Sage of Kanchi

அயோத்தி ராமர் கோயிலுக்கும், காஞ்சிபுரத்திற்கும் என்ன தொடர்பு?

Thanks to Aravind Kumar Mani for the FB share. Kept the original article but changed the images more appropriately!

அயோத்தி ராமர் கோயிலுக்கும், காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கோயிலின் குடமுழுக்கு விழாவானது, வரும் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள இந்துக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில்  காஞ்சி  காமகோடி பீடத்தின் 69-ஆவது சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள், தற்போதைய சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முக்கிய பங்கு வகித்துள்ளனர். ஜெயந்திரர், தமிழ்நாடு உட்பட நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ராமர் கோயில் கட்டுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

காஞ்சிபுரத்திற்கும் அயோத்திக்கும் பல வரலாற்று தொடர்புகளும் இருந்து உள்ளன. இது தொடர்பாக ஏ.பி.பி  செய்தி நிறுவனத்திற்கு காஞ்சிபுரம் சங்கரமடம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள பிரத்தேக தகவல்கள்.

பல யுகங்களாக சரித்திரத்தொடர்பு

“அயோத்யா, மதுரா, மாயா காசீ, காஞ்சி, அவந்திகா ! பூரி துவாரவதீச்சைவ ஸப்தைதே முக்திதாயகா ! ’ நினைத்தாலே முக்திதரும் தலங்களாக 7 திருத்தலங்கள் கூறப்பட்டுள்ளன. அவை அயோத்தி, மதுரா, மாயா, காசி, காஞ்சி, பூரி, துவாரகை ஆகிய ஏழு தலங்கள்தான். இந்த பாரத தேசத்தில் கூறப்பட்டுள்ள சப்த மோக்ஷபுரிகளில் முதலாவதான அயோத்யைக்கும்  தெற்கே உள்ள ஓரே மோக்ஷபுரியாம் காஞ்சிக்கும் பன்னெடுங்காலமாக பல யுகங்களாக சரித்திரத்தொடர்பு என்பது இருந்து வருகின்றது.

சரித்திரத் தொடர்பாக ரகுவம்ச சக்ரவர்த்தியான ஸ்ரீதசரதமஹாராஜாவிற்கு சந்தான ப்ராப்தம் ஏற்பட ப்ரார்தித்துவர, அவரது கனவில் அவர்களின் குலதெய்வமான அயோத்யாவில் இருக்கும் ஸ்ரீ தேவ்காளி அம்பாள் தோன்றி, காஞ்சிபுரத்தில் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் கோயிலில் அம்பாளை தரிசித்து புத்ரகாமேஷ்டியாகம் செய்யும்படியும், நிச்சயம் சத்சந்தான ப்ராப்தம் ஏற்படும் எனவும் ஆசீர்வதிக்க, அவ்வாறே காஞ்சியில் யாகத்தைச் செய்து, அதனால் ப்ரீதியடைந்த காமாக்ஷி தேவி அசரீரி வாக்காக என்னுடைய அம்சங்களுடன் கூடிய 4 மகன்கள் பிறப்பார்கள்” என அசீர்வத்தார்கள்.

அவ்வாறே அயோத்யாவில் கோசலை, கைகேயி மற்றும் சுமித்திரைக்கு, ராம, பரத, லக்ஷ்மண மற்றும் சத்ருக்ணன் ஜனித்தனர். மட்டுமில்லாமல் பஞ்சபூதங்களின் தொடர்பாக, சைவத்தில் எவ்வாறு காஞ்சிபுரம் ப்ரிதிவிசேஷத்ரமாகக் கருதப்படுகிறதோ, அதேபோல் சாக்தத்தில் (தேவி உபாசனையில் ) ஆயோத்யாவானது ப்ரிதிவிசேஷத்ரமாகக் கருதப்படுகின்றது.

சமரச பேச்சு வார்த்தை

“ராமோ விக்ரஹவான் தர்ம” என ராமசந்த்ரமூர்த்தியானவர் தர்மத்தின் ஸ்வரூபாக திகழ்பவர் என கூறப்படுகின்றது. தர்மத்தின் ஸ்வரூபாமானவருக்கு அவருடைய அவதார ஸ்தலமான அயோத்தியில் ஓர் கோயில் அமைய பல நூற்றாண்டுகளாக முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீகாஞ்சி ஆசார்யர்கள் மூவரின் பங்களிப்பும் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகளும் பல்வேறு சமரச பேச்சு வார்த்தைகைளை நடத்தி சமரசமாக தீர்வுகண்டு, ஸ்ரீராமபிரானுக்கு கோயில் எழுப்புவதையே தங்களது குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.

அவற்றின் ஓர் அங்கமாக 1986ம் வருடம் ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்ப்ரயாகராஜில் முகாமிட்டிடுந்தார். அப்பொழுது, அயோத்யாவில் ராமர் கோயில் நடை திறக்கப்படுகிறது என்று அறிந்து அங்கே நேரில் சென்று விசேஷ பூஜைகள் செய்தார்கள்.

அதுசமயம் விஷயமறிந்து, காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீமஹாஸ்வாமிகள்ஸ்ரீராமாசந்த்ரமூர்த்திக்கு வென்குடையும், இரண்டு சாமரமும் ஸ்ரீமடம் சிப்பந்திகள் இருவர் மூலமாக விமானத்தில் அனுப்பிவைத்தார். அவைகளை ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் அயோத்தியில் ஸ்ரீராமபிரானுக்கு அர்ப்பனித்தார். அதன் பிறகு 1989ம் வருடம் ஸ்ரீமடத்தில் ஸ்ரீராமர் கோயில் கட்டுவதற்காக ஸ்ரீராம் என்று பொறிக்கப்பட்ட செங்கற்களை ஸ்ரீகாஞ்சி ஆசார்யர்கள் அசீர்வதித்து விஷ்வ ஹிந்து பரிஷத்தினரிடம் அளித்தனர்.

ஸ்ரீராமர் கோயில்

அதன் தொடர்ச்சியாக அஷோக் சிங்கால், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜபேயீ, எல்.கே. அத்வானி,  ஜார்ஜ் பெர்னாண்டர்ஸ் என் பலர் ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் மீது அதீத நம்பிக்கை வைத்து அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், சமரச முயற்சிக்கான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் மேற்கொண்டார்கள்.

அனைவரும் கூடி அமர்ந்து பேசினால் மட்டுமே இதற்கு ஓர் சுமூஹமான தீர்வு காணமுடியும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்கள். இரு சாராருக்கும் ஹிதமாக்வும், அதே சமயத்தில் எந்தவொரு செய்ய வேண்டியதை உறுதியாகவும் எடுத்துரைத்தார்கள்.

பாரதம் முழுவது, எந்தவொரு அசாதாரனமான சூழல் ஏற்படாதிருக்கக் காரணம்  ஸ்ரீஆசர்யர்களின் அனுகுமுறையே என அனைத்து தரப்பினரும் தின்னமாக கூறினர். ஸ்ரீசரணர்கள் கூற்றுபடியே சுமூஹமாக அனைத்தும் ஒப்புக்கொள்ளப்பட்டு, அயோத்தியில் 2020ம் வருடம், ஆகஸ்டு மாதம் 5ம் தேதி, ஸ்ரீராமர் கோயில் கட்டுவதற்கு பூமிபூஜைக்கு நாள் குறிக்கப்பட்டது.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி

அது ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஜயந்தி தினமாக அமைந்தது, ஸ்ரீராமர் கோயில் அமைய அவர் எடுத்த முயற்சிகளுக்கு அங்கீகரித்தார்போல் இருந்தது. அவ்வமயம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்கள் பூமி பூஜைக்கு முக்கியமானதான சங்குஸ்தாபனம் செய்வதற்கு கருங்காலி மரத்தில் நவரத்தினங்கள் பதித்த சங்குவையும் (அடிப்பாகம் சதுரமாகவும், மத்தியில் அறுகோணமாகவும், மேலே தாமரை மொட்டு போல கூர்மையாக முடிவது போல் செய்து), காஞ்சியிலிருந்து 2 செங்கல்களும், ஐந்து தங்கக்காசும் (ஜயா, பத்ரா, நந்தா, ரிக்தா & பூர்ணா), பூமி பூஜை மற்றும் சகலருக்கும் நன்மை கொருகின்ற விவரங்கள் அடங்கிய தாமரைப் பட்டயமும் அவர் அனுப்பி வைத்திருந்தார்.

அதனை சண்டியாகத்தில் வைத்து பூஜித்து, பிறகு அந்த சங்குவை, காஞ்சியில் உள்ள ஸ்ரீசங்குபாணி விநாயகர் கோயிலில் வைத்து பூஜித்து (ஸ்ரீஆதிசங்கரர் காஞ்சி நகரை புணர்நிர்மானம் செய்வதற்கு முன்னர் இந்த சங்குபாணி விநாயகரை ப்ரதிஷ்டை செய்தார் எனக் கூறப்படுகின்றது), பிறகு ஸ்ரீமஹாஸ்வாமிகள், ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் இருவரின் ப்ருந்தாவனத்தில் வைத்து பிறகு அவை அனைத்தையும் அயோத்திக்கு அனுப்பிவைத்தார். ராமஜன்மபூமி அறக்கட்டளையினர் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் கிறிப்பறிந்து அனுப்பிவைத்த வைதிக பொருட்களை பெற்றுக்கொண்டு அவர்களின் அனுக்ரஹத்தை நினைத்து பெருமிதப்பட்டனர்.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி

ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் அயோத்தி ராமர் கோயில் அமைப்பதில் பல ஆ ஆலோசனைகள் அளித்து முக்கியப்பங்கு வகித்துள்ளார். ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் கூறியபடியே பிராண பிரதிஷ்டைக்கு நாள் குறிக்கவும் யாகசாலை ஆகிய வைதிக கார்யக்ரமங்களுக்கு காசியைச்சேர்ந்த ஸ்ரீகணேஷ்வர சாஸ்திரி திராவிட் என்பவர் நியமிக்கப்பட்டார். ஸ்ரீஆசார்யாள் கூறியதன் பேரில் காசி ஸ்ரீலஷ்மிகாந்த் மதுரநாத் தீட்சித் (86) தலைமை வகிக்கிறார். இவ்வாறு காமகோடி த்ரிவேணியாக மூன்று ஆசார்யர்களும் ஸ்ரீராமபிரானுக்கு கோயில் அமைக்கவும், அமைக்கப்படவிருக்கும் கோயிலுக்கு சாஸ்த்ர ரீதியாக அனைத்தையும் ஏற்பாடு செய்துகொடுப்பதிலும் தங்களுடைய சேவையாக செய்தனர்.

அந்த சாக்ஷாத் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அவதாரமாக, சப்த மோக்ஷபுரிகளில் ஒன்றான அயோத்யாவில் அவதரித்தரான, ஸ்ரீராமசந்த்ரமூர்த்திக்கு வரும் ஜனவரி, 22ம் தேதி திங்கட்கிழமையன்று, ப்ராண ப்ரதிஷ்டை நடைபெறவுள்ளது. ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள், 2020 அயோத்தியில் பூமி பூஜையையொட்டி, ஸ்ரீராமசந்த்ரமூர்த்திக்கான கோயில் கட்டுமானப்பணி எந்தவொரு விக்னமுமில்லாமல் நடைபெற பக்தர்கள் அனைவருக்கும் “ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்” எனும் த்ரயோதசாக்ஷரி ராம மந்தரத்தை பாராயணம் செய்ய சொல்லி ஆக்ஞாபித்ததை சிரமேற்கொண்டு கும்பாபிஷேகத்தன்று அனைவரும் பாராயணம் செய்து அனவருக்கும் ஸ்ரீராம ப்ரஸாதம் கிடைக்கப் ப்ரார்திப்போம் என்ற வரலாற்று முக்கிய  வாய்ந்த தகவலை நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

Exit mobile version