Sage of Kanchi

கல்வியா செல்வமா இரண்டுமா? Gleanings from the writings of Sri Ra.Ganapathy Anna – Part 2

காமாக்ஷியின் உக்ரகோபம் ஓர் இடைக்காலத்தே அவைதிகப் புற மதத்தாரின் வழிபட்டால் ஏற்பட்டதுதான். அதற்கு முன் அவள் கருணைத் தாயாகத்தான் இருந்தாள். கண்ணோக்கால் மக்கள் விருப்பம் அனைத்தும் நிறைவேற்றுவதாலேயே ‘காமாக்ஷி’ என்ற நாமம் பெற்றவள் வேறெப்படி இருந்திருப்பாள்?

அப் பூர்வகாலத்தில் காஞ்சியைச் சூழ்ந்த தொண்டை மண்டலத்தில் பஞ்சம் மக்களை வருத்திற்று. மக்களின் பாபம் தான் இப் பஞ்சத்திற்குக் காரணம் – அந்தண மாதின் பாபமே அவளுடைய வறுமைக்குக் காரணமானதுபோல. அப்படியிருந்தும் அன்னையரான லக்ஷ்மியும் காமாக்ஷியும் ஓர் அளவுக்கு மேல் மக்களின் துயரம் சென்றபோது கர்மத்தை மன்னித்துக் கருணை காட்டினர். அந்தண மாது ஒருத்திக்கு மட்டும் லக்ஷ்மி கனகதாரை வர்ஷித்தாள் எனில் காமாட்சியோ தொண்டை மண்டலம் முழுதுமே அப்பகுதி மக்களுக்கென பொன்மழை பொழிந்தாள்.

இதற்கு மேலும் ஒன்று காமாக்ஷியின் பெருமையைத் தெரிவிப்பதாக எடுத்துக்காட்டினார் நமது ஆச்சாரியப் பெருமான். பொன்னை மாத்திரம் கொடுத்தால் போதாது; அது மீண்டும் மக்களைப்  பாபத்தில் தூண்டினாலும் தூண்டும் [தைத்திரீய உபநிஷத்தில் முதலில் அறிவை வேண்டி, ‘அதன்பின்’ பொருட்செல்வம் அருள வேண்டியிருப்பதையும், அதற்குப் பொன் மழை பொழிவித்த ஆசார்யாளே தமது பாஷ்யத்தில் ‘அறிவற்றவரிடம் பொருள் சேர்ந்தால் அநர்த்தமேயாகும்’ என்று விளக்கம் தந்திருப்பதையும் ஸ்ரீ மஹா பெரியவாள் எடுத்துக்காட்டுவார்.] என்று காமாக்ஷியன்னை எண்ணி இயற்கையாகவே கோணல் வழியில் செல்லும் மக்களின் பாபப் போக்கையே நீக்கி, ஞானச் செல்வமான ‘ப்ராதிப ஸ்ரீ’யை அவர்களுக்கு வளப்பமுடன் அளித்து அதன் பின்னரே தொண்டை மண்டலம் முழுதும் கனகதாரை வர்ஷித்தாளாம்! பொன்மழை போலவே இந்த அறிவுக்கொடையையும், விடாமற் பெய்யும் பெருமழையாகப் பெய்தாளாம் – அலுப்புச் சலிப்பு இல்லாமல் பெய்தாளாம்!

இவ்வபூர்வ விருத்தாந்தத்தைக் காமாக்ஷி மீது ஸ்ரீ மூக கவி பாடிய ஐநூறு அமுதப் பாக்கள் கொண்ட ‘மூக பஞ்சசதீ’யின் ஆதாரத்திலேயே கூறிய நமது ஸ்ரீசரணர் அந்த ச்லோகத்தையும் மதுரமாக ஓதினார்.

   பொருட்ச்செல்வம், அறிவுச் செல்வம் இரண்டும் பெறப் பாராயணம் செய்யவேண்டிய ச்லோகம் இது என்று ஸ்ரீசரணாள் கூறுவார்;

கண்டீக்ருத்ய ப்ரக்ருதி குடிலம் கல்மஷம் பிராதிபஸ்ரீ –

கண்டீரத்வம் நிஜபதஜூஷாம் சூன்யதந்த்ரம் திசந்தீ!

துண்டீராக்யே மஹதி விஷயே ஸ்வர்ணவ்ருஷ்டி – ப்ரதாத்ரீ

சண்டீ தேவீ கலயதி ரதிம் சந்த்ரசூடால சூடே //

खण्डीकृत्य प्रकृतिकुटिलं कल्मषं प्रातिभश्री

शुण्डीरत्वं निजपदजुषां शून्यतन्द्रं दिशन्ती।

तुण्डीराख्ये महति विषये स्वर्णवृष्टिप्रदात्री

चण्डी देवी कलयति रतिं चन्द्रचूडालचूडे॥ ७४ ॥

(தனது திருவடியை அண்டிய மக்களின் இயற்கையிலேயே வக்கிரமான பாபப் போக்கைக் கண்டனம் செய்து அறிவுச் செல்வத்தின் நிறைவைச் சோம்பலின்றி வழங்கிக்கொண்டு ‘துண்டீரம்’ என்னும் தொண்டை மண்டலமான மஹிமை வாய்ந்த நாட்டில் பொன்மழை பொழியும் சண்டிகா பரமேச்வரி சந்திர மௌளீச்வரனிடம் ப்ரேமை புரிகிறாள்.)

– “மூக பஞ்சசதீ – ஸ்துதி சதகம் – பாடல் – 74”

**********

Thus continues Sri Ra.Ganapathy Anna’s writing in his book “கருணைக் காஞ்சி கனகதாரை”.  The above paragraphs appears in the Foreword of the above book. Takeaway from the paragraphs is MookaPanchasati – Stuti Satakam – 74, which Sri Mahaperiyava often used to quote – for gaining Erudition (கல்வி) and Wealth (செல்வம்).

Ra.Ganapathy Anna’s work fall under the category of ‘untranslatables’. The originality, pun, mischief and humor that form the bedrock of his Tamil writing are hard to be translated.

I also read from Ganapathisubramanian the following in the context of Mooka Panchasati:

Such was His (Sri Mahaperiyava’s) devotion and affection for Mooka panchashati. In a Srimukham to Mooka pancha shathi book, Mahaperiyava has said – This stotram is Ambal’s own words that entered Mooka kavi and has reached us to get us Her grace.” அம்பாள் வாக்கிலிருந்து மூக கவி வாக்கிற்கும் மூக கவி வாக்கிலிருந்து நமக்கும் அனுக்ரஹம் செய்ய வந்திருக்கும் அற்புத ஸ்துதி இது.”

Mahaperiyava has advised those who are looking for a groom / bride to chant the 91st slokam from Arya shatakam, He has recommend 74th slokam from Stuti shatakam for deliverance from poverty, 94th from mandasmitha shatakam for deliverance from health issues and reading the whole stotram 5 times repeatedly to attain gnaanam.

My Sadguru Govinda Damodara Swamigal read it every single day from his tenth year till his last day at the age of 75 and held it as the most important work for Ambaal devotees. Every time Swamigal read it to me, He said – “Kamakshi and Mahaperiyava are one and the same. If you read this stotram you will get Mahaperiyava’s best blessings in both material and spiritual aspects.”

**********

I will conclude this series later, with Part-3 in which we will remember some noble souls who were instrumental in bringing out Ra.Ganapaty anna’s writing to Print.

 

Exit mobile version