Thanks Shivaraman for the photo and article.
Sri Painganadu Srinivasa Sastrigal was born on 4th.April 1911 and became Sanyasi on 25th.April 1975. Sri Mudikondan Swamigal ( as he was called ) told Shivaraman this experience. Sri Swamigal reached the lotus feet of Sri Mahaperiyava on the day of Sri Mahaperiyava Aaradhana on 22.12. 2000

பெரியவா சரணம்
மஹா பெரியவா கும்பகோணத்திலிருந்து திருமால்பூர் நோக்கி தனது விஜயத்தை பரிவாரங்கள் புடைசூழ தொடருகிறார். பல மைல்களைக் கடக்க வேண்டும்.
மடத்துச் சாமான்கள் எல்லாம் மாட்டு வண்டிகளில் ஏற்றப்பட்ட பின், மடத்து ஊழியர்களும் பக்தர்களும் மகானைப் பின் தொடர்ந்து நடந்து வந்தார்கள். வண்டியில் பூட்டப்பட்ட ஒரு மாடு காலில் அடிபட்டு நொண்டியபடி நடந்தது….
அந்த மாட்டை விரட்ட வேண்டாம் என மகான் கட்டளையிட, மெதுவாகவே நடந்து சென்றார்கள். பக்தர்களில் ஒருவராக மஹாபெரியவாளின் பரமபக்தரான முடி கொண்டான் சாஸ்திரிகளும் நடந்து சென்றார்.
அவரால் வெயிலில் நடக்கமுடியவில்லை. மிகவும் சிரமத்துடன் நடந்தார். மெதுவாக அருகில் இருந்த பக்தரிடம் சங்கடத்துடன் கேட்கிறார், “திருமால்பூர் இன்னும் எத்தனை தூரம்?” இது இயலாமையால் எழுந்த கேள்வி.
“என்ன சொல்கிறார்” மகான் கேட்கிறார். இவர் சொன்னதை அவரிடம் சொல்ல முடியுமா? கேட்டதை மறைத்து விடுகிறார்கள். முடி கொண்டான் என்ன கேட்டார், அவரது இப்போதைய நிலை என்ன என்று மகானுக்குத் தெரியாதா?
அடுத்த நிமிடம் அவர் வானத்தை நோக்கி தனது கருணை நிறைந்த பார்வையை செலுத்துகிறார். உக்ரமா சூட்டை வீசிக் கொண்டிருந்த சூரியன், கறுத்த மேகங்களால் மறைக்கப்படுகிறார். வெயில் மறையவே சூடு தணிந்தது.
வெகு தூரத்தில் இருந்த திருமால்பூரை அவர்கள் அடையும் வரை அந்த மேகங்கள் குடை பிடித்தபடி, எல்லோர் சிரமத்தையும் போக்கி விட்டது.