காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந் திர சரஸ்வதி சுவாமிகளின் 80-வது பிறந்தநாள் விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருதக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடை பெற்ற விழாவில் ஸ்ரீ ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகளின், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பங்கேற்றனர். அவர்களுக்கு கல்லூரி சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப் பட்டது. தொடர்ந்து, வேத கோஷங் கள் முழங்க, ஸ்ரீ ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகளக்கு மலர் கிரீடம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பேசும் போது, ‘‘நிறைய நல்லது செய்ய வேண்டும். உண்மையை பேச வேண்டும். திருடக்கூடாது. ராமனைப் போல நல்வழியில் நடந்து, நல்லதை செய்து, நல்ல பலனை அடைய வேண்டும். கிருஷ்ணனைப் போல நல்ல காரியங்கள் செய்து, நல்லவனாக வாழ்ந்துகாட்ட வேண்டும். நல்ல செயல்கள்தான் வாழ்க்கைக்கு உதவும். அவ்வாறு நடந்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்’’ என்றார்.
சமஸ்கிருத அறிஞர் கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகள், கல்லூரி முதல்வர் தேவி பிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
via ஸ்ரீஜெயேந்திரரின் 80-வது பிறந்தநாள் விழா – தி இந்து.
