Sage of Kanchi

அடிவைத்துவா அருட்கடலே

Beautiful poem – touched my heart

அடிவைத்துவா அருட்கடலே
விடிவைத்தரவா ஒளிக்கடலே
படியிறங்கிவா பொற்பதமே
மனமிரங்கிவா மஹாதெய்வமே!

தெளிவைத்தரவா ஞானக்கடலே
களைப்பைப்போக்கவா ஆனந்தக்கடலே
மெள்ளவேவா மல்லிகைப்பதமே
அள்ளியேத்தரவா அருமைதெய்வமே!

நிம்மதித்தரவா தவக்கடலே
நேரிலேவா சத்தியக்கடலே
நில்லாதுவா தாமரைப்பதமே
நிழலைத்தரவா நிர்மலதெய்வமே!

ஹரஹர சங்கர எனும் உயர் நாமம்
தினம் பாடியே இங்கு உயர்வோம் நாமும்!
ஜயஜய சங்கர என்று இனியேனும்
தினம் துதித்து வளர்வோம் மேன்மேலும்!!

-ஜெயந்தி ராம்கி

30//12/2019

Exit mobile version