Sage of Kanchi

பெரியவா சரணம் by சாணு புத்திரன்

When someone writes what you often experience, it touches your heart. Here is one for me! Thanks Suresh…periyava_hand

ஒரு சில நொடிகள்…
உற்றுப் பார்த்தேன்
உயர்வான குருதேவன்
உயர்த்தியருளும் கரம்தனை!

உள்ளூடே ஓர் உயிர்ப்பு
உந்தித் தள்ளியதுபோல்
உணர்ந்தேன்…

உலகெலாம் போற்றுகின்ற
உமை பதியோனே
உலகிதனில்
உற்றதோர் குருவடிவில்
உதித்தானென்பதை
உணர்வினிலே
உந்தித் தள்ளியதோ
கரம்தந்த காரூண்யம்..!

ஒரு பிடி உணவாலே
உலகோரை யெல்லாம்
உய்ய வகைசெய்த
உயர்ந்த மஹாமுனி!

பிடியரிசி பாடம் புகட்டி
பரத்திற்கு உரமேற்றிய
பரந்தாமன்!

யாசகமாய்
வேதம் தழைத்து
பேதமில்லா பெருவாழ்வை
அருளிய
பரப்ரஹ்ம ஸ்வரூபி!

கண்டோர் காணாதோர்
யாவர்க்கும் அருளும்
கலியுகப் பெருவள்ளல்!

எதுகையும் மோனையும்
என்னுள்ளாக
எதிர்ப்பின்றி புணரச்செய்து
எழுத்திந் மூலமாய்
எல்லோருக்குமாய்
ப்ரார்த்திக்க வகைசெய்யும்
ப்ரபஞ்ச ப்ரும்மா!

எல்லாவற்றிற்குமாய்
என்ன கைமாறு
இனியும் யான் செய்வேன்
எந்தன்
மஹா குருபரனே!

இருக்கும் வரையிலும்
நின் புகழைப்
போற்றி எழுதி ப்ரார்த்திக்கும்
பேரருள் மட்டுமாய்
என்றென்றும் தாயேன்
தீன தயாபரா!

ருத்ர ஸ்வரூபம் குரு அவதாரம்
சாந்த்த ஸ்வரூபம் சந்த்ரசேகரம்
பக்த ப்ரகாசம் ப்ரபு கடாக்‌ஷம்
பாதாரவிந்தம் பஜேஹம் பஜேஹம் ||

பெரியவா கடாக்‌ஷம்

Exit mobile version