
தினமும் தூங்கப் போகும் முன்பு இன்று ஜன ஸமுதாயத்துக்கு நாம் ஏதாவது கைங்கர்யம் பண்ணினோமா என்று கேட்டுக் கொள்ள வேண்டும். ஈஸ்வரனைப் பற்றிப் “பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்று தேவாரத்தில் சொல்லியிருக்கிறது. அந்த மாதிரி நாம் பரோபகாரம் பண்ணாமலே ஒருநாள் போயிற்று என்றால், அது நாம் பிறவா நாளே — அன்றைக்கு நாம் செத்துப் போனதற்கு ஸமம்தான் — என்று வருத்தப்பட வேண்டும். பந்துக்கள் செத்துப்போனால் நமக்கு தீட்டு என்று, ஒரு புண்ய கார்யத்துக்கும் உதவாமல் ஒதுக்கி விடுகிறார்கள். நாமே செத்த மாதிரி என்றால் இதுதான் பெரிய தீட்டு; பரோபகாரம் செய்யாத ஒரு தினத்தில் புண்யத்தின் பக்கத்திலேயே நாம் போகவில்லை, தீட்டுக்காரர்களாகி விட்டோம் என்று “Feel” பண்ண வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Before going to bed we should indulge in some self introspection and find out whether we have performed some service to the society that day. The holy verse of Devaram states that the day that goes without singing the praise of Bhagawan is a wasted day – a day on which we have not really lived at all. Similarly the day we have spent without performing any service to the society is a day on which we are symbolically dead and we should feel for it. If our relatives die, we are not allowed to involve ourselves in any holy or celebratory functions (Theetu). So when we ourselves seem to have died (not having performed any social service) we are like people who have been temporarily ex-communicated. We should feel for our lapse in not performing any social service that day. –Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal