
Jaya Jaya Shankara Hara Hara Shankara – The past few posts Sri Periyava spoke about the importance of men wearing Vibuthi or Thiruman and its significance. Here Sri Periyava tells how important it is for women to wear Turmeric Kumkum between their eyebrows and on top of their foreheads. It is very sad many women come with a blank forehead even whey come to temples in US (including Periyava devotees). Sri Periyava points out the Stick Bindi women wear on their foreheads may contain ‘Gelatin’ (the adhesive) which will earn us the sin of ‘Gho Hathi’ (Killing Mother Cow) and tells compulsorily to use the traditional Kumkum. Gelatin is used in other food products we use in our daily lives so it is better to check the ingredients before we buy any product so we do NOT commit ‘Gho Hathi’ Sin. Keeping our food and life style simple, traditional is the best option to avoid this. Though this was posted over a year ago we need to look at it from a different perspective and hence this post. Please pass it as much as you can to like minded people who have faith in what Sri Periyava says. Ram Ram
Did a search on what Gelatin is about and here is a summary:
‘Gelatin’ is a protein/fat obtained by boiling skin, tendons, ligaments, and/or bones with water. It is usually obtained from cows or pigs. Gelatin is used in shampoos, face masks, and other cosmetics; as a thickener for fruit gelatins and puddings (such as Jell-O); in chocolates, candies, marshmallows, cakes, ice cream, and yogurts; on photographic film; and in vitamins as a coating and as capsules.
திலக தாரணம்
அலக்ஷ்மீகரமானதற்கெல்லாம் பூர்ணகும்பம் வைத்துக் கூப்பிடுவதாக் இப்போது பல நடந்து வருவதில் இன்னொன்று, பெண்கள் முறையாகத் திலக தாரணம் பண்ணிக் கொள்ளாமலிருப்பது. கன்யாக் குழந்தைகளுக்கும் ஸுமங்கலிகளுக்கும் திலகம் இட்டுக் கொள்வதை அத்யாவச்யமான அலங்காரமாக நம் ஆசாரத்தில் விதித்திருக்கிறது. அது முகத்துக்கே ஒரு சோபையைக் கொடுப்பதோடு சுபமான சக்திகளை வரவழைத்துத் தருவது ‘ப்ரூகுடி’ என்ற புருவ மத்தியில் யோக சாஸ்த்ர சக்ரங்களில் ஒன்று இருக்கிறது. சித்தத்தை ஒருமுகப்படுத்தி ‘கான்ஸென்ட்ரேட்’ பண்ணுவதற்கு அந்த இடத்திலேதான் நம்முடைய த்யான லக்ஷ்யத்தை வைத்துப் பார்ப்பார்கள். ‘ஸரியாக அந்த இடத்தில் திலகம் இட்டுக் கொள்வது நம்மிடமுள்ள நல்ல சக்திகள் வ்ரயமாகாமல் மூடி போட்டுக் காப்பாற்றுகிறது; energy band -ஐ protect பண்ணுகிறது’ என்று இந்த நாள் அறிவாளிகளும் சொல்கிறார்கள்.
நல்ல மஞ்சள் குங்குமந்தான் நெற்றிக்கு இட்டுக் கொள்வதற்கானது. ஸுமங்கலிகள் புருவங்களுக்கு மத்தியில் இட்டுக் கொள்வதோடு, அதைவிட முக்யமாக வகிட்டிலும் இட்டுக்கொள்ளவேண்டும். அதுவே பரம ஸெளபாக்யம், ஸுமங்கலிகளின் வகிடு மஹாலக்ஷ்மியின் வாஸ ஸ்தானங்களில் ஒன்று. அம்பாளே தன்னுடைய வகிட்டில் செக்கச் செவேலென்று ஸூர்யோதய ரேகை மாதிரிக் குங்குமம் இட்டுக்கொண்டிருந்ததை ஆசார்யாள் ‘ஸெளந்த்ர்ய லஹரி’யில் பாடியிருக்கிறார்.
கன்யாக் குழந்தைகள் சாந்தும் இட்டுக் கொள்ளலாம். அகத்திலேயே அரிசியைக் கருக்கிப் பண்ணிய கருப்புச் சாந்து.
கடையிலே கலர் கலராக விற்கிற பொட்டுக்களை வாங்கி ஒட்டிக்கொள்வது அடியோடு தப்பு, அந்தப் பொட்டை சர்மத்தோடு ஒட்டச் செய்கிற கெமிகலோ, எதுவோ ஒன்று அநாசாரமானதாகவே இருக்கும். அதனால் நாளடைவில் சர்மவியாதி ஏதாவது உண்டானாலும் உண்டாகலாம். ஜெலாடினாக அது இருக்குமானால் அதில் மாட்டுக் கொழுப்புக் கூட இருக்கக்கூடும். இப்படி இருந்தால் பரம மங்களமான திலக தாரணம் என்பதே பசுவதைக்கு உடந்தையாக இருக்கிற மஹா பாபம் வரை கொண்டு நிறுத்துவதாக ஆகிவிடும்.