श्रीशिवानन्दलहरी -३० – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -30 – Sri Sivaanandalahari-30

(Published every Monday )

இனிய விசுவாவஸு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Kanch Acharya’s Anugraha Bhashanam

श्रीशिवानन्दलहरी -३०

वस्रोद्धूतविधौ सहस्रकरता पुष्पार्चने विष्णुता
गन्धे गन्धवहात्मतान्नपचने बर्हिर्मुखाध्यक्षता।
पात्रे काञ्चनगर्भतास्ति मयि चेद्बालेन्दुचूडामणे
शुश्रूषां करवाणि ते पशुपते स्वामिंस्त्रिलोकीगुरो ॥ ३० ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -30

வஸ்த்ரோத்³தூ⁴தவிதௌ⁴ ஸஹஸ்ரகரதா புஷ்பார்சநே விஷ்ணுதா,
க³ந்தே⁴, க³ந்த⁴வஹாத்மதா(அ)ந்நபசநே, ப³ர்ஹிர் முகா²த்⁴யக்ஷதா।
பாத்ரே காஞ்சந-க³ர்ப⁴தாஸ்தி மயி சேத்³, பா³லேந்து³சூடா³மணே
ஶுஶ்ரூஷாம்ʼ கரவாணி தே பஶுபதே ஸ்வாமிந், த்ரிலோகீகு³ரோ ॥ (30)


  बाल+इंदु-चूडामणे! पशुपते! स्वामिन्‌! त्रिलोकी-गुरो! वस्त्र+उद्धूत-विधौ सहस्रकरता पुष्प+अर्चने विष्णुता गन्धे गन्ध-वह+आत्मता अन्न-पचने बर्हिर्मुख+अध्यक्षता पात्रे कांचन-गर्भता मयि अस्ति चेत्‌ ते शुश्रूषां करवाणि॥



ईदृशस्य तवैवं भूतोऽहं शुश्रूषां कर्तुं न प्रभवामीत्याह्‌ – वस्त्रोद्धूतेति। हे बालेन्दुचूडामणे। चन्द्रशेखर! हे पशुपते! पशूनां संसारबद्धानां पते बन्धविमोचक! स्वामिन्‌! सर्वशरीराध्यक्ष! “नान्यतोऽस्ति द्रष्टे”ति श्रुतेः। त्रिलोकीगुरो। लोकत्रयस्यापि गूढार्थप्रकाशक! प्रथमतृतीयसंबुद्धिभ्यां तस्य व्यापकता, द्वितीयचतुर्थाभ्यां पाशविमोचकत्वं रहस्यार्थबोधकत्वं च प्रत्याय्यते (-येते)। एतावन्महिम्नः तव शुश्रूषां कदा करवाणि विरचयानि। कदेति चेद्‌? वस्त्रोद्धूतविधौ वस्त्रोपचारविधाने सहस्रकरता सूर्यता मय्यस्ति चेत्‌ करसहस्रस्य लोकत्रयव्यापकत्वेन व्यापकीभूतपरमेश्वराच्छादकत्वं संभवति, नेतरस्येत्यभिप्रेत्य आत्मने तत्तासंभावनम्‌। पुष्पार्चने तदनन्तरकर्तव्यपुष्पोपचारविधाने विष्णुता विष्णोर्भावः विष्णुता व्यापकत्वं विष्णुसदृशब्यापकत्वमित्यर्थः। मय्यस्ति चेत्‌गन्धे गन्धोपचारे गन्धवहात्मता वायुस्वरूपता विलक्षणगन्धप्रापकत्वशक्तेः वायौ विद्यमानत्वात्‌ तत्तासंभावनम्‌। अन्नपचने पक्वहविरूपचारे बर्हिर्मुखाध्यक्षता बर्हिरग्निः मुखं येषां तेषामध्यक्ष इन्द्रः तत्ता च मय्यस्ति चेत्‌ तव शुश्रूषां तदा करवाणिपात्रे पात्रोपचारे काञ्चनगर्भता हिरण्यगर्भत्वं ब्रह्मत्वमर्थपूर्णत्वं च मय्यस्ति चेत्तदा तव शुश्रूषां करवाणीत्यन्वयः ॥३०॥


ஈசா! உனக்கு உபசாராதிகளைச் செய்யும் சாமர்த்தியம் எனக்கில்லை, எனினும் தீனனை ரக்ஷித்தல் உனது கடமை என்கிறார்.


बालेन्दुचूडामणे – பா³லேந்து³சூடா³மணே – இளஞ்சந்திரனைத் தலையில் ஆபரணமாகச் சூடியுள்ளவரே!

पशुपते – பஶுபதே – ஸகல ஜீவன்களாகிய பசுக்களுக்கும் பதியாய் விளங்குபவரே

स्वामिन् – ஸ்வாமின் – ஹே ஸ்வாமிந்!

त्रिलोकीगुरो – த்ரிலோகீகு³ரோ – பூ:, பூவ:, ஸ்வ:, என்ற மூவுலகங்களுக்கும் குருவென வந்து குணம்பல நீக்கி மெய்ஞ்ஞானத்தை தந்தருள்பவரே!

(என்னால் முழு வன்மையோடு உம்மை பூஜிக்க முடியவில்லையே என்ற வருத்தமே எனக்குள்ளது. ஏனெனில், என் பிரியப்படி உம்மைப் பூஜிக்க வேண்டுமானால்)

वस्‍त्रोद्‍धूतविधौ – வஸ்த்ரோத்³தூ⁴தவிதௌ⁴ – உமக்கு வஸ்திரங்கள் உடுத்தி உபசாரம் செய்வதற்கு

सहस्रकरता – ஸஹஸ்ரகரதா – ஆயிரக்கணக்கான கைகளையுடைய சூரியன்போல் (நான் ஆகவேண்டும்)

पुष्पार्चने – புஷ்பார்சநே – புஷ்பங்களைக் கொண்டு உம்மை பூஜிக்க

विष्णुता – விஷ்ணுதா – “பங்கய மாயிரம் பூவினில் ஓர் பூக்குறையத் தங்கண் இடந்தரன் சேவடிமேற் சாத்திய” சக்கரபாணியான விஷ்ணுபோல் (நான் ஆகவேண்டும்)

गन्धे – க³ந்தே⁴ – சந்தனங்கொண்டு உம்மை உபசரிப்பதற்கு

गन्धवहात्मता – க³ந்த⁴வஹாத்மதா – வாசனைகளை நன்றாய் அறிந்து அவ்வாஸனையைக் கவர்ந்து வரும் வாயுவின் தன்மையை நான் அடையவேண்டும்.

अन्नपचने – அந்நபசநே – அறுசுவைகளுடன் சமைத்த அன்னத்தைக் கொண்டு உம்மை உபசரிக்க

बर्हिर्मुखाध्यक्षता – ப³ர்ஹிர்முகா²த்⁴யக்ஷதா – தேவேந்திரன் போல் நான் ஆகவேண்டும்.

पात्रे – பாத்ரே – அர்க்ய பாத்திரம் முதலான உபசாரங்கள் செய்ய (எனக்கு)

काञ्चनगर्भता – காஞ்சநக³ர்ப⁴தா – பிரும்மாவின் தன்மை உண்டாகவேணும்

मयि अस्ति चेत् – மயி அஸ்தி சேத் – என்னிடத்தில் இத்துணைக் குணங்களையும் பெற்றேனாயின்

ते – தே – உம்மை

शुश्रूषाम् – ஶுஶ்ரூஷாம் – எனது மனது திருப்தியடையுமாறு பூஜிக்க

करवाणि – கரவாணி – வல்லவனாவேன்.


ஏ கருணைக்கடலே! உலகில் உள்ளும் புறம்புமாய் விளங்கி, நீர் சர்வபொருள்கட்கும் தலைவனாய் விளங்குகின்ற நிலையில், உமக்குரிய தொண்டு செய்து களிப்பிக்க எளியேனாகிய என்னால் இயலுமோ? நாரணனாதி திரிமூர்த்திகளும் இந்திரனாதி தேவர்களுமே ஒருவாறு அதற்கு ஏற்றவராவர், அல்லது அவர்கள் தன்மையாவது எனக்கிருப்பின் ஒருவாறு முயன்றாவது பார்க்கலாம். ஆகவே, என்னால் இயலாத ஒரு காரியத்தை யான் செய்யவில்லை என்பதைக்கொண்டே என்னைப் புறப்பணிப்பது நீதியுமாகாது, மேலும் நீர் தீனரக்ஷகனாதலின், தீனனாகிய என்னைக் காத்தல் உமக்கு இன்றியமையாக் கடமையுமாம்.


ஸம்ஸாரபந்ததிலிருந்து மக்களை காப்பாற்றுகின்‌ற ஹே பசுபதே! அற்ப மனிதனான நான்‌ உனக்குப் பணிவிடை செய்து, உன்‌ அருளைப் பெறுவது என்பது அவ்வளவு சுலபமல்ல, நீ ஸர்வவ்யாபியாக எங்கும்‌ நிறைந்‌திருப்பவன்‌. உனக்கு ஆடையுடுத்த என் இரு கைகள் போதாது. ஸூர்யன் ஸஹஸ்ர கரங்களையுடையவன். நான் ஸூர்யனாக ஆனால்தான் ஸர்வலோக வ்யாபியான உனக்கு “வஸ்த்ரம் தாரயாமி” என  வஸ்த்ர தாரணம்‌ செய்ய முடியும்‌. பாலசந்த்ரனை சூடாமணியாக தரித்‌திருக்கின்‌றவனே! விஷ்ணுவும்‌ எல்லா இடங்களிலும்‌ நிறைந்திருப்பவர்‌. ஸர்வவ்யாபியான உன்னை ஸர்வவ்யாபியான ஒருவரால்‌ தான்‌ அர்ச்சிக்க முடியும்‌. ஆகையால்‌ வாயுபகவான்‌ எல்லாவுலகங்களிலும்‌ ஸஞ்சரிப்பவர்‌. உலகங்களிலிருக்கின்‌ற சுகந்த த்ரவ்யங்களை நன்கு பகுத்தறிந்து பரப்பும்‌ சக்தி பெற்றவர்‌ அவரேயாவர்‌. “கந்தான்‌ தாரயாமி”” என சொல்லி உனக்கு சந்தனப்‌ பொட்டு வைத்து உபசரித்திட நான்‌ வாயுவாக ஆகவேண்டும்‌. திவ்யான்னங்களை பக்குவமாக சமைத்து உனக்கு கொடுத்து உபசரிக்க நான்‌ தேவேந்திரனாக ஆக வேண்டும்‌. அர்க்யபாத்யாதிகளை அளிப்பதில்‌ ப்ரஹ்மாவே சிறந்தவர்‌. உனக்கு அர்க்ய பாத்ரம்‌ முதலியவைகளை கொடுத்த உபசரித்திட நான்‌ ப்ரஹ்மாவாக ஆகவேண்டும்‌. ஆகையால்‌, ஹே ஸ்வாமின்‌! ரஹஸ்யார்த்‌தங்களை போதிக்கன்ற ஹே த்ரிலோககுரோ! ஸுர்யனாகவும்‌, விஷ்ணுவாகவும்‌, ப்ரஹ்மாவாகவும்‌, வாயுவாகவும்‌, தேவேந்திரனாகவும்‌ நான்‌ எப்பொழுது ஆகிறேனோ, அப்பொழுது தான்‌ உனது பூஜையை செய்ய முடியும்‌. அல்லாமல்‌ அவ்வளவு மஹிமை பொருந்திய வனை அற்பனான நான்‌ எவ்வாறு பூஜை செய்ய முடியும்‌.


ஏ பரமேச்வரா! தங்களை முறைப்படி பூஜிக்கவேண்டுமானால், ஸூர்யனாகவும் விஷ்ணுவாகவும், வாயுவாகவும் தேவேந்திரனாகவும், ப்ரஹ்மதேவனாகவும் இருக்கவேண்டும். அற்ப மனிதனான நான் தங்களுக்கு பணிவிடைகளை செய்து தங்களுடைய அருளை பெறுவது சாத்தியமல்ல.

பரமேச்வரனது தீனரக்ஷகபாவத்தை பா³லேந்து³சூடா³மணே என்ற பதமும், காமக்ரோதாதி பாசங்களினால் பாதிக்கப்பட்டு ஸம்ஸாரத்தில் முழுகிக்கொண்டிருக்கிற பக்தஜீவர்களை விமுக்தர்களாகச் செய்வதை பஶுபதே என்ற பதமும், ஸர்வத்தையும் தன் அதீனத்தில் வைத்துக்கொண்டிருப்பதை ஹே ஸ்வாமிந்! என்ற பதமும், வேதங்களுடைய ரஹஸ்ய அர்த்தங்களை அவித்யையில் மூழ்கிக்கொண்டிருக்கிற லோகங்களுக்கு, அந்த அந்த அதிகாரிகளுக்குத் தக்கபடி உபதேசம் செய்து அதன்மூலமாக அவர்களுடைய ஜென்மாவை ஸபலம் செய்வதனால்  ஹே த்ரிலோகீகு³ரோ என்ற ஸம்போதனமும் ப்ரகடனம் செய்கின்றன. குருவினுடைய அநுகிரஹத்தினால்தான் பூர்ண ஞானம் உண்டாகும். அதற்கு குரு ஸுஸ்ரூஷைதான் அந்தரங்க ஸாதனம் என்பதும் ஸித்தாந்தமாக வெளியாகிறது. இந்த விஷயத்தில் பகவத்பாதாளுடைய சிஷ்யரான தோடகாசாரியாரும்,  சகாவான குசேலஸ்வாமியோடு கூட ஸாந்தீபனி மஹர்ஷிக்கு ஸுஸ்ரூஷை செய்த க்ருஷ்ணபரமாத்மாவுமே சிறந்த ப்ரமாணம். இந்த ச்லோகத்தைச் சொல்லி பரமேச்வரனை நமஸ்கரிப்பவர்களுக்கு சிறந்த குருபக்தி உண்டாகி, தெளிவுஞானத்துடன் பரமேச்வரனுக்கு ஸுஸ்ரூஷை செய்யும் பாக்கியமும் கிட்டும் என்பதற்கு இந்த ச்லோகமே சிறந்த சான்று.


बालेन्दुचूडामणे = हे द्वितीया के चन्द्ररूप शिरोभूषणवाले !,
पशुपते = हे पशुपति !,
स्वामिन्‌ = हे अधीश !
त्रिलोकीगुरो = हे तीनों लोकों मे सबसे बड़े !
मयि = मुझमें,
चेत्‌ = यदि,
वस्त्रोद्धूतविधौ = (आपको) वस्त्र पहनाने के लिये,
सहस्रकरता = हजारों हाथों वाले सूर्य का स्वरूप (हो),
पुष्यार्चने = फूलों से अर्चना करने के लिये,
विष्णुता = विष्णु का स्वरूप (हो),
गन्धे = गन्धानुलेप करने के लिये,
गन्धवहात्मता = सुगन्ध फैलाने वाले वायु का स्वरूप (हो),
अन्नपचने = भोजन बनाने के लिये,
बर्हिर्मुखाध्यक्षता = अग्निनिर्वर्त्य यज्ञों के अध्यक्ष इन्द्र का स्वरूप (हो),
पात्रे = बर्तन बनाने केलिये,
काञ्चनगर्भता = हिरण्यगर्भ ब्रह्मा का स्वरूप,
अस्ति = हो (तो),
ते = आपकी,
शुश्रूषाम्‌ = सेवा,
करवाणि = करूँ ।

 


Dr.T.M.P.Mahadevan

O, the One who wearest the young moon as crest-jewel! O Lord of souls! O Master! O Teach of the three worlds! If there be in me the status of the sun with a thousand hands (rays) in the matter of dressing Thee in clothes, the status of Vishnu in the matter of worshipping Thee with flowers, the status of Vayu in the matter of applying sandal-paste (to Thy body), the status of Indra, the chief of Agni, in the matter of cooking food, and the status of Hiranyagarbha in the matter of making vessels, then may I render service to Thee!
In the previous verse, Siva was addressed as the world-teacher (loka-guru). In the present verse, he is called the teacher of the three worlds (triloki-guru).
In order to gain Siva’s grace, one has to worship Him. But how is it possible for the limited individual to worship Him? God is infinite; the individual is finite. How can the finite individual perform even formal worship consisting of offering to God, cloth, flowers, sandal-paste, cooked food, etc? In order to be able to do this, the finite individual should rise to the status of the gods such as Surya, Vishnu, Vayu and Indra.

Swami Tapasyananda

O Thou who hast as ornament the crescent moon in Thy matter locks! Thou master of creatures! Thou the Lord of all! Thou teacher of the worlds! Had I a thousand arms like the sun to offer Thee cloth; had I all-pervasiveness like Vishnu to worship Thee with flowers; had I the power of wafting fragrance like the air to wave incense before Thee; had I control over fire like Indra, the chief of Agni, to prepare cooked offerings for Thee; and had I origin in the Golden Egg like Hiranyagarbha to worship Thee with the needed vessel – then I could have accomplished Thy service.


वस्त्रोध्दूधतविधौ सहस्रकरता पुष्पार्चने विष्णुता
गन्धे गन्धवहात्मताऽन्‍नपचने बहिर्मुखाध्यक्षता ।
पात्रे काञ्चनगर्भताऽस्ति मयि चेद्बालेन्दुचूडामणे
शुश्रूषां करवाणि ते पशुपते स्वामिन्स्त्रिलोकी गुरो ॥ ३० ॥

हे बालेन्दुचूडामणे – Hey! You who is wearing Balachandra as a crescent jewel in the head;

हे पशुपते  – Hey! Pasupaasa vimochaka!

हे स्वामिन्  – You who keeps control of everything;

हे त्रीलोकीगुरो  – One who dispels the ambiguities found in the Vedas by explaining them clearly;

वस्त्रोध्दूधतविधौ – In doing upachaara to you by tieing vastram around you;

सहस्रकरता – Even if one is with a thousand hands like Surya;

पुष्पार्चने – in the matter of doing pushpaarchana;

विष्णुता – Vishnu who used his Lotus like eye as one of the flowers;

गन्धे – Sweet smelling substance such as sandalwood paste;

गन्धवहात्मता – In bringing the sweet smelling breeze such as the Shakti of Vayu;

अन्नपचने – in serving cooked food;

बहिर्मुखाध्यक्षता – the abilities of Devendra;

पात्रे – In doing upachaara with argya paathram;

काञ्चनगर्भता – that of the qualities and abilities of Brahma (being of gold);

मयि – In me;

अस्ति चेत् – If it happens to be (in me);

तथा – then itself;

शुश्रूषां – the pooja;

करवाणि – (I) would have done.

Commentary

Aum

This sloka is a Guru Vandanam to Sri Aadhi SankaraaL (reborn as our Pujya ParamaachaaryaaL Sri Chandrasekhara Saraswathi) to whom I do anekhakoti saashtaanga namaskaarams.

Hey! Baalendhu ChoodaamaNE! You are a deena rakshakan and you demonstrate this bhaava by wearing Baalachandran as your sikaalankaaram.

Hey! PasupathE! You turn the bhakthajeevas who are drowning into the samsaara saagaram because of their kaamakrodhaadhi paasams, into vimukthaas.

Hey! Swaamin! You have sarvam in your aadheenam.

Hey! TrilOka GurO! गुरोरनुग्रहेणैव पुमान्पूर्ण: प्रशान्तये  says the saastra. Only with Guru’s anugraham poorNa ज्ञानं  and saanthi happens. In your kindness you instruct everyone in all the lokas that are sinking in avidya, the divine knowledge of liberation, according to their respective qualifications, so they can have the सफलम्  of their janma.

‘गुरून् शुश्रुषया चैव ’ says the saasthra. Service to the Guru is the antharanga saadhanam to Guru’s anugraham. Hey! ThrilOka GurO! I need your kataaksham to become a paathram even to do susrushai to you because I lack the saamakriya that are required to do the service.

Hey! Parameswara! You are the Sarvavyaapi. I do not have the ability to do vasthropachaaram with the endless bright rays like Soorya. I do not have the ability of Kamalaakshan Visnu in doing pushpaarchana. I do not have the ability of Vaayu in bringing dhivya gandaas from all directions in offering sugandhObachaaram. I do not have the ability of ‘Baagasaasanan’ devaadhyakshakan Indran who has the bright face of agni, in cooking dhivya havis. In doing argyam, paadhyam and aachamaneeyam, I do not have the ability of the Swarnagharbhan Brahma who goes by the name Hiranyagharbhan. Without these qualifications how can I do the satisfying service to you?

Therefore, Hey! BaalEndhu ChoodaamanE! When are you going to give me the bhaagyam of doing susrushai to you?

Sri GurubyO Namaha!

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading