Sage of Kanchi

Periyava Golden Quotes-904


பெங்கால் மாதிரி மத்ஸ்ய ஸம்பந்தங்கூட இல்லாமல் ராஜஸ்தானம், குஜராத், ஸெளராஷ்ட்ர, கட்ச் மத்யப் பிரதேஷ் ஆகிய ராஜ்யங்களில் எல்லா ஜாதியாரிலுமே மரக்கறி உணவுக்காரர்கள் ஏராளமாயிருக்கிறார்கள்.

டேராடன் மாதிரி இடங்களில் பிராம்மண கூலிக்காரன் முதுகிலே பெட்டி கட்டிக் கொண்டு அதில் வெள்ளைக்கார துரையை உட்கார்த்தி வைத்துக் கொண்டு போவான். ஆனால் வழியில் வாயிலே பச்சைத் தண்ணி விடமாட்டானாம். போக வேண்டிய இடத்துக்குப் போய் விட்டு, ஸ்நானம் பண்ணித் தன் ஆஹாரத்தைத் தானே சமைத்துத்தான் சாப்பிடுவான்.

தர்வான், வேலைக்காரி முதலியவர்கள்கூட யஜமான் வீட்டில் நாயாக உழைத்தாலும், அந்த வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிடுவது கிடையாது என்பதே வடதேசத்து வழக்கம் ஜாதியில் உசத்தி, தாழ்த்தி சொல்லிக் கொண்டு “தாழ்ந்தவன் வீட்டில் உசந்தவன் சாப்பிட்டாலென்ன?” என்று கேட்டுக் கொண்டு எல்லாவற்றையும் குழப்பிப் பல பட்டடை பண்ணுவதுதான் சீர்திருத்தம் என்று இங்கே நாம் நினைக்கிறோமென்றால், அங்கே தாழ்ந்த நிலையில் உள்ள வேலைக்காரன்கூட உயரந்த நிலையிலுள்ள முதலாளி வீட்டில் சாப்பிடுவதில்லை என்றிருக்கிறான்! இப்படி ஜாதிக்காக இல்லாமல் ‘ஸ்வயம்பாகம்’ என்ற நியமத்துக்காக என்று வைத்துக் கொள்ளும்போது, சண்டையும் இல்லாமலிருக்கிறது.

வடக்கே ஸம்பந்திகள் வீட்டில்கூட ஜன்மத்திலேயே ஒரு நாளாகக் கல்யாண தினத்தன்று மட்டுந்தான் சாப்பிடுவார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

In places like Rajasthan, Gujarat, Saurashtra, Kutch, Madhya Pradesh, etc. there are many vegetarians irrespective of their caste, who do not eat even fish like Bengalis.  In Dehradun, one can see a Brahmin servant who carries a European master on his back. It is said that he doesn’t drink even a drop of water on the way. After leaving the master at the destination, he goes home, takes bath, cooks his own food and eats it.

Even house maids, guards and the like do not eat at their master’s house though they may do all the hard work there. This is the practice in North India. Here in south, we discriminate one caste from another, label one caste as superior and another as inferior. We argue, ’why can’t people of upper caste eat at the houses of people of lower caste?’ and create confusion about customs and traditions.  We call these as social reforms. On the other hand, in the North, even a servant belonging to the economically deprived section of society never eats in the house of someone who is well off! The discipline of cooking one’s own food helps overcome caste related arguments and disputes.

Interestingly, in North India, people never eat in their Sambandhi’s house (families related through marriage), except on the day of the wedding – which is only once in lifetime! – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Exit mobile version