Never seen this before….Blessed are those who have seen all three Periyavas together.
Jaya Jaya Sankara Hara Hara Sankara
நான் ஒருமுறை (1984-1990 ஞாபகம் இல்லை!) ஸ்ரீ மடம் சென்றிருந்தேன் .. கூடட்டம் அதிகம் இல்லை சுமார் 20-25 பேர் மட்டும் தான் ..அமைதியான ஓர் காலை நேரம் ..எல்லாரும் அந்த பரமேஸ்வரனை கண் குளிர தரிசித்து கொண்டிருந்தனர் ..
அங்கே .. பால பெரியவாள் வந்தார்கள் … நின்றவரை அமர சொன்னார்கள் பெரியவா .. குரு பக்தியுடன் வாய் பொத்தி ..பெரியவாளிடம் உபதேசம் பெற்றார்கள் ..
பின் மீண்டும் வந்திருந்தவர்களை அனைவரையம் தெய்வம் உற்று நோக்கியது ! வட்கிலிருந்து ஒரு தம்பதி தன் குடும்பத்துடன் தட்டில் நிறைய வகை வகையான பழங்கள், பூ மற்றும் ஓரு திருமண அழைபிதழ் முதலியவற்றை பெரியவா முன் வைத்தது பணிவோடு இருகரம் கூப்பி வணகினர்..
ஸ்ரீ மட சிப்பந்தி அந்த குடும்பம் யார், எங்கிருந்து வந்தார்கள் ..என்று உரக்க பெரியவளிடம் கூறினார் ..
சிறிது நேரத்துக்கு பின் ..புன் முறுவலோடு ..பெரியவா ..அவர்களிடம் (அவரது உறவினர் அல்லது அவர்களது வீட்டின் அருகில் அவரிகளுக்கு அறிந்த) ஒரு குடுமபத்தின் பெயரை சொல்லி எப்படி இருக்கிறார் .. என்று வாஞ்சையுடன் விசாரித்தார் மஹா பெரியவா.. அந்த குடும்பத்தில் இருந்த நிறைய பெயர்களை ஞாபகமாக ஒவ்வொன்றாக விசாரித்தார் ! ..
வந்த தம்பதியனருக்கு ஒரே ஆச்சரியம்.. எப்படி மஹா பெரியவாளுக்கு மற்ற குடும்பத்தாரை தெரியம் ..அதுவும் எல்லோர் பெயரையும் மறக்காமல் கேட்கிறாரே என்று .. அதையும் அறிந்துஅறிந்து கொண்ட அந்த பரபிரம்மம் ..
என்ன எனக்கு எப்பிடி அவாளை எல்லாம் தெரியும்னு நினைக்கிறேளா? நான் சுமாரா 40 வருஷம் முன்னாடி அவாத்துக்கு போயிருந்தேன் ..அவாத்துல எனக்கு பாத பூஜை பண்ணி மரியாதை பண்ண்ணினா ..என்று புன்முறுவல் மாறாது மஹா பெரியவா முடித்தார்கள் !
கூத்தாடினர் அனைவரும் பெரியவளின் ஞாபக சக்தியை மெய்சிலிர்த்து போனார்கள் ! பிரமித்தார்கள் ..நானும் தான்..
பின் அந்த தம்பதியினரை அருட் கரம் காட்டி அவர்களையும் அவர்களின் திருமண அழைபிதழையும் ஆசிர்வதித்து ..அருளினார் மகாபெரியவா!
