaNtam’ stuns the bhaktha and turns him into ecstacy!

கடிக்கும் அரவால் மலயால் அமரர்
கடலைக் கடைய எழுகாள கூடம்,
ஒடிக்கும் உலகங்களை என் றதனை உமக்கே
அமுதாக உண்டீர் உமிழீர்,
இடிக்கும் மழைவீழ்த் திருத்திட்டருவி இருபாலும்
ஓடி இரைக்குந் திரைக்கை,
அடிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை அழகார்
திருப்புத் தூர் அழக னீரே.
(சுந்தரர் தேவாரம்)

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading