Sage of Kanchi

Somavara-Pradosham special drawing & a poem

Simple & outstanding poem by mama…. As usual, great drawing…

Hara Hara Sankara Jaya Jaya Sankara!

MahaPeriava_BN_Drawing

மஹாபெரியவா   பாடல்.

என்றென்றும்   உன்   திருவுருவைக்  காண  வேண்டும்,

எப்பொழுதும்   உன்    திருநாமம்  கேட்க  வேண்டும் !

அனுதினமும்   உன்  திருப்பாதம்  பூஜிக்க  வேண்டும்,

அருள்வாய்  ஐயனே  என்  குருநாதனே !  …………………………………………………………………………………………………………………..1

இம்மைக்கு  உகந்ததோர்  வாழ்நெறி  பகன்றாய்,

செம்மையும்  அன்பும்  அறமும்  கொண்டதோர்  வாழ்நெறி !

அந்நெறி  தவறாமல்  நான்  நடக்க  வரம்  வேண்டும் 

அருள்வாய்  ஐயனே  என்  குருநாதனே ! ………………………………………………………………………………………………………………………2

உன்  நாமம்  ஸ்மரிப்பதன்றி  வேறென்ன  நினைவெனக்கு,

உன்  உருவம்  வரைவதன்றி  வேறென்ன   பணி  எனக்கு,

உன்  புகழ்  கேட்பதன்றி  வேறென்ன  உணவெனக்கு

உன்  சரணம்  பற்றினேன்  ஐயனே  என்  குருநாதனே !  ……………………………………………………………………..3

பார்  முழுதும்  திருப்பாதம்   பதித்தவரே   அருளாளா !

‘காரி’ல்லை,   வண்டியில்லை,  ஆகாய  விமானமில்லை !

ஆதி  சங்கர்தம்   அருள்வழியில்  சென்றவரே !

‘தெய்வத்தின்  குரலி’லே  வேதத்தைத்  தந்தீரே !  …………………………………………………………………………………………..4

ரமணர்  சேஷாத்ரி  உடனுறை  சங்கரா !

அன்புநெறி  காட்டிய  அத்வைத  குருவே !

எம்மை  ரக்ஷிக்க  பூவுலகம்  வந்த

பிரத்யக்ஷ  தெய்வமே !  தக்ஷிணாமூர்த்தியே !  ……………………………………………………………………………5

மீண்டும்  நீ  இங்குவரும்  போழ்தினிலே

அண்டி  உந்தன்  பணி   நானும்  செய்திடவே

வேண்டும்  வரம்  தந்திடுவாய்

தண்டம்  ஏந்திய  பகவானே ! …………………………………………………………………………………………………..6

நாராயணன்  பாலா.    6/11/2015.

Exit mobile version