
சூதபௌராணிகர் மத்யாஹ்னேச்வரரின் பத்னியும் ஸகலபுவனேச்வரியுமான ஸ்ரீகனகலதாம்பாளின் பூஜாவிதியை நைமிசாரண்ய முனிவர்களக்கு விஷேஷமாகக் கூறி, ஸ்ரீகனகவல்லீச்வரியின் மஹிமையை மேலும் கூறினார்.
ஸரஸ்வதியால் உபாஸிக்கப்பட்டு, ஸ்ரீவாணிக்கு, பிரமதேவனை அடைய அனுக்ரஹித்தவள் ஸ்ரீகனகவல்லி. நாரதர் ப்ரஹ்மவித்யையை உணர பரமேச்வரியை தேவலோக புஷ்பங்களால் ஆராதித்ததால் இவளுக்கு கனகலதை என்று நாமம் ஏற்பட்டது.
ஆதிசக்தி இவள். அனாஹதமான ஹ்ருதய ஸ்தானத்தில் இவளை த்யானிக்க வேண்டும். எட்டு இதழ் உடைய ஹ்ருதயத் தாமரையிலே மத்தியில் ஜ்வாலை நிரம்பியதாக ஒரு த்வாரத்தை சிந்தித்து அதனுள் அனாஹத ஸ்தானத்தில் விளங்குபவளாக ஜ்வாலா நுனியில் ப்ரகாசிப்பவளாக அம்பிகையை த்யானிக்க வேண்டும்.
சேதனா ரூபிணி. பரமேச்வரி. ஸச்சிதாநந்த கலா வடிவினள். ஞானவடிவினள். ஸதாசிவை. அடக்கிய இந்த்ரியங்களை உடையவனால் மட்டுமே ஆராதிக்கத்தக்கவள்.
ஞானிகள் இவளையே சிவம் என்று சொல்கின்றனர். இவளே பிரமதேவன். இவளே விஷ்ணுவும் கூட. அஹோ!! இவளே இந்த்ரனும்!!
இவளே ஸரஸ்வதியும்!! வரங்கொடுக்கும் லக்ஷ்மியும் இவளே!! இவளே ஸஹஸ்ராரத்தில் விளங்கும் சந்த்ரமண்டலம்!!
மனதை அடக்கிய யோகிகளால் மட்டுமே உணரத்தக்கவள். எப்போதும் இருதயத்தில் இருப்பவள். பிரம விஷ்ணுக்கள் வடிவில் விளங்குபவள். மனோவாக்கிற்கு எட்டாதவள்.
ஒருதரம் சிவபுரத்தில் விளங்கும் ஸ்ரீகனகலதாம்பாளை த்யானிப்பவர்க்கு கோடி ஜன்ம பாபம் அழியும். கனகவல்லியின் த்யானம் மனிதர்க்கு ஸகல ஆனந்தத்தையும் செய்விப்பது. தேவர்களுக்கும் கிட்டாதது.
— சிவபுரம் க்ஷேத்ர மாஹாத்ம்யம்
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்