
நமக்குப் புரிகிற ஸயன்ஸ், நமக்குப் பிடிக்கிற ‘எதிக்ஸ்’ [நன்னெறிக் கோட்பாடு] இவற்றுக்கு அநுஸரணையாயிருக்கிற ஆசாரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை ‘ஸுபர்ஸ்டிஷன்’ (மூட நம்பிக்கை) என்று தள்ளுவது தப்பு. நமக்குப் புரிகிறதும் பிடிக்கிறதும் நேருக்கு நேர் பலன் தருகிறவை. பல் தேய்க்காவிட்டால் துர்கந்தமாயிருக்கிறது. பல்லில் வியாதி வருகிறது என்று பிரத்யக்ஷமாகத் தெரிகிறது. மது பானம் பண்ணினால் புத்தி கெட்டுப் போகிறது, குடி மோஹத்தில் குடும்ப வாழ்க்கையிலே அநேக அனர்த்தங்கள் ஏற்படுகின்றன என்றெல்லாம் நமக்குப் பிரத்யக்ஷமாகத் தெரிகிறது. அதனால் பல் தேய்க்கணும், மதுபானம் பண்ணக்கூடாது என்றெல்லாம் சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் ஆசாரங்களை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் எல்லா ஆசாரமே இப்படிக் நம் ப்ராக்டிகல் லைஃபில் [நடைமுறை வாழ்க்கையில்] ப்ரூவ் ஆவதாக இருந்தால்தான் ஒப்புக் கொள்வோம் என்றால் அது தப்பு. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
It is wrong to accept only those aspects of Aacharam which seem to agree with the science we understand and the ethics we prefer and discard the rest as superstition. What we understand and like are those that give direct results. It is obvious that there is a bad smell if we do not brush our teeth. If one consumes alcohol, the mind is corrupted and the family life is subject to all sorts of misfortunes. So we accept those practices of Aacharam like brushing our teeth and desisting from alcohol which are prescribed by our scriptures. But if we insist on accepting all matters of Aacharam only after they have been practically proved, then we are indeed wrong. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal