Thanks Sri Varagooran Narayanan Mama for this …
காவடி சிந்து.
பாடியவர்கள்;டாக்டர் கணேஷ்,ப்ருகா பாலு
கணேச சர்மா-மற்றும் பலர்.
இயற்றியவர்;கணேச சர்மா
தட்டச்சு;வரகூரான்.
1) ஆதிசங்கரர் அமர்ந்த குருபீடம்-இது
காஞ்சியம்பதியில் ஒளிர் குருபீடம்-அதில்
ஆதிசிவன் தான் விரும்பி அருள்பீடம்-இது
அகிலம் புகழும் ஜகத்குருபீடம்
குருநாதா குருநாதா சந்த்ரசேகரேந்த்ர ஜகத் குருநாதா.
2)ஆதவனும் சந்திரனும் உள்ளநாளும்-இது
அண்டமனைத்தவர் தொழும் குருபீடம்-அதில்
மாதவத்தவர் ஒளிரும் உயர்பீடம்-இது
கண்டவர் மனம் கவரும் குருபீடம்.
குருநாதா குருநாதா சந்த்ரசேகரேந்த்ர ஜகத் குருநாதா
.
3) வேதமனைத்தின் பிறந்த அகமாக-இது
ஆதரவு தந்தருளும் குருபீடம்-அதில்
ஓதஉயர் ஞானியர் வாழ் ஒரு பீடம்-இது
பேதபுத்தி தான் அகல அருள் பீடம்.
குருநாதா குருநாதா சந்த்ரசேகரேந்த்ர ஜகத் குருநாதா.
4)பல்கலைகள் தான் வளர்க்கும் இடமாக-இது
பார்புகழ்தான் நடக்கும் குருபீடம்-அதில்
நல்லபல துறவியர்கள் வாழ்பீடம்-இது
நல்லவர்கள் தான் வணங்கும் குருபீடம்.
குருநாதா குருநாதா சந்த்ரசேகரேந்த்ர ஜகத் குருநாதா.
5)பொய் அனைத்தும் தான் அகல ஒளியாக-இது
பூதலத்தில் தான் விளங்கும் குருபீடம்-அதில்
மெய்தவத்து வேந்தர் பலர் ஆண்டபீடம்-இது
ஆதிமுதல் தான் திகழும் குருபீடம்.
குருநாதா குருநாதா சந்த்ரசேகரேந்த்ர ஜகத் குருநாதா.
6) பீடமனைத்தின் தலைமை பீடமாக-இது
ஆன்ம ஒளிதான் பரப்பும் குருபீடம்-அதில்
பாடிபணிய உகந்த குருமனிகள் வாழ்
மேன்மைமிகு காமகோடி குருபீடம்.
குருநாதா குருநாதா சந்த்ரசேகரேந்த்ர ஜகத் குருநாதா
