உபநயன ஸம்ஸ்காரம் என்பதைச் செய்வதற்கே உத்தராயணம்தான் உரிய காலம் என்றும் சொல்லியிருக்கிறது – அதாவது தையிலிருந்து ஆனி முடிய ஸூரியன் பூமியின் வடக்குப் பாதியில் ஸஞ்சரிக்கிற ஆறுமாஸத்திலேயே உபநயனம் செய்யவேண்டும். உபநயனம் மட்டுமின்றி விவாஹமும் இந்த ஆறுமாஸத்தில்தான் செய்யலாம். இதிலும் வஸந்த காலம் (சித்திரை, வைகாசி) தான் விவாஹத்துக்கு ரொம்பவும் எடுத்தது. அதே மாதிரி ‘மாசிப் பூணூல் பாசி படரும்’ என்பதாக மாசி மாஸத்தில் பூணூல் போடுவதை விசேஷமானதாகச் சொல்லியிருக்கிறது. தக்ஷிணாயனத்தில் (ஆடியிலிருந்து மார்கழி முடிய) இவற்றைச் செய்வது சாஸ்திர ஸம்மதமல்ல. இப்போது இவற்றுக்கு எவ்வளவு காலம் கடத்தலாமோ அவ்வளவு ‘டிலே’ செய்துவிட்டு கடைசியிலே மார்கழி மாஸம் ஒன்று தவிர வேறு எப்போது வேண்டுமானாலும் பண்ணலாம் என்று பண்ணுகிறார்கள்! பலனும் அதற்கேற்ற மாதிரிதான் இருக்கிறது! கல்யாணம் என்று ஏதோ ஒன்று பண்ணியிருக்கிறார்களே என்று திருப்திப்பட்டு அதை வேண்டுமானாலும் தக்ஷிணாயனத்தில் அநுமதித்தாலும் அநுமதிக்கலாம். (கூடாதுதான். ஆனாலும் தொலைகிறது என்று விடலாம்.) உபநயனத்தை ஒருகாலும் தக்ஷிணாயனத்தில் அநுமதிப்பதற்கில்லை. ஏற்கெனவே தக்ஷிணாயனத்தில் உபநயனம் பண்ணியிருந்தால்கூட மறுபடி உத்தராயணத்தில் ஒரு தரும் பண்ணுங்கள் என்றுதான் சொல்வேன். கல்யாணம், பூணூல் இரண்டையுமே பணம் சம்பந்தப்பட்ட காரியங்களாக்கி விட்டு இரண்டு செலவும் ஒன்றாகப் போகட்டுமே என்பதால் தங்கள் பெண்களின் கல்யாணத்துக்காகப் பிள்ளையின் பூணூலை தள்ளிப் போடுகிற வழக்கம் அதிகமிருப்பதால் இதைச் சொல்ல நேர்ந்தது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Nowadays, for various reasons, the upanayana and marriage ceremonies are delayed for as long as possible and conducted in any month other than Margazhi. The results are there for you to see. But one must be happy perhaps that a function called marriage is still performed somehow. If we take this attitude, marriages may be permitted in any season as a desperate step though not accepted by Sastras. But upanayana is a different matter. It should never be permitted in Dakshinayana. If it is for some reason conducted during this period, I would ask for its performance again in Uttarayana. Money is perceived as the main reason in conducting an upanayana or a marriage. Parents postpone the upanayana because they want to perform it at the same time as the marriage of their daughter so as to minimise the expenses. – Pujya Sri Kanchi Maha Periyava
English Translation Source – Hindu Dharma
