
வெள்ளைக்கார அரசாங்கம் வருகிறதற்கு முந்தி ஊருக்கு ஊர், கிராமத்துக்கு கிராமம் பசுக்களுக்கென்றே பிரத்யேகமாக மேய்ச்சல் பூமி சாஸனமாக விடப்பட்டிருக்கிறது. கோக்ஷேமத்துக்குள்ள முக்யத்வம் தெரியாத வெள்ளைக்கார அரசாங்கம் அந்த பூமிகளையும் தர்க்காஸ்தாகக் கொடுத்து விட்டது. பசுவின் வயிற்றில் அதிலிருந்து அடி விழ ஆரம்பித்தது. அதே மாதிரி, மந்தைக் கரைக்குளம் என்று பசுக்களுக்காகவே முன்காலத்தில் இருந்த குளங்களும் இப்போது எடுபட்டுவிட்டன. Minor irrigation works – சிறிய நீர்ப்பாசனத் திட்டம் -– என்று அரசாங்கத்தில் போடுவதில் இந்த மந்தைக் கரைக் குளத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அநேக க்ராமங்களாக இருந்தவை உருமாறித்தான் இன்றைய சென்னை மாநகராகியிருக்கிறது. இப்போது மந்தைவெளி என்று இருக்கிற பேட்டை ஆதியில் மேய்ச்சல் பூமியாகவே இருந்திருக்கிறது. அமிஞ்சிக்கரையை அமைந்த கரை என்கிறார்களே, அது மந்தைக்கரை குளமாகத்தான் இருந்திருக்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Though there is no use speaking about it, I’m unable to refrain from saying it too. Prior to British rule in India, in each town and each village, grazing fields meant specifically for cows, were given as grant. The British government which was unaware of the importance of cow protection had given away these lands as unproductive. From then on feeding the cows met with a blow. Similary ponds which were created solely for the drinking purposes of cows called ‘Mandhaikkarai Kulam’ have gone out of existence too. Among the projects of the present government under ‘Minor irrigation works’, this ‘Mandhaikkarai Kulam’ should also be included.
Many villages of olden days have transformed to give birth to the present day city called Chennai. The area called ‘Mandhaiveli’ today had been a grazing field for cattle once upon a time. Another area called ‘Amaindhakarai’, colloquially called as ‘Aminjikkarai’, must also have been a ‘Mandhaikkarai Kulam’ for the cows. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal