Sage of Kanchi

Periyava Quotes-310

album1_12

இலவசமாக வேத சாஸ்த்ரம் கற்றுக் கொடுக்கிறோம் என்று ஆரம்பித்தால்கூட அதற்கு ரெஸ்பான்ஸ் (வரவேற்பு) இல்லை. வேத சாஸ்த்ரம் மட்டுமில்லை திருக்குறள், தேவார-திவ்ய ப்ரபந்தம், அல்லது நம் தேசத்தில் நீண்டகாலமாக இருந்து இப்போது நசித்துவரும் ஸித்தர் சாஸ்த்ரம் முதலானவற்றில்கூட இலவச வகுப்பு நடத்தச் சில பெரியோர்கள் எடுத்த நல்ல முயற்சிகள் பலன் தரவில்லை. இந்தப் படிப்பிலே போனால், உத்யோகத்துக்கு உதவி செய்கிற ஸ்கூல் படிப்புக்கு பாதகமாகிறது என்று ஜனங்கள் இவற்றை ஆதரிக்காமலே விட்டுவிடுகிறார்கள். அதனால் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஸ்கூல் பாடத்தை விடாமல், அதோடேயே வேதாப்யாஸத்துக்கு உரியவர்களுக்கு வேதத்தையும், மற்றவர்களுக்கு இதர புராதன சாஸ்த்ரங்கள், கலைகள் இவற்றையும் சேர்த்துக் கற்றுக் கொடுப்பதற்காக ப்ரைவேட் ஸ்கூல்கள் ஆரம்பிக்கலாம். தினமும் அரை மணி, ஒரு மணி ஸ்கூல் டயத்தை நீட்டி, லீவ் நாட்களையும் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் இந்த மாதிரி ரெகுலர் ஸிலபஸோடு கூடவே சாஸ்த்ரங்கள், தேசியக் கலைகள் இவற்றையும் சொல்லிக் கொடுக்க முடியும். இப்படிப் பசங்களைத் தயார் பண்ணிக் கால விரயமில்லாமலே ‘மெட்ரிக்’ பரீக்ஷைக்கு அனுப்புவதாக ஏற்பாடு செய்தால் அநேகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இப்படிப்பட்ட ஸ்கூல்களில் சேர்க்க முன் வருவார்கள். பென்ஷனர்கள் மாத்திரந்தான் இதைச் செய்ய வேண்டுமென்பதில்லை. எல்லாரும் சேர்ந்து செய்யலாம். நம்முடைய தொன்று தொட்ட மஹத்தான நாகரிகத்துக்கு வாரிசாக வருங்காலப் பிரஜைகளை உருவாக்குகிற பேருபகாரம் இது. இந்த நாகரிகத்துக்கு அடிவேரில் ஜலம் விடுகிற மாதிரியான தர்மம் எதுவென்றால் வேதம் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கும், கற்றுக்கொடுக்க முன் வருகிறவர்களுக்கும் கஷ்டமில்லாமல் ஜீவனம் நடத்துவதற்கான ஸெளகர்யங்களைப் பண்ணித் தருவதாகும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

There is no response even if the Vedic Education is provided free of cost. Many persons have attempted to teach Thirukkural, Divya Prabandham, and the hoary Sidhdhar Shaastram through free classes but there have not been many takers. The public do not support these classes feeling that they cause a hindrance to the formal school education which may help them to secure jobs. My suggestion is that private schools can be established to teach Vedic education to those who need it and other ancient arts and shaastraas. If the school timings are extended by half an hour or one hour daily and the number of holidays are reduced, our national arts and shaastraas can be taught with the regular syllabus. If thus children are able to appear for the Matriculation examination without any waste of time, the parents also will not have any objection in sending their children to such schools. It is not necessary that only pensioners should perform this task. This is a noble deed which will help in shaping a generation of children who will be the true inheritors of our great culture. The foundation for this service lies in providing all facilities to those seek to learn the Vedas and those who come forward to teach them. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Exit mobile version