
“ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி” என்ற வரிகளை SPB அவர்களின் குரலில் கேட்டு ஆனந்த படாதவர்கள் உண்டா!
கங்கா தரங்க ரமணீய ஜடாகலாபம்
கௌரி நிரந்தர விபூஷித வாமபாகம் !
நாராயண ப்ரியம் அனங்க மதாபஹாரம்
வாராணஸீ புரபதிம் பஜ விச்வநாதம் !!
போன்ற ஸ்லோகங்கள், அவர் பாடி கேட்டதால், மனதில் பதிந்தன. அபார திறமைகள் இருந்தும், பேரும் புகழும் வந்த பின்னும், பணிவுடனும் பண்புடனும் வாழ்ந்த நல்ல மனிதர். சில மாதங்களுக்கு முன்னர் நெல்லூரில் உள்ள தன் வீட்டை வேத பாடசாலைக்கென்று காஞ்சி மடத்திற்கு தானம் அளித்தார். SPB அவர்களுக்கு அஞ்சலி