
Thanks Ganapathy for the share. It is a bit late for me to post here as the Jayanthi got over few days back. Regardless, Swamigal’s upadesam has no time constraints.
இன்னிக்கு மாசி மாதம் பூரட்டாதி நக்ஷத்திரம். (28/2/2017) கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய ஜென்ம நக்ஷத்திரம். இன்னிக்கு இருந்தார்னா அவருக்கு எண்பத்தேழாவது ஜெயந்தியா கொண்டாடியிருப்போம். அவர் ஸ்தூல சரீரத்தோட இல்லேனாலும், சூக்ஷ்மமா அவர் இருந்துண்டு பக்தர்களுக்கு, அனுக்ரஹம் பண்ணிண்டு இருக்கார். நம்ம எல்லாரும் அதை உணர்ந்து அனுபவிச்சுண்டு இருக்கோம்.
ஒவ்வொரு க்ஷேத்ரத்துல பகவானை, ஒவ்வொரு விதமா பஜனம் பண்றது, வழிபாடு பண்றது, அப்டீன்னு இருக்கு. திருப்பதில, உண்டியல்ல பணம் போடறோம். இதரா எல்லாம் முடி இறக்கரா. குருவாயூர்ல, ஸ்ரீமத் பாகவதத்தை, சப்தாஹமா, படிச்சு சமர்பிக்கறதுங்கிறது, அங்க ரொம்ப விசேஷமான பஜனம். அங்க துலாபாரம் பண்றா. அந்த மாதிரி, திருப்பறையார்ங்கிற அந்த ஒரு ராமர் க்ஷேத்ரத்துல, வெடி வெடிக்கறது, வெடி போடறதுங்கிறது ஒரு வழிபாடு. ஒரு வேண்டுதல். இப்படி ஒவ்வொரு தெய்வத்துக்கு ஒவ்வொரு பூஜை ப்ரியமா இருக்கு. அப்படி கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுக்கு, இன்னிக்கு அவரோட ஜெயந்தி வைபவத்துல, அவருக்குப் பிரியமானதை பண்ணனும்னு, அப்டீன்னு, நினைச்சு, அது என்னன்னு கேட்டா, எங்க எல்லாருக்கும், தெரிஞ்சு, அவருக்கு ரொம்ப பிரியமான விஷயம், இடையறாது பகவானுடைய பஜனத்தைப் பண்ணிண்டே இருக்கணும். […click here to read more…]