Sage of Kanchi

ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம:


காமாக்ஷியின் கடாக்ஷம் கருப்பாக இருக்கிறது. அதில் அம்பாள் எப்போதும் மை இட்டுக் கொண்டு இருக்கிறாள். பார்வை அங்கே இங்கே சலித்துக்கொண்டே இருக்கிறது. இப்படி இருந்தாலும், இந்த கடாக்ஷம், வணங்கும் பக்தர்களுக்கு வெண்மையும், அதாவது தூய்மையும், ஈஷிக்காத தன்மையும், மன உறுதியையும் தருகிறதே! இதெப்படி! என்று ஒரு கடாக்ஷ சதக ஸ்லோகத்தில் வரும்.

कामाक्षि कार्ष्ण्यमपि सन्ततमञ्जनं च
बिभ्रन्निसर्गतरलो‌
sपि भवत्कटाक्षः ।
वैमल्यमन्वहमनञ्जनतां च भूयः
स्थैर्यं च भक्तहृदयाय कथं ददाति ॥


காமாக்ஷி
கார்ஷ்ண்யமபி ஸந்ததமஞ்ஜனம்

பி³ப்ரன்நிஸர்க³தரலோபி வத்கடாக்ஷ:

வைமல்யமன்வஹமனஞ்ஜனதாம் பூ:

ஸ்தை²ர்யம் ச ப⁴க்தஹ்ருʼத³யாய கத²ம் த³தா³தி ॥

கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் வாழ்க்கையிலிருந்து பல நிகழ்ச்சிகளைக் கூறி, ஸ்வாமிகளுடைய தூய்மையும், ஜனங்களிடம் ஈஷிக்காத தன்மையும், பகவானிடத்தில் உறுதியான பக்தியையும் இங்கே விளக்கியிருக்கிறேன். -> அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு

அப்பேர்பட்ட ஸ்வாமிகளின் பக்திக்கு கிடைத்த பலன் என்ன தெரியுமா? மஹாபெரியவா அழைத்து, தனக்கு பாகவதம் படிக்கச் சொன்னது தான். அந்த பாகவத ஸப்தாஹத்தை எவ்வளவு தீவிரமாக, ஒரு ஞான யக்ஞமாக, ஸ்வாமிகளும் மஹாபெரியவாளும் செய்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டால்தான் அதன் பெருமையை உணர முடியும். அதை இங்கே விவரித்து இருக்கிறேன்.-> மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம்

இவற்றையெல்லாம் அறிவதால் எனக்கென்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். आत्मज्ञं ह्यर्चयेद् भूतिकाम: ‘ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம:’ என்று உபநிஷத் வாக்யம். இவ்வுலகில் செல்வத்தை விரும்புபவன் ஞானிகளை பூஜிக்க வேண்டும் என்று பொருள். அப்படி இந்த மஹான்களின் மஹிமையை பேசினால், கேட்டால், நினைத்தால் நமக்கு வேண்டிய படிப்பு, பணம், அழகு, புகழ் மற்றும் விரும்பிய எல்லா ஆசைகளையும் மகான்களுடைய அனுக்ரஹம் பூர்த்தி செய்யும்.  ஆனால் அனுக்ரஹத்தால் பேறுகளை பெற்றால், அது கொஞ்சம் வித்யாசமாக இருக்கும். அதையும் ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியோடு இணைத்து இங்கே விளக்கியிருக்கிறேன். கேட்டுப் பாருங்கள். -> வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம்

Exit mobile version