Thanks to Satsan for FB post
ஹரிஹர பஞ்சாக்ஷரம்:- பொதுவாக பஞ்சாக்ஷரம் என்றால் அது “நம: சிவாய” என்னும் சிவபஞ்சாக்ஷரி மந்திரம் தான் நமக்குத் தெரியும்.ஆனால் நாராயண உபநிஷதத்தில் ஸ்ரீநாதனான நாராயணனுக்கும் பஞ்சாக்ஷரி மந்திரம் கூறப்பட்டுள்ளது. “नारायणाय इथि पञ्चाक्षराणी” — नारायण उपनिषदां !! “நாராயணாய இதி பஞ்சாக்ஷராணி” –நாராயண உபநிஷத்.
பொருள்:- “நாராயணாய” என்னும் ஐந்தெழுத்து. பஞ்சாக்ஷர ஜபம் என்பது இன்றி அமையாத ஒன்று.அது சிவனுடயாதாக இருந்தாலும் சரி, திருமாளுடயதாக இருந்தாலும் சரி நாமஜபம் நன்றே பயக்கும். இருவரதையும் “சிவாவிஷ்ணு” பேதம் இன்றி ஒன்றாக சேர்த்து, “நம: சிவாய ! நாராயணாய !!” என்று ஜபம் செய்தால் மிகுந்த பலன் கிட்டும்.
“சிவாய விஷ்ணுரூபாய சிவரூபாய விஷ்ணவே ! சிவஸ்ச ஹ்ருதயம் விஷ்ணு: விஷ்ணுஸ்ச ஹ்ருதயம் சிவ: !!”
பொருள்:- சிவபிரான் விஷ்ணுரூபத்திலும், விஷ்ணு சிவனின் ரூபத்திலும் உள்ளர்.விஷ்ணுவின் இதயத்துள் சிவன் மட்டுமே உள்ளார்.சிவனின் இதயத்திலும் திருமால் விஷ்ணு மட்டுமே உள்ளர்.” என்பது நம் சான்றோர் வாக்கு. ஆதலால் சைவ வைணவ பிரிவின்றி, சிவாவிஷ்ணு த்வேஷமின்றி ஹரிஹரனை வணங்குவோம்.
“நம: சிவாய ! நாராயணாய !!”
