श्रीशिवानन्दलहरी -२२
प्रलोभाद्यैरर्थाहरणपरतन्त्रो धनिगृहे
प्रवेशोद्युक्तः सन् भ्रमति बहुधा तस्करपते।
इमं चेतश्चोरं कथमिह सहे शङ्कर विभो
तवाधीनं कृत्वा मयि निरपराधे कुरु कृपाम् ॥ २२ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -22
ப்ரலோபா⁴த்³யை, ரர்தா²ஹரண பரதந்த்ரோ த⁴நிக்³ருʼஹே,
ப்ரவேஶோத்³யுக்தஸ்ஸந் ப்⁴ரமதி ப³ஹுதா⁴ தஸ்கரபதே।
இமம்ʼ சேதஶ்ச்சோரம்ʼ கத²மிஹ ஸஹே ஶங்கர விபோ⁴
தவாதீ⁴நம்ʼ க்ருʼத்வா மயி நிரபராதே⁴ குரு க்ருʼபாம் ॥ (22)
अन्वय:
तस्कर-पते! शंकर! विभो! प्रलोभ+आद्यैः अर्थ+आहरण-परतन्त्रः (सन्) (चेत:-चोरः) धनि-गृहे प्रवेश+उद्युक्तः सन् बहुधा भ्रमति। इमं चेतः+चोरं कथं सहे। इह तव+अधीनं कृत्वा निरपराधे मयि कृपां कुरु।
Audio
संस्कृतटीका
प्रयत्नविशेषेण ब्रह्मान्वेषणे घटितमपि चोरवत् प्रलोभादिना अर्थाहरणपरतन्त्रं चित्तमसहमानः तद्दोषपरिहाराय तस्य शिवायत्ततां प्रार्थयते- प्रलोभेति। भोः तस्करपते! तच्चौर्यं कुर्वन्तीति तस्कराः। “तद्बृहतोरि”ति सुट् तलोपश्च। तेषां पतिः कर्मविशेषेण प्रवर्तको निवर्तकश्च तादृश। शङ्कर! भक्तसुखदायक! भो विभो! प्रलोभाद्यैः प्रलोभनं धनिकस्य मिथ्यालाभप्रदर्शनेन तस्य मनोवशीकरणम् तदेवाद्यं येषां तैः दुरुपायैः। धनिके प्रमत्ते तदर्थग्रहणाभिप्रायः, ऋणरूपेण धनिकदत्तस्य धनस्य प्रत्यर्पणावसरे तद्दानापलापः, एवमादय उपायाः बहुवचनेनाकृष्यन्ते। अर्थाहरणपरतन्त्रः अर्थ: धनम् तस्याहरणं आकर्षणम् तस्मिन् परतन्त्रः आसक्तः, तद्विषये जागरूक इत्यर्थः। अयं चेतश्चोरः चेतश्चित्तमेव चोरस्तस्करः स धनिगृहे धनमस्यास्तीति धनी तस्य गृहं गेहं तस्मिन् प्रवेशोद्युक्तः सन् प्रवेशोऽन्तर्गृहगमनं तदर्थमुद्युक्तः सन् उद्योगी सन् प्रयत्नं कुर्वन्नित्यर्थः। बहुधा अनेकधा प्रकारार्थे धा। भ्रमति भ्राम्यति। इमम् एतादृशपापगुणविशिष्टं चेतश्चोरं चित्ततस्करं, अहमित्यध्याहार्यम् कथं सहे क्षमे ? इहेदानीं तव ते अधीनं कृत्वा विधाय निरपराधे निर्गतः अपराधः आगः यस्मात् तस्मिन् मयि, मनोभिन्नत्वात् तस्य निरपराधत्वमिति भावः। कृपां दयां कुरुष्व ॥२२॥
அவதாரிகை
என் மனமாகிய திருடனை, உன்வசமாக்கிக்கொண்டு என்னைக் காத்தருளவேண்டுமென வேண்டுகிறார்.
பதவுரை – தமிழ்
शंकर – ஶங்கர – ஹே சங்கரரே! மங்களத்தைச் செய்பவரே!
विभो – விபோ⁴ – எங்கும் நிறைந்தவரே!
तस्करपते – தஸ்கரபதே – திருடர்களுக்குத் தலைவரே!
प्रलोभाद्यैः- ப்ரலோபா⁴த்³யை꞉ – லோபம் (பேராசை), மோகம் முதலான குணங்களால் தூண்டப் பெற்று
अर्थाहरणपरतन्त्र – அர்தா²ஹரணபரதந்த்ர – பிறர்களது திரவியத்தை அபகரிப்பதில் ஈடுபடும் (எனது சித்தம் என்னும் திருடன்)
धनिगृहे – த⁴நிக்³ருʼஹே – தனவான்களது வீடுகளில்
प्रवेशोद्युक्तस्सन् – ப்ரவேஶோத்³யுக்தஸ்ஸன் – புகுவதற்கே முயற்சிப்பதிலும்
बहुधा – ப³ஹுதா⁴ – பலவிதமாக
भ्रमति – ப்⁴ரமதி – சுற்றுகிறான்.
इमं चेतश्चोरम् – இமம்ʼ சேதஶ்சோரம் – இச்சித்தமெனும் திருடனை (அவனுடன் இங்கே என் சரீரத்திற்குள் ஸதா சேர்ந்திருக்க)
इह – இஹ – இப்போது
कथम् – கத²ம் – எப்படி
सहे – ஸஹே – பொறுத்துக்கொள்வேன்? (பொறுக்க முடியாது)
तवाधीनं कृत्वा – தவாதீ⁴நம்ʼ க்ருʼத்வா – (அதனால் அத்திருடனை) உமது வசமாக்கி
निरपराधे – நிரபராதே⁴ – நிரபராதியான
मयि – மயி – என்னிடம் (தாங்கள்)
कृपां कुरु – க்ருʼபாம்ʼ குரு – தயவு செய்தருள்வீர்.
தாத்பர்யம்
ஏ பரமசிவமே! நிதமும் தனிகர்களுடைய பொருள்களை நாடி கொள்ளையடிக்க விரும்பும் சோரர்களைப் போல, எனது மனமாகிய கள்வனும், உலோபாதி அறுவகை குணங்களாகிய துர்மார்க்கங்களில் திரிந்து அலையும் செயலை இனிச் சிறிதேனும் தரியேன். ஆகவே, இனியேனும் என்பால் தயை செய்து, அத்தீயொழுக்கங்களைத் தவிர்த்து, நற்குணம் பலவும் நாடிக் கைப்பற்றிக் கடைத்தேறக் கருணை புரிவாய் (என்பதாம்).
தெளிவுரை
திருடர்களுக்கும் தலைவனாக விளங்குகின்றவரே! ஸர்வ வ்யாபியான ஹே சங்கர! பிறரை ஏமாற்றி எவ்விதத்திலாவது பிறர் திரவியங்களை தனதாக்கிக் கொள்ள வேண்டுமென்ற பேராசையால் அதில் ஈடுப்பட்டிருக்கின்ற திருடனான எனது மனம், பெரும் செல்வந்தர்களுடைய வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பதில் ஜாகரூகனாக முயன்று கொண்டிருக்கிறது. பலவிதமாகச் சுற்றித் திரிகின்றதும் பாபங்களைச் செய்வதிலேயே ஈடுபட்ட குணங்களை உடையதுமான இந்த என் மனம் என்ற கள்வனை நான் எவ்விதம் பொறுத்துக் கொண்டிருப்பேன். இப்பொழுதே இவனை உனது அதீனமாக செய்து விட்டு, கள்ளங்கபடமற்ற என்னிடம் கருணை புரி.
கருத்துரை
எல்லாவற்றிற்கும் தலைவரான பரமேச்வரன் திருடர்களுக்கும் தலைவராவார். அவருடைய அருள் இருந்தால் தான் மனதாகிற திருடனுடைய உபத்திரவங்கள் நீங்குமாதலால் “தஸ்கரபதே” என்று இங்கு பரமேச்வரனை ஸம்போதனம் செய்கிறார். மனது ஒரு திருடனைப்போல் பலவித வஞ்சனைகளைச் செய்து பிறருடைய பொருளைக் கொள்ளையடிப்பதில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறது. அதை என்னால் பொறுக்க முடியவே இல்லை. ஆதலால் ஏ பரமேச்வரா! அந்த மனத்தைத் தங்களுக்கு ஆதீனமாகச் செய்துகொண்டு எவ்வித குற்றமுமற்ற என்னிடம் கருணை புரியுங்கள் – என்பது வாச்யமாகத்(literal) தோன்றும் தாத்பர்யம். ஆனால், तच्चौर्यं कुर्वन्तीति तस्कराः। तेषां पतिः कर्मविशेषेण प्रवर्तको निवर्तकश्च तादृश तस्करपते। – என்ற வ்யாக்யானத்தை அநுஸரித்து, तत् (தத்) என்ற பதார்த்தத்தை மறைத்து அதனுடைய ஸ்வரூப லக்ஷணத்தை சொல்லாமல் இருக்கிற திருடர்களை உன் அதீனத்தில் வைத்துக்கொண்டிருக்கிறாய். அதேசமயத்தில், உன் பக்தர்களுடைய விஷயத்தில் तत् (தத்) பதார்த்தத்தின் ஸ்வரூப லக்ஷணத்தை உன் கருணையினால் ஸ்புரிக்கும்படி கடாக்ஷிக்கிறாய். இவ்விதம் உன்னிடம் ஞானத்தை உபதேசம் செய்யும் (ப்ரவர்த்தக) சக்தி விசேஷமும், அதே சமயத்தில் ஞானத்தை பாஸிக்கமால் செய்யும் (நிவர்த்தக) சக்தி விசேஷமும் இருந்து வருகிறதே! இவ்வித மஹிமையுள்ள நீ என்னிடத்தில் கருணைவைத்து என் மனதாகிய திருடனை உன் அதீனத்தில் வைத்துக்கொள் என்று உன்னை யாசிக்கிறேன்.
मयि निरपराधे -மயி நிரபராதே⁴ என்பதற்கு निरपराधे निर्गतः अपराधः आगः यस्मात् तस्मिन् मयि, मनोभिन्नत्वात् तस्य निरपराधत्वमिति भावः। என்ற வ்யாக்யானத்தை அநுஸரித்து, மனது ஒரு காலத்திலும் ஆத்மாவாகாது; அது இந்திரிங்களுடைய ஸ்தானத்தில்தான் இருந்துவருகிறது. ஸர்வ காரியங்களுக்கும் மூலகாரணம் மனது தான். ஜீவன் மனஸ்ஸம்பந்தமின்றி ஸ்வயம் எவ்வித குற்றங்களையும் செய்வதில்லை; மனது அடங்கினால் ஜீவன் முக்திபெறக்கூடும் – என்று தெரியவருகிறது. அதனால் இந்த ஜீவனை இங்கு मयि – மயி என்ற பதத்தாலும், அதனுடைய ஸ்வரூப லக்ஷணத்தை அநுசரித்து அதை निरपराधे – நிரபராதே⁴ என்ற பதத்தினாலும் பகவத்பாதாள் பரமேச்வரனுடைய கிருபையை ப்ரார்த்திக்கின்றார்கள். ஜீவ ப்ருஹ்ம ஐக்கியத்தை அநுசந்தானம் செய்துகொண்டு, ஆச்சர்யபக்தியோடு பரமேச்வரனுடைய சந்நிதியில் இந்த ச்லோகத்தைச் சொல்லி நமஸ்கரிப்பவர்கள் காலக்கிரமத்தில் அஹம் ப்ரஹ்மாஸ்மி என்ற திவ்ய அனுபவநிலையை அடைவார்கள் என்பதில் இந்த ச்லோகமே ப்ரமாணமாகும்.
हिन्दी
तस्करपते = हे चोरों के अध्यक्ष !,
शंकर = हे शंकर !,
विभो = हे विभु !,
इमम् = इस,
चेतश्चोरम् = मन रूप चोर को,
इह = इस ( साधक) जीवन में ,
कथम् = कैसे,
सहे = सहन करूँ?
( यह ) प्रलोभाद्यैः = प्रलोभ आदि द्वारा,
अर्थाहरणपरतन्त्रः = धन इकट्टा करने के ( मानो ) पराधीन है (व),
धनिगृहे = धनिकों के घरों मे,
प्रेवेशोद्युक्तः”= घुसने की कोशिश करते,
सन् = हए.
बहुधा= तरह-तरह से,
भ्रमति = घूमता रहता है ।
(इसे आप) तव = अपने,
अधीनम् = नियन्त्रण में,
कृत्त्वा = करके,
मयि = मुझ,
निरपराधे = निरपराध पर,
कृपाम् = कृपा,
कुरु = कीजिए ।।
Dr.T.M.P.Mahadevan
O Sankara! O Arch-Thief! O all-pervading One! This thief of a mind roams about widely, having fallen a victim to th ebusiness of amassing wealth through greed etc., and making efforts to break into the ouses of the rich. How can I suffer him? Having brought him undr Thy control, please bestow grace on me who am innocent!
The mind is like a thief, intent always on practicing deceit and fraud. Everyone of the mental modes may be compared to a thief; attachments, aversions, avarice, anger, etc., are thiefs in the sense that they rob one of the discriminating wisdom.
Who can put a curb on the mind except the Lord? He is the lord of thieves, (1) as He is the lord of the univers, and (2) as He steals the hearts of the devotees. The Veda offers obeisance to Rudra-Siva as the chief of thieves (taskaranam pataye namah).
Swami Tapasyananda
O bestower of good! Thou all-pervading One! Prompted by greed and other evil qualities, and being enslaved by the tendency to misappropriate wealth, the thief of my mind is roaming about extensively, bent on getting entrance into the houses of the rich. How can I suffer him to do so, O Lord of Thieves? Deign to bring him under Thy control and bestow Thy grace on me, who am innocent of all guilt.
(The forces of Avidya are the thieves that deprive the Atman of its spiritual glory. The Supreme Being is the Lord of Maya, of which Avidya (ignorance) is an aspect. As the Master of Maya, He is called the Lord of Thieves. In the Veda, Rudra-Siva is addressed as the Master of Thieves – taskaranam pataye namah).
From the Web
प्रलोभाध्यै: अर्थाहरणपरतन्त्रो धनिगृहे
प्रवेशोध्युक्त: सन्भ्रमति बहुधा तस्करपते ।
इमं चेतश्चोरं कथमिह सहे शंकर विभो
तवाधीनं कृत्वा मयि निरपराधे कुरु कृपाम् ॥ २२ ॥
हे शंकर – Hey, who does all the mangalams!
हे तस्करपते – Hey, leader of all thieves!
हे विभो – Hey, Sarvavyaapi!
प्रलोभाध्यै: – greed etc..
अर्थाहरणपरतन्त्र: – mind that is entirely engaged ( पराधीनन् ) in gathering (other’s) money;
धनिगृहे – in rich people’s houses;
प्रवेशोध्युक्त: सन् – readily preparing to enter those houses (उद्युक्तन् );
बहुधा – in many different ways;
भ्रमति – roaming around;
इमं – this;
चेतश्चोरं – this mind that is the thief;
इह – now (in this body);
कथं – How;
सहे – how can I tolerate?
अतः – therefore (this thief);
तव – your;
अधीनं – subordinate;
कृत्वा – doing so;
निरपराधे – the faultless one;
मयि – in me;
कृपाम् – kindly;
कुरु – please do.
Commentary
Aum
The praaNis who have got the most difficult to attain human bodies, instead of indulging in the bajanam of ParameswraaL are wasting their time in pursuit of money. In fact this greed is more in robbing the wealth of others than gathering them from nature by dint of sheer karma. Thus they have become slaves to money and are roaming around intent on breaking into others’ houses. Besides, with increasing greed they go to the rich guys and equally inciting their greed by telling them that they can multiply their money and thus take away their money. In some cases they talk falsehood to please the prabhus and even be slaves to them just for this money. Thus impelled by this लोभ they lose their विवेकम् as to what is the right thing to do and how to avoid forbidden acts. Therefore, hey! Parameswara! Are you not the chief of all thieves in the entire world? How can I tolerate this सञ्चल mind that constantly drags me around making me an अस्वाधीनन्? Therefore can you quell this mind and make it your subordinate and save me who is a faultless one (निरपराधि)?
What is seen above is the literal meaning (वाच्यार्तम् ) but those who have turned their minds inwards gleam it (स्फुरति) in a different way. Let us understand that now. That is:
Hey! Parameswara!
तच्चोर्यं कुर्वन्तीति तस्कराः तेषां पतिः तस्करपतिः
therefore, aren’t you a तस्करपति? That padaartham तत् indicates Brahmatatvam. So तस्करपतिः means the leader of those who steal Brahmatatvam. There are prattlers who do not know the exact meaning of तत्. Of these some say there is Easwara and others say there is no Easwara. Some say this body is the Aatma and others say there are very many differences in the Aatma. Some say that jagat is Brahman and some others say that Brahmam is saguNan or nirguNan. Some say there is no praamaanyam for Veda and some others say that Veda is pourusham. Yet some say it is soonyam. They are very much anxious to set up religions on their above contentions. The basic reason for their anxiety is their greed for money. These thieves wont be afraid to call every lie as satyam. In their greed for money they are ready to do any sin. Moreover these thieves go to rich people’s houses ad pretend like gnaanis, act as if they have no desire for money and misrepresent smriti and sruti that will please them – all these only to rob wealth from them.
Because of their लोभम् people lose their विवेकम् . कामं , क्रोधमं and लोभम् are the three enemies that live with the man. In Bhaagavatham it is said:
कामस्यान्तं हि क्षुत्तृड्भ्यां क्रोधस्यैतत्फलोदयात् ।
जनो याति न लोभस्य जित्वा भुक्त्वा दिशो भुवः ॥२०॥
When a desire is fulfilled the virulence of kaamam slows down. When obstacles are removed and the objective is attained, kObam ebbs down. But even if the entire world has been won over, lObam only increases in its intensity. Such is its wickedness.
So, Parameswara! Of all the janmaas that a praaNi would take, human janma is the rarest. Instead of using this janma to cross the ocean of samsaara, praaNis thus roam around in greed of wealth. What a waste of precious life! In this endeavour to gather wealth, their preoccupation has always been to steal others’ wealth by hook or by crook. This includes even break and enter, cheating etc.
Hey! Sarveswara! the root cause for all these is this mind that is the thief, is it not? Actually this मनस् is a sinner responsible for आत्महत्ति. This mind of mine which is the worst paapi is in my body and how can I tolerate this? Am I not becoming responsible for the paapas this मनस् is committing? Not only that, in the matter of doing smaraNam of your paadaabjam he has always acted as my enemy. Due to my poorvapuNya whenever I get the thought that I should experience your Aatma, this mind immediately steals away that thought.
How can I spend my lifetime with this thief that is my mind. With him I have wasted away my life without doing smaraNam of you. I cannot stand this mind even for a moment. With him my entire life will be drained away. Therefore, hey! Mangalam giving ParamporuLe!
तच्चौर्यं कुर्वन्तीति तस्कराः तेषां पतिः तस्करपतिः कर्मविशेषणेन प्रवर्तकोनिवर्तकश्च तादृश तस्करपते | is the etymology (व्युत्पत्ति ) . Hey! PrabhO! you hid those who refuse to reveal the swaroopa lakshaNam of the meaning of तत् and keep them subordinated to you. However in the matter of your bhaktas you definitely reveal the swaroopa lakshaNam of the meaning of तत् and give out your kaaruNyam. This is so because with you there is this Shakti that give out the upadesa of ज्ञान as also to hide from being known to others.
Thus as per the saastra सर्वस्य चाहं ह्रुदिसंनिविष्ठोमत्त: स्मृतिः ग्नानमयोहनं च you have in you two distinct Shakti (शक्ति विशेषण) called प्रवर्तकं (causing) and निवृतकं (ceasing). This is your great mahimaa. I plead with you to show kindness to me and keep this thief of my mind with you. I beg of you!
Expecting the objection of Bhagavan that went such as “you have in all these years have refused to accept jeeva-Brahma-aikyasaakshaatkaaram instead imagined all kinds of wayward ideas as true, but all on a sudden, today you come to me saying that all that you have done so far was wrong and that you are surrendering to me . How can I accept this and save you?”, Sri Bhagavat PaadhaaL expresses his determination as मयि निरपराधे. That is निरपराधे निर्गतः अपराध: यस्मात् तस्मिन् मयि मनो भिन्नत्वात् तस्य निरपराधत्वं इति भावः || meaning neither sthoola sareeram, nor indriyas, nor praaNa, nor mind can ever be Aatma. Therefore the mind can only be considered as an indriya. Therefore कामः सकल्यो विचिकित्सा श्रद्दाSश्रद्दा धृतिरधृतिह्रीर्धार्भीरित्येतत्सर्वं मन एव – the root cause of all karmas happen to be only the mind. Just like superimposing (आरोपण) the snake on a rope the ignorant ones superimpose the kaaryams of the mind on the Aatma. But in reality Aatma remains a saakshi to these and keeps shining. In Taittiriya Aaranyaka it is said:
कामोऽकार्षीन्नमो नमः । कामोऽकार्शीत्कामः करोति नाहंकरोमि कामः कर्ता नाहं कर्ता कामः कारयिता नाहं कारयिता एष ते कामकामाय स्वाहा ॥
मन्युरकार्षीन्नमो नमः । मन्युरकार्षीन्मन्युः करोति नाहं करोमि मन्युः कर्ता नाहं कर्ता मन्युः कारयिता नाहं कारयिता एष ते मन्यो मन्यवे स्वाहा॥
In this mantra of Maha Narayanopanishad, the suddha jeeva is declared as ‘nirvikaaran’ and ‘nishkriyan’ and that very same is indicated by AachaaryaaL as मयि and its Swaroopa LakshaNam is indicated by निरपराधे.
O! Parameswara! मयि निरपराधे i.e. I am faultless because nirmalam is my nature. The fault lies with my mind for it has stolen my Brahmaswaroopam. Sri Rudhram call you as ‘ स्ते॒नानां॒ पत॑ये॒’ (chief of all thieves) and ‘तस्क॑राणां॒ पत॑ये॒’ (chief of all bandits). I therefore have to make a request to you. Please as the chief of the thieves, could you please remove the mind who is the stealer of my swaroopam?
உள்ளங்கவர் கள்வன்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே.
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
Aum Namasivaaya!

