இன்று ஸாமர்லகோடா ஸ்ரீமடம் முகாமில் பூஜ்யஸ்ரீ ஆசார்யாள் அவர்களை ஸ்ரீஎடநீர் மடம் ஸ்வாமிகள் தரிசனம் செய்து கொண்டார்கள். ஸ்ரீதோடகாசார்ய பரம்பரையைச் சார்ந்த ஸ்ரீஎடநீர் மடம் தொடக்கத்தில் திருச்சூரில் இருந்த ஐந்து அத்வைத மடங்களில் ஒன்றாகும்.
பிற்காலத்தில் ஏற்பட்ட சூழ்நிலைகளால் இவ்வறநிலையம் வடகேரளத்திற்குப் பெயர்ந்தது. ஸ்ரீஎடநீர் மடத்தின் அதிபராக இருந்த ஸ்ரீகேசவானந்த பாரதி ஸ்வாமிகள் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதிகளிடம் பெருமதிப்பு கொண்டிருந்தவர்.
மரபுவழக்கப்படியும், ஏற்கனவே தீர்மானித்திருந்தபடியும் ஸ்ரீகேசவானந்த பாரதி ஸ்வாமிகளின் வாரிசாக நியமிக்கப்பட இருந்தவர் பூஜ்யஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கரவிஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகள் அவர்களின் அருள் முன்னிலையில் ஸன்யாஸ ஆச்ரம ஸ்வீகாரம் அடைந்து ஸ்ரீஎடநீர் மடத்தின் அதிபதியாக அமர்ந்து அருளாட்சி செய்துவருகிறார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
Never heard about this matam – we learn something new everyday!
Thanks to Sri Ganapathisubramanian for FB Share…
