Site icon Sage of Kanchi

Periyava Golden Quotes-99

வேதத்தை ஸ்வீகரிப்பதற்கு ஒருத்தனை அர்ஹனாக்கி [அருகதை உள்ளவனாக்கி அதன் மூலம் லோகம் முழுவதற்கும் நல்ல திவ்ய சக்திகளைப் பரப்புகிற பரம ச்ரேஷ்டமான கர்மாவான உபநயனத்தின் பெருமையை அறிந்து அதை உரிய காலத்தில் பண்ண வேண்டும். த்வி-ஜன்-இருபிறப்பாளன்-எனப்படும் பிராம்மண, க்ஷத்ரிய, வைச்யர்கள் லோகோபகாரமான இரண்டாவது பிறப்பை அடைவது அவர்கள் எப்போது வேதத்தைக் கற்கத் தகுதி பெறுகிறார்களோ அப்போதுதான். இந்தத் தகுதியை அவர்கள் பெறுவது உபநயன ஸம்ஸ்காரத்தில்தான். இதைக் காலத்தில் செய்ய வேண்டியது பெற்றோர் கடமை. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

The importance of the upanayana ceremony lies in this: it makes a person fit to receive instruction in the Vedas and spread their divine power throughout the world. Parents must realise this fact and perform their son’s upanayana at the right time. “Dvi-ja” (“iru-pirappalan” in Tamil) is the name given to a Brahmin, Kshatriya, or Vaisya. They merit the second birth only when they become qualified to learn the Vedas. Such a birth is meant, as mentioned earlier, to spread the divine power all over the world, and it is through the upanayana ceremony that they become qualified for it. Performing this ceremony at the right time is the responsibility of the parents. – Pujya Sri Kanchi Maha Periyava.

Exit mobile version