Sage of Kanchi

குரு பூர்ணிமா 2020


நாளை குரு பெளர்ணமி. வியாஸ பௌர்ணமி. இந்த நாளில் ஸந்யாசிகள், வேதத்தை தொகுத்து, தர்ம சாஸ்திரங்களையும் புராணங்களையும் அளித்த வியாஸ முனிவரையும், ரிஷி மண்டலத்தையும், குரு மண்டலத்தையும் தியானித்து, விஸ்தாரமாக பூஜை செய்வார்கள். ஒவ்வொருவரும் அப்படி வியாஸ பூஜை செய்யும் தம்முடைய சம்பிரதாயத்தை சேர்ந்த குரு பீடங்களை அலங்கரிக்கும் மகான்களை தரிசித்து, ஆசி பெறுவார்கள்.

மேலும் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், நாராயணீயம், திருப்புகழ் போன்ற ஸ்தோத்திர கிரந்தங்களை அருளிச்செய்த, சாசுவதமான புண்ணிய கீர்த்தியோடு விளங்கும் மகான்களையும், சங்கீதம், பரதம் போன்ற சாஸ்திரங்களை உபாஸித்து, மனத்தை உயர்த்தக்கூடிய கிருதிகளை இயற்றிய சங்கீத மும்மூர்த்திகள், கல்விமான்கள், கலைவாணிகள், அதோடு இவற்றையெல்லாம் ரக்ஷித்து நமக்கு அளித்த மஹாபெரியவாளையும், பெரியவா மூலமாக அகத்தூண்டுதல் பெற்று இவற்றை நமக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களையும், இந்த நாளில் நன்றியோடு வணங்குவோம்.

மஹாபெரியவாளின் குரல் முதன்முதலில் 1993ல் வெளியிடப்பட்டபோது “சிவசிவ பஶ்யந்தி ஸமம்” என்ற மூகபஞ்சசதீ சுலோகத்துக்கு பெரியவா பொருள் கூறின அந்த உபன்யாசம் தான் வெளிவந்தது. ஜகத்குருவின் அந்த அமிர்த வாக்கைக் கேட்டு பலர் அவருக்கு மாணவர்கள் ஆனார்கள். பெரியவாளை நேரில் தரிசிக்கத் முடியாதவர்கள் கூட, இந்த வாக்கை கேட்டவுடன், இது தெய்வ வாக்கு, காமாக்ஷியின் குரல் என்று உணர்ந்து கொள்வார்கள். பலமுறை கேட்டு இருந்தாலும் இன்னொரு முறை கேட்போம். இந்த ஒலிப்பதிவில், “காமாக்ஷியின் கடாக்ஷத்தை பெற்ற மகாபுருஷர்கள் எப்படி இருப்பார்கள்? அதற்கு அடையாளம் என்ன?” என்று பெரியவா விளக்குகிறார். அந்த ஒலிப்பதிவையும், அந்த அடையாளங்களோடு விளங்கிய மகாபுருஷர் மஹாபெரியவாளே தான் என்று மூன்று நிகழ்ச்சிகள் மூலம் விளக்கும் என் உரையையும் இந்த இணைப்பில் கேட்கலாம்.–> சிவசிவ பஶ்யந்தி ஸமம் ஸ்ரீ காமாக்ஷீ கடாக்ஷிதா: புருஷா:

Exit mobile version