திருமலை திருப்பதியில் திங்கட்கிழமை இரவு காஞ்சி சங்கரமட மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஏழுமலையானுக்கு தங்க சங்கை நன்கொடையாக வழங்கினார்.
திங்கட்கிழமை ஏழுமலையானை தரிசிக்க வந்த ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்வாமி வழிபாட்டிற்கு பின் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி. சுப்பிரமணியத்திடம் இரவு 30 லட்சம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட சங்கை நன்கொடையாக வழங்கினார். பெற்றுக்கொண்ட செயல் அதிகாரி ஏழுமலையான் அபிஷேகத்தின் போது இது உபயோகபடுத்திக் கொள்வதாக கூறினார். உடன் தேவஸ்தான உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Jagadguru HH Jayendra Saraswathi Swamigal, on behalf of Kanchi mutt, donated a Rs 30 Lakhs worth of golden conch to Tirupathi devasthanam yesterday.
(News courtesy: Dinamani)
