
அபரிக்ரஹத்துக்கு எங்கேயோ போகவேண்டியதில்லை. நாலைந்து தலைமுறைக்கு முன்னால் எப்படியிருந்தார்கள் என்று பார்த்தால் போதும். மண்பானை, கல்சட்டி, ஓலை, பாக்குப்பட்டை இதுகள்தான் அவர்களுடைய சொத்து. கருகமணிதான் நகை. நாலு கீற்றை வேய்ந்து கொண்டால் அந்தப் பர்ணசாலைதான் அரண்மனைக்கு மேலே. அரண்மனைக்காரனான திலீபன் முதலான சக்ரவர்த்திகள் இப்படிப் பர்ணசாலைகளில் வசித்து வந்த வஸிஷ்டர் முதலானவர்களின் காலில்தான் வந்து விழுந்தார்கள். நம் ஸமீபகால முன்னோர்கள்கூட இப்படி எளிமையாயிருந்து கொண்டே நிம்மதியாகக் காலக்ஷேபம் நடத்தியிருக்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
For seeing the effects of ‘Aparigraha’ you need not go anywhere. Just see how our forefathers lived about three/four generations ago. They just used simple earthen pots, vessels made of stone, palm leaf, etc., which were their possessions. They used simple black stones as ornaments. Palm-Leaf (Parna-Shaala) was the roof on the top of their mud huts. That was greater than palaces. Even emperors like Dileepa Chakravarthy (of Ikshvaku Dynasty) unhesitatingly fell at the feet of sages like Vasishta who lived in palm-leaf huts (Parna-Shaala). Even till recent times, our forefathers had lived such a simple peaceful life. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal