Sage of Kanchi

Periyava Golden Quotes-909

இதுவரை தக்ஷிணத்தில் நம்மைவிடக் கடும் குலாசாரமுள்ளவர்களின் கையில், அல்லது பெர்ஸனலாக நம்மைவிட சுத்தமானவர்களின் கையிலிருந்து வாங்கிச் சாப்பிடலாம் என்று இருந்து வந்திருக்கிறது. வடக்கேயோ இதுவும் கூடாது. கிஸான் [குடியானவன்] ஆனாலும் பணடிட் ஆனாலும் அவனவனே சமைத்துக் கொள்ள வேண்டுமென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலேயும் ஒரு நல்ல அம்சம் இருக்கிறது. நம்மைவிட சுத்தர்கள் கையில் சாப்பிடலாம் என்பதனாலேயே நாம் அவ்வளவு சுத்தியாவதற்கு பிரயத்தனப்படாமலே இருந்து கொண்டிருக்கலாம் என்பதற்கும் இடம் கொடுத்துப் போகிறது. ஸ்வயம்பாகம் என்று வைத்து, நம்முடைய அசுத்தி நாமே பண்ணிக் கொள்கிற சாப்பாட்டினால் நமக்குள் மேலே மேலே போய்க் கொண்டேயிருக்கிறபோது தான், இப்படி நம்மைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்து நம்மை சுத்தப்படுத்திக் கொள்வதற்குப் பிரயத்னம் செய்வோம். “சாப்பாடு பண்ணிப் போடுகிறவனின் சுத்தம் சாப்பிடுகிறவனுக்குள் போகிறது; நாம் சுத்தனாக வேண்டும்; அதே ஸமயத்திலே நம் சாப்பாட்டை நாமே பண்ணிக் கொள்ள வேண்டும்” என்றால் அப்போது நாம் சுத்தமாக ஆவதற்கு முயற்சி பண்ணத்தானே செய்வோம்? ஸ்வாமி பிரஸாதம், குருப் பிரஸாதம் தவிர ஸ்வயம்பாகம்தான் என்று ஆக்கிக் கொண்டுவிட வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Until now, in the south, it is a socially accepted fact that one can eat at a very orthodox household or at a household known for its hygiene. But in the north, even that is not acceptable. Whether a peasant or a Pandit, one has to cook his own food. There is one plus point in this system too. If it is accepted that we can eat at the house of those who are more hygienic than us, we may never try to raise ourselves to that level of hygiene. The concept of swayampakam will make us aware that we need to maintain good hygiene at least to elevate ourselves. ‘The purity of the cook gets ingrained in the person who eats the food.  I have to maintain the required cleanliness to prepare my food’ – If this thought comes to us, we will surely make efforts to remain pure. Every one should make a resolution whereby one will not eat anything prepared by others except for temple prasadam and Guru prasadam. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Exit mobile version