Sage of Kanchi

ஶ்ரீ ராம விஜய உத்ஸவம், ஜனவரி 14th முதல் ஜனவரி 22nd, 2024 வரை

ஶ்ரீ காஞ்சி காமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடத்தின் ஜகத்குரு ஶ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் அயோத்யாவில் அனைத்து தரப்பினரிடையே சுமுகமான தீர்வு ஏற்பட முக்யமான பங்கு வகித்தார். 2020இல் பூமிபூஜையும் அவர் ஜயந்தி அன்றே நிகழ்ந்தது‌

புராண வசனங்களின் படி அன்னை ஶ்ரீ காஞ்சி காமாக்ஷி தசரத மஹாராஜாவின் குலதெய்வம். காஞ்சி காமாக்ஷி அன்னையை தரிசித்து அவர் பெற்ற பேரருளே நாம் அனைவரும் வணங்கும் நம் பேரன்பின்பிற்கும் பக்திக்கும் உரிய ஶ்ரீராம பிரானை நல்கியது.

 

தங்கள் குடும்பத்தில் உள்ள மற்றும் தாங்கள் அறிந்த குழந்தைகள் / யுவா யுவதிகளை ஶ்ரீராம ஸம்பந்தமான தம் படைப்புகளை அனுப்ப வேண்டுகிறோம். படைப்புகள் கட்டுரையாகவோ (தமிழ், ஆங்கிலம், சமஸ்கருதம்) அல்லது வரைபடமாகவோ, அல்லது வேறு வடிவங்களிலோ இருக்கலாம்

இவை பாலஹனுமான் இதழில் வெளியிடப்பட்டு ஜகத்குரு ஶ்ரீ சங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் சரணங்களில் ஸமர்ப்பிக்கப்பட்டு ஸமூஹவலை தளங்களிலும் வெளியிடப்படும்.

படைப்புகளை எப்படி அனுப்பலாம்?

எந்த பாரதீய பாஷையிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்கலாம்.

படைப்புகள் ஜனவரி 14 முதல் 22 ஆம் தேதிக்குள் அனுப்பப்படவேண்டும்.

1. படைப்புகளை balahanuman108@gmail.com என்ற முகவரிக்கு ஈமெய்ல் அனுப்பவும்.

2. வீடியோக்கள் Google drive மூலமாக பகிரப்பட்டு balahanuman108@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்புனர் பெயர், வசிக்கும் இடம், உங்கள் பாடசாலை/ஸத்ஸங்கம்/குருகுலத்தின் பெயருடன் அனுப்பவும்.

எங்களுக்கு இதை அனுப்புவதன் மூலம் கலைநிறை Foundation நிறுவனத்திற்கு இதை ப்ரசுரம் செய்ய அனுமதி அளிக்கிறீர்கள்.

என்னென்ன அனுப்பலாம்?

4. சித்ரங்கள், ராம நாம லிகித ஜபம், ராமமந்திர வரைபடங்கள், கட்டுரை மற்றும் எழுத்துக்கள், ராமாயணத்தில் குறிப்பிட்ட நிகழ்வுகள், ஶ்ரீராமரின் குணநலன்கள்…

5. நீங்கள் பாடிய/ ஶ்லோகம் சொல்லும் வீடியோக்கள்

6. குறிப்பு: படங்கள் வீடியோக்கள் அனுப்பினால்

– குழந்தைகள்/ யுவா யுவதிகள் பாரதீய ஸம்ப்ரதாயமான உடையில் திலகதாரணத்துடன் இருத்தல் வேண்டும்.
– முக்தகேசமாக/ தலை விரி கோலத்தில் இருத்தல் கூடாது.
– படுக்கை அறை மற்றும் நாற்காலிகளில் அமராமல் பூஜை அறையிலோ வேறு இடத்திலோ அமர வேண்டும்‌. சிறுவர் சிறுமியர், யுவா யுவதிகள் மட்டுமே அனுப்பலாம்.

ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!

Exit mobile version