
உபநயனத்தோடு காயத்ரீ தீர்ந்தது, மறுநாளிலிருந்தே கிரிக்கெட்டும், ஸினிமாவும், கட்சி மீட்டிங்குந்தான் என்று ஆகிவிடாமல் உபநயனப்பிள்ளை தொடர்ந்து ஸந்தியாவந்தனம் செய்யும்படியாக மாதாபிதாக்கள் கண்டிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களே கிளப், ஸினிமா, மீட்டிங், ரேஸ் என்று போகிறபோது நான் சொல்வது என்ன பலன் தரும் என்று எனக்கே தெரியவில்லை. தாங்கள்தான் வீணாகப் போயாயிற்று, குழந்தைகளாவது உருப்படட்டும் என்றுதான் இதைச் செய்யவேண்டும். ஆனால், “எனக்குச் சொல்ல வருகிறாயே! நீ என்ன பண்ணுகிறாய்?” என்று பிள்ளையே மாதாபிதாக்களிடம் திருப்பிக் கொண்டு விட்டாலும் கஷ்டந்தான்! – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
It is the duty of parents to make sure that, after they are invested with the sacred thread their sons chant the Gayathri every day without fail. Some boys discontinue chanting this mantra the very first day after the upanayana ceremony. Parents must see to it that they don’t. They must also make sure that the children perform the Sandhyavandana without being distracted by cricket matches, cinema, party, meetings, etc. I am not sure how far my urging is going to help, considering nowadays that parents are themselves more interested in clubs, films, meetings and the races than in matters concerning the Self. If there is any realisation on their part that their own lives have been lived in vain, they may perhaps want their children to do better. But will the boys listen to them? In all likelihood they will turn back to tell their parents: “why do you ask us to perform Sandhyavandana and recite the Gayathri? What about you?” – Pujya Sri Kanchi Maha Periyava.