Sage of Kanchi

A Lullaby to Maha Periyava!

Periyava_Visraanthi

Thanks to Shri Kahanam for sending this….Lullaby on Periyava is definitely a very different thinking…We all know Him as thatha ummachi only 🙂
Kanchiyil KaN Valarum Kannan! “Ayarpaadi Maaligaiyil” tunil Maha Periyava Song! Listen and Enjoy!

காஞ்சியிலே குழந்தை ஒன்று கண்ணயர்ந்து தூங்குவதை காணக் கோடி கண்கள் வேண்டும் தாலேலோ!

தென்னாட்டவர் உடன் இணைந்து எந்நாட்டவரும் போற்றும் கருணைக்கடல் தூங்குகிறான் தாலேலோ! (காஞ்சியிலே)

செந்தமிழில் சந்தம் வைத்து போற்றுகின்ற பரம்பொருளே
தென்றல் போல உறங்கிடுதே தாலேலோ! (காஞ்சியிலே)

சந்தனத்தின் சிறுகீற்றில் கண்மையை தோய்த்தெடுத்து பொட்டு வைக்க ஏக்கம் வந்தது தாலேலோ! (காஞ்சியிலே)

அன்னம் போல நடை நடந்து அவன் அருகில் அமர்ந்து கொண்டு
அழகன் அவன் அழகு காண தாலேலோ! (காஞ்சியிலே)

வீணை அதை மீட்டுகின்ற நாதனவன் விரல்களிலே சொடுக்கெடுக்க ஆசை வந்தது தாலேலோ! (காஞ்சியிலே)

பார்முழுதும் நடந்து வந்த பரந்தாமன் பாதம் அதை பிடித்துவிட தோன்றிடுதே தாலேலோ! (காஞ்சியிலே)

தூக்கம் என்பதே இன்றி அகிலம் காக்க ஓடியவன் தனை மறந்து தூங்குகின்றான் தாலேலோ! (காஞ்சியிலே)

இப்படியே தூங்கவிட்டால் இவ்வுலகம் இருண்டுவிடும் அன்பர்களே துயில் எழுப்ப வாரீரோ (காஞ்சியிலே)

பெரியவா சரணம்.
இந்த பாடலை எழுதியவர் திருமதி. சௌந்தர்யா சதீஷ்

பாடலை பாடியவர் :- திரு கணேஷ் கிருஷ்ணா
மிருதங்கம்:- திரு திருச்சேரி கௌஷிக்
வயலின்:- திரு திருச்சேரி கார்த்திக்

Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

 

Exit mobile version