Fantastic drawing by Sudhan and a beautiful poem by Sri Anand Vasudevan.
Periyava Sharanam
உ
ராகம் – நவரச கானடா
பல்லவி
யாம் ஒரு விளையாடும் பறவையா
ஜகத்குருவே சிவமே உந்தனுக்கு
அனுபல்லவி
சிறகுகள் இன்றி கூட்டினுள்
உழன்றது போதாதா உந்தனுக்கு
( யாம் ஒரு விளையாடும் )
சரணம்
அடைபட்ட பறவைகள் பெரியவா பெரியவா
என்று அலறுவதைக் கேட்பதானந்தமா
ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தோமே
திருவுள்ளம் இறங்காதா பெரியவா உந்தனுக்கு
எண்ணம் / எழுத்து – ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்து பாடியவர் – ஸ்ரீமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
