(Published every Monday )
श्रीशिवानन्दलहरी -२९
त्वत्पादाम्बुजमर्चयामि परमं त्वां चिन्तयाम्यन्वहं
त्वामीशं शरणं व्रजामि वचसा त्वामेव याचे विभो।
वीक्षां मे दिश चाक्षुषीं सकरुणां दिव्यैश्चिरं प्रार्थितां
शम्भो लोकगुरो मदीयमनसः सौख्योपदेशं कुरु ॥ २९ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -29
த்வத்பாதா³ம்பு³ஜ-மர்ச்சயாமி பரமம்ʼ, த்வாம்ʼ சிந்தயாம்யந்வஹம்ʼ,
த்வாமீஶம்ʼ ஶரணம்ʼ வ்ரஜாமி வசஸா, த்வாமேவ யாசே விபோ⁴।
வீக்ஷாம்ʼ மே தி³ஶ சாக்ஷுஷீம்ʼ ஸகருணாம்ʼ, தி³வ்யைஶ்ச்சிரம்ʼ ப்ரார்தி²தாம்ʼ
ஶம்போ⁴, லோககு³ரோ, மதீ³யமநஸஸ் ஸௌக்²யோபதே³ஶம்ʼ குரு ॥ (29)
विभो! त्वत्-पाद+अंबुजम् अर्चयामि परमं त्वाम् अनु+अहं चिंतयामि ईशं त्वां शरणं व्रजामि वचसा त्वाम् एव याचे। मे दिव्यैः चिरं प्रार्थितां सकरुणां चाक्षुषीं वीक्षां दिश। लोक-गुरो! शंभो! मदीय-मनसः सौख्य+उपदेशं कुरु।॥
पुनः प्रक्रारान्तरेणं तं प्रार्थयते- त्वदिति। हे विभो! विविधेन प्रकारेण भवतीति विभुः तस्य संबुद्धिः, सकलभुवनव्यापकेत्यर्थः। परमं सर्वोत्कृष्टं त्वत्पादाम्बुजं तव पादः अम्बुजमिवेत्युपमितसमासः। तद् अर्चयामि पूजयामि। अर्चायाः कायिकत्वात् हस्तादिभिः पूजयामीति फलितोऽर्थः। अन्वहं दिने दिने त्वामेतादृशं भक्तपराधीनं चिन्तयामि ध्यायामि। एवं पूजानन्तरं ध्यानं कृत्वा संरक्षणं शरणं याचते- ईशं जगत्कर्तारं त्वां शरणं जननमरणभयनिवारकं व्रजामि प्रपद्ये। वचसा वागिन्द्रियेण त्वामेव। एवकारेण तदितरेषां याच्ञाकर्मत्वं व्यावर्त्यते। इष्टम्, धातोः द्विकर्मकत्वादिष्टमित्यध्याहार्यम्। याचे प्रार्थये। तदिष्टं किमिति चेदाह- दिव्यैः देवतासमूहैः हे शंभो! सुखजनक! लोकगुरो! लोकानां भक्तजनानां गुरो रहस्यार्थप्रकाशक! मे मह्यं दिव्यैः दिवि भवैः दैवैः चिरं चिरकालात् प्रार्थितां सकरुणां करुणासहितामतिप्रीत्या सह वर्तत इति सकरुणां तां चाक्षुषीं चक्षुःसम्बन्धिनीं कटाक्षवीक्षणरूपां दिश देहि। सुखमेव सौख्यं स्वार्थे तद्धितः सुखस्वरूपं ब्रह्म तस्योपदेशं कुरु आत्मनः ब्रह्मतादात्म्यबोधनं कुर्वित्यभिप्रायः। मदीयमनसः मम संबन्धिमानसस्य सौख्योपदेशं कुरु कुरुष्व। विषयसुखस्य अनित्यत्वेन दुःखोत्तरत्वेन च तदुपेक्ष्य सौख्यं ब्रह्मेति ब्रह्मपर्यन्तानुधावनं कृतमिति ध्येयम् ॥ २९ ॥
சென்ற சுலோகத்தில் சிவபூஜையின் மஹிமையைச் சொல்லி, இதில் நித்யசுகமான சிவாநந்தத்தை அநுபவிப்பதற்கு அந்தரங்க ஸாதனமான பிரும்ம தத்வஞானத்தைப் பிரார்த்திக்கின்றனர்.
विभो – விபோ⁴ – எங்கும் வியாபித்துள்ளவரே
परमम् – பரமம் – ஸர்வோத்கிருஷ்டமான
त्वत्पादाम्बुजम् – த்வத்பாதா³ம்பு³ஜம் – தங்களது திருவடித் தாமரையை
अन्वहम् – அந்வஹம் – ப்ரதிதினம்
अर्चयामि – அர்சயாமி – பூஜிக்கிறேன்
त्वाम् – த்வாம் – உம்மை
चिन्तयामि – சிந்தயாமி – ஸதாகாலமும் தியானிக்கிறேன்
ईशम् – ஈஶம் – சர்வேசுவரராகிய
त्वाम् – த்வாம் – உம்மை
शरणम् – ஶரணம் – சரணமாக (ஸம்ஸாரத்தினின்று காப்பாற்றுகிறவனாக)
व्रजामि – வ்ரஜாமி – அடைந்திருக்கிறேன்
वचसा – வசஸா – இவ்வாறுள்ள அடியேன், என் வாக்கினால்
त्वामेव – த்வாமேவ – உம்மிடம்
याचे – யாசே – ஒரு வேண்டுகோளைக் கோருகிறேன். அது யாதெனில்
शंभो – ஶம்ʼபோ⁴ – சுககாரணரே!
लोकगुरो – லோககு³ரோ – பக்த ஜனங்களுக்கு ரஹஸ்யார்த்தங்களை உபதேசிக்கும் உத்தம குருவே!
दिव्यैः – தி³வ்யை꞉ – தேவர்களால்
चिरम् – சிரம் – எக்காலமும்
प्रार्थिताम् – ப்ரார்தி²தாம் – தங்களுக்கே வேண்டும் என்று பிரார்த்திக்கப்படுவதாயும்
सकरुणाम् – ஸகருணாம் – கருணை என்பதன் இருப்பிடமாயும் உள்ள
चाक्षुषीं वीक्षाम् – சாக்ஷுஷீம்ʼ வீக்ஷாம் – தங்கள் நயனங்களிலிருந்து கடைக்கண் பார்வையை
मे – மே – எனக்கு
दिश – தி³ஶ – கொடுத்தருள்வீர்
मदीयमनसः – மதீ³யமநஸ꞉ – (என்மீது தயவு வைத்து) என் மனதிற்கு
सौख्योपदेशम् – ஸௌக்²யோபதே³ஶம் – நிம்மதியான ஸுகத்தை (மோக்ஷத்தை) அளிக்கவல்ல உபதேசத்தைச்
कुरु – குரு – செய்தருள்வீர்.
அங்கிங்கெனாது எங்கும் நிறைந்து, எல்லாமாய் விளங்கும் பரமேச்வர! சாஸ்திரோக்தமாக, உமக்குள்ள மூவித வடிவங்களில் (உருவம், அருவுருவம், அருவம்), பாதார விந்தங்களைப் பணிவதால் உருவத்திருமேனியையும், தியானம் புரிவதால் அருவுருவத்திருமேனியையும், தஞ்சமடைவதால் அருவத்திருமேனியையும் வணங்குகின்றேன். எனது பிறப்பு இறப்பு என்ற ஸம்ஸார துவந்துவத்தை ஒழித்து, அருமறை முடிவில் கூறும் தானேதானாய் நிற்கும் நிரதிசயாநந்த இன்பநிலையைப் பெற, கருணாநிதியாகிய நீர் கிருபை புரிவீராக (என்பதாம்).
பலவிதமாக ப்ரகாசிக்கின்ற ஹே விபோ! ஸர்வலோகங்களிலும் உத்தமமாக விளங்குகின்ற உனது தாமரைத் திருவடிகளை ஸதாஸர்வகாலமும் என்னிருகைகளால் பூஜிக்கிறேன். தினந்தோறும் ஸர்வச்ரேஷ்ட புருஷனான உன்னை, பக்தர்களுக்கு அதீனனான உன்னை த்யானிக்கிறேன். ஸர்வ லோகங்களையும் காத்து ரக்ஷிக்கின்ற ஜகதீசனான, ஜனனம் மரணம் என்ற துக்கத்திலிருந்து காப்பாற்றுகின்ற உன்னைச் சரணமடைகிறேன். ஸுகத்தை கொடுக்கும் வல்லமையுடைய ஹே சம்போ! நீண்ட காலமாக தேவர்கள் உன் கடைக்கண் பார்வையை விரும்பி ப்ரார்த்தித்துக் கொண்டு காத்திருத்கிறார்கள். அந்த கடைக்கண் பார்வையை எனக்குக் கொடு என்று வாக்கினால் வேண்டிக்கொள்றேன். பக்தர்களுக்கு ரஹஸ்யமான தத்வார்த்தங்களை போதிக்கன்ற ஹே லோககுரோ! அநித்யமான விஷய ஸுகங்களில் ஈடுபடுகின்ற என் மனதை பரப்ரஹ்ம ஸ்வரூபத்தில் ஈடுபடுத்தி நிலையான பேரின்பத்தை அளிக்கின்ற ஆத்மஞானத்தை எனக்கு உபதேசம் செய்.
ஏ! எங்கும் நிறைந்த பரமேச்வர! தங்களையே தியானம் செய்து, தங்களையே சரணமாக அடைந்து, தங்களிடமே வேண்டிக்கொள்ளுகிறேன். தங்கள் கருணை ததும்பும் கடாக்ஷ வீக்ஷணத்திற்கு தேவர்கள் வெகுகாலமாகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதை எனக்கு அளித்து அருளவேண்டும். “இதுதான் சுகம் ” என்ற விஷயத்தை கிருபை புரிந்து உபதேசிக்க வேண்டும்.
பரமம்: எந்த பரமேச்வரனுடைய பாத கமலங்களானது ஜனன மரண ரூபமான ஸர்ப்பதினால் பீடிக்கப்பட்டு, பயந்து, ஸர்வலோகங்களையும் சுற்றிச்சுற்றி அலைந்தும் கூட நிர்பயத்தை அடையாமல் இருந்துகொண்டு வருகிறவனுக்கு நித்யசுகமான சிவானந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும்படியும், ம்ருத்யுவை ஜெயிக்கும்படியும் செய்கிறதோ, அப்படிப்பட்ட உத்க்ருஷ்டமான பாத கமலங்களைத் தான் பரமம் என்ற பதத்தினால் பகவத் பாதாள் வர்ணிக்கிறார்கள்.
ஸௌக்²யோபதே³ஶம் குரு: விஷய சுகமெல்லாம் அநித்யம். துக்கங்களுடன் கூடியது. ஆதலால் நித்தியமான பிரும்ம சுகத்தை அடையும் வழிகளை எடுத்து உபதேசிக்க வேண்டுமென்பது கருத்து. ஈஶாந꞉ ஸர்வவித்³யாநாம்ʼ என்று அதாவது, ஸகலவித்தைகளுக்கும் ஈசனாக இருந்து வருகிற பரமேச்வரனை லோக குரோ என்ற ஸம்போதனையினால் அழைக்கிறார்கள்.
“தீ3க்ஷாம்ʼ மே தி³ஶ சாக்ஷுஷீம்ʼ” என்ற பாடம் இருந்தால் சாக்ஷுஷதீக்ஷையை எனக்கு அளிக்கவேண்டுமென்பது பொருள். அதாவது கடைக்கண் பார்வை மாத்திரத்தினால் சிஷ்யர்களுக்கு அறிவும் சித்தியும் உண்டாகும்படி சிலர் அனுகிரஹிப்பார்கள். அதற்கு “சக்ஷுஷீ தீக்ஷை ” என்று பெயர். அதை இங்கு பகவத்பாதாள் வேண்டுகிறார்.
இந்த ச்லோகத்தை சிவசந்நிதியில் சொல்லி நமஸ்கரிப்பவர்களுக்கு நிச்சயமாக பரமேச்வரன் ப்ரத்யக்ஷமாகி அவர்களுடைய மனதிற்கு பிரும்ம தத்வத்தை உபதேசித்து அவர்களுடைய ஜென்மாவை சபலம் செய்வார் என்பதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம்.
विभो = हे व्यापकतत्व !,
शम्भो = हे शंभु !,
लोकगुरो = हे समस्त संसार के गुरु !
[अहम् = मैं],
अन्वहम् = प्रतिदिन,
त्वत्पादाम्बुजम् = आपके चरण कमल की,
अर्चयामि = अर्चना करता हूँ,
परमम् = परात्पर,
त्वाम् = आपका,
चिन्तयामि = ध्यान करता हूँ,
त्वाम् = आप,
ईशम् = परमेश्वर की,
शरणम् = शरण,
व्रजामि = लेता हूँ,
त्वाम् = आप से,
एव = ही,
याचे = याचना करता हूँ ।
दिव्यैः = देवताओं द्वारा,
चिरम् = चिर काल से,
प्रार्थिताम् = प्रार्थित (मांगी गयी),
चाक्षुषीम् = (आपके) नेत्रों की,
सकरुणाम् = करुणायुक्त,
वीक्षाम् = दृष्टि,
मे = मुझपर,
दिश = डालिये (और),
मदीयमनसः = मेरे मन को,
सौख्योपदेशम् = आनन्द का उपदेश,
कुरु = कीजिये ।
Dr.T.M.P.Mahadevan
O all-pervading One! I worship Thy lotus-feet; I meditate daily on Thee that art supreme; I seek refuge in Thee that art the Lord; through words I beg of Thee alone; cast on me the look of Thy eyes that are full of grace, the look for which the gods have been praying for long. O Sambhu! O world-Teacher! Give to my mind the instruction about happiness!
Siva, the world-teacher, is besought here for instruction in the mode of gaining release. In order to receive the instruction, one has to surrender oneself to Him. It is complete self-surrender that will elicit grace from God. And, it is is through the divine grace that the liberating wisdom can be gained.
Compare the Bhagavad-gita, ii,7 where Arjuna makes the supplicatin to Sri Krishna:
yach-chhreyaḥ syānniśhchitaṁ brūhi tanme
śhiṣhyaste ’haṁ śhādhi māṁ tvāṁ prapannam
यच्छ्रेय: स्यान्निश्चितं ब्रूहि तन्मे
शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम् |
(Tell me that which is decidedly good; I am thy disciple. Do instruct me, who have sought refuge in Thee.)
Also, see Bhagavad-gita, xi, 43:
पितासि लोकस्य चराचरस्य
त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान् ।
न त्वत्समोऽस्त्यभ्यधिक: कुतोऽन्यो
लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव ॥
pitāsi lokasya carācarasya
tvam asya pūjyaś ca gurur garīyān
na tvat-samo ’sty abhyadhikaḥ kuto ’nyo
loka-traye ’py apratima-prabhāva
(Of this world consisting of moving and non-moving creatures, Thou art Father, the Adorable, and the great Teacher; in all the three worlds, there is no one who is equal to Thee; how can there be anyone superior, O Possessor of incomparable splendour!)
In the present verse, the four levels of God-experience are mentioned, and the modes of gaining them are indicated.
Swami Tapasyananda
I worship Thy lotus feet, O All-pervading One! I contemplate always on Thee, O Supreme Being! I surrender myself to Thee, O Master of the Worlds! I beg Thee for the fulfilment of only one wish. O Giver of Happiness! Deign to bestow on me, O teacher of the World, that merciful glance of Thy looks, so eagerly sought by the Divinities, and impart to my mind the instruction that confers eternal bliss.
त्वत्पादांबुजमर्चयामि परमं त्वां चिन्तयाम्यन्वहं
त्वामीशं शरणं व्रजामि वचसा त्वामेव याचे विभो ।
वीक्षां मे दिश चाक्षुषीं सकरुणां दिव्यैश्चिरं प्रार्थितां
शंभो लोकगुरो मदीयमनस: सौख्योपदेशं कुरु ॥ २९ ॥
हे विभो! – Hey! Sarvavyaapi!
परमं – that superior tatvam;
त्वत्पादांबुजं – to you lotus feet;
अर्चयामि – I do worship;
अन्वहं – every day;
त्वां – of you;
चिन्तयामि – I do dhyaanam;
ईशं – as jagadeesa;
त्वां – to you;
शरणं – I surrender to you asking you to save me from the dhukkham of samsaara;
व्रजामि – I do (reach out);
वचसा – by speech;
त्वामेव – only you;
याचे – beg of you for sakhala अभीष्ट (wishes);
हे शंभो – Hey! Parampoule! You arethe root cause for all sukham;
दिव्यै – By Hari Brahmaadi devas;
चिरं – for a very long time;
प्रार्थितां – that which has been prayed for;
सकरुणां – that which is blended with karuNa;
चाक्षुषीं – that which belongs to (your) eyes;
वीक्षां – that side glance;
मे – to me;
दिश – bestow;
हे शंभो – Hey! SambO! the giver of sukham!
लोकगुरो – Guru who teaches advaita vedanta to all the 14 lokas;
सौख्योपदेशं – Nithya Sukha upadesam which is the unified ज्ञानं;
कुरु – Please do give.
Commentary
Aum
சந்திப்ப்து நந்தி தன்திருத் தாளிணை
சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி
வந்திப்ப்து நந்தி நாமம் என் வாய்மையாற்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.
(திருமந்திரம்)
मर्त्यो मृत्युव्यालभीतः पलायन्लोकान्सर्वान्निर्भयं नाध्यगच्छत् ।
त्वत्पादाब्जं प्राप्य यदृच्छयाद्य स्वस्थः शेते मृत्युरस्मादपैति ।।
AachaaryaaL describes the lotus feet of Shiva as ‘परमं’. Hey! Parameswara! Your lotus feet give the one who has surrendered to them the surpassing freedom from Mruthyu. This Mruthyu is like a horrible snake of birth and death, the one that spits and devours, fearing whom one roams all the worlds endlessly. The terror of this Mruthyu is impossible to overcome until your lotus feet save him who surrenders to you. What a great relief of immense proportion that your lotus feet can bring to the distressed! Your Charanaaravindham enables one to experience nithya sukhaanubhavam.
On a daily basis, Hey! Sarveswara! to your lotus feet that is remarkable as an aid to the ultimate shelter (सर्वोत्कृष्ट मोक्षायतनं) I offer Vilva leaves and colorful fl0wers and do archana and do dyaanam of Gayatri and Panchaakshari in the pure heart of mine and in this way according to Geetha: ईश्वर: सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति। भ्रामयन्सर्वभूतानि यन्त्रारूढानि मायया।। you remain in the hrudaya pundareekam of sakala praanis from Brahma to an ant. I consider with a firm heart that there is none other than you to attain to and in that view I am prone to surrender to you only. Besides I will beg only you to cross over the great ocean of samsaara of birth and death, to attain all sorts of abheeshtas or desired wishes and to drive out my thaapathrayas. You alone are saraNagatavatsalan, bhaktaparaadeenan. You will never give me up. You will never give me up.
Hey! Sarvavyaapaka! For eons Brahma, Hari and other devas have been waiting for your karunaa kataaksham. I am quite small compared to them, yet I have abandoned everything and surrendered to you. You are alone my saviour. So please do show me your kataaksham. Hey! Loka GurO! Since vishaya sukham is anithyam please do give me सौख्योपदेशं because ‘ईश्वर सर्वविद्यानां ’, you are all the vidya and you are the only Guru! AachaaryaaL thus calls him लोकगुरो.
Guru Maharaaj Guru Jai Jai Parabrahma SwaroopaNam.
![]()
One Response
அருமை!